My Authors
Read all threads
*மாங்கல்ய தோஷம் நீக்கும்* " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"

நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும்.

🙏1
முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள்.

🇮🇳2
மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி.

🙏3
இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.

🇮🇳4
வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

🙏5
*கிரக தோஷங்கள் விலக்கும்* " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும்.

🇮🇳6
நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள்

🙏7
இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே.

🇮🇳8
*பெண் பாவம் தீர்க்கும்* " திருவிசநல்லூர் "

திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும்.

🙏9
பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.

🇮🇳10
*தேவாரம் பெற்ற தலங்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44

2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52

3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13

4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02

🙏11
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111

6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28

7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25

மொத்தம் 275

இவற்றுள்

மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25

🇮🇳12
சிவஸ்தலத் தொகுதிகள்

வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்

*அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*

1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது

2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது

3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது

4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது

🙏13
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து

6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது

7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது

8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது

🇮🇳14
*பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*

1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்

2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்

3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்

4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்

5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்

🙏15
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்

7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்

8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்

9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்

🇮🇳16
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்

11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்

12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்

🙏17
*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது

2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது

3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது

4. காசி ---- இறக்க முக்தி தருவது

🇮🇳18
*பஞ்சபூத ஸ்தலங்கள்*

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)

2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)

3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)

4. திருக்காளத்தி ----- வாயு (வளி)

5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)

🙏19
*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*

1. திருவாலங்காடு --- இரத்தின சபை

2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)

3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)

4, திருநெல்வேலி --- தாமிர சபை

5, திருக்குற்றாலம் --- சித்திர சபை

🇮🇳20
*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)

2. திருப்பாதிரிப்புலியூர்

3. ஓமாம்புலியூர்

4. எருக்கத்தம்புலியூர்

5. பெரும்புலியூர்

🙏21
*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

🇮🇳22
1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்

2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்

3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்

4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்

🙏23
5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்

6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்

7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

🇮🇳24
*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்

2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்

3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்

4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்

5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்

🙏25
*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*

1. கச்சி ஏகம்பம்

2. திருக்காளத்திங

3. கோகர்ணம்

4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)

5. திருவைகாவூர்

🇮🇳26
*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*

1. திருவெண்காடு

2. திருவையாறு

3. மயிலாடுதுறை

4. திருவிடை மருதூர்

5. திருச்சாய்க்காடு

6. திருவாஞ்சியம்

🙏27
*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*

1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)

2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).

🇮🇳28
3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்பாக்கம்

4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு

5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி

6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு

7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

🙏29
*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*

1. திருவையாறு

2. திருப்பழனம்

3. திருச்சோற்றுத்துறை

4. திருவேதிகுடி

5. திருக்கண்டியூர்

6. திருப்பூந்துருத்தி

7. திருநெய்த்தானம்

திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

🇮🇳30
*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*

1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்

2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்

3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்

4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்

5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்

🙏31
6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்

7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்

8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்

9. திருப்பழனம் --- கோவிந்தர்

10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்

11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்

12. திருவக்கரை --- அரங்கநாதர்

இதன் தொடர்ச்சி நாளை

🇮🇳🙏🇮🇳
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!