நான்
பிராமணன்
இப்படியே
இருந்துவிட்டு
போவதில்
உனக்கு
என்ன கவலை.....
அக்ரஹாரத்து
வீடுகளையெல்லாம்
அழித்தாகி விட்டாலும்
என்னை
அழிக்க இயலாதது
வருத்தம் தானோ
உனக்கு ?
இப்படியே
இருந்துவிட்டு
போவதில்
உனக்கு
என்ன கவலை ?
எழுத்தாளர்களின்
எழுத்துப் பசிக்கு
நானே
இரையாக
மாறிப்போனேன்
இட ஒதுக்கீடில்
இடமில்லாத
பிறவியாய்
நான்......
விடியும் வரை
விளக்கு ஒளியில்
படித்தும்
என் வாழ்க்கை
இருளாகவே......
பரவாயில்லை
இருந்துவிட்டு போகட்டும்.....
கடந்து செல்லும்
ஒவ்வொருவரும்
மிதித்தெழுந்தே
செல்கின்றனர்
பயணத்திற்குரியவன்
படிகட்டுகளாய்......
எத்தனை போயினும்
இன்னும்
வந்து நிற்கிறான்.....
என்
முப்புரிநூலும் சிகையும்
அவனுக்கு
நன்கொடையாய் வேண்டுமாம்........
வளர்க்கப்படும்
வேள்வியில்
என்னையே
தானமாக
தள்ளி விட
யத்தனிக்கிறீர்கள்.....
போனது போகட்டும்
என் ஆகமம்
என்னோடு
உண்டென்றாலும்
காநி நெல்லிற்கும்
உரிமை
உனக்கில்லை
என்கிறாய்........
இவன் செய்வது
அத்தனையும்
சுலப வேலைகள்
என்ற எக்காளம்
என்னிடம்.
கேட்கிறது......
அதிகாலை எழு
ஆகமம் பழகு
ஒரு வேளை
உணவு மட்டுமே
உனக்கு கிடைக்கும்...
வருடத்தில் பாதி
விரதம் அனுசரி...
இருமுறை ஸ்நானமும்
மும்முறை ஸந்தியும்
மரபாக கொள்......
உறவுகளை புறந்தள்ளு.....
சலுகையாக வரும்
சில காசுகளை
பங்கிட்டுக்கொள்ளலாம்......
தயங்காமல்
என்
இனத்திற்குள்
வருகை
தரவும்
இப்படியாகினும்
இங்கு
இடஒதுக்கீடுகள்
ஒழியட்டும்...........
பார்ப்பனன்
என்று ஏளனம்
பேசும்
உன் சமூகம்
நாளை
உன்னையும் பேசட்டும்.....!
🇮🇳🙏🙏