கலித்தொகையைக் காரணம் காட்டி 'தினம்' என்பதை தமிழ்ச் சொல் என்று கூறுவது தவறானது, ஒருபோதும் ஏற்கக்கூடியதல்ல.
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் வடசொல் ஊடுருவி இருந்ததால் வடசொல்லை தமிழ்ச் சொல் என்று எடுத்துக்கொள்ள இயலவேயியலாது.
'தினம்' என்பது #வடசொல்லே தான்!
தொல்காப்பியம் வடசொல்லை தமிழில் மாற்றம் செய்வது (தமிழ்படுத்துவது) குறித்து குறிப்பிடுகிறது.
அவற்றை :
இயற்சொல்,
திரிசொல்,
திசைச்சொல்,
வடசொல்
எனக் கூறுகின்றார்.
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"
(தொல்-சொல் -எச்ச-5)
இது வடசொல்லைத் தமிழ்ப்படுத்தற்குத் தொல்காப்பியர் கூறிய நூற்பாவாகும்.
ஆகவே,தொல்காப்பிய காலத்திலேயே தமிழில் வடசொல் ஊடுருவி இருந்ததை அறியமுடிகிறது.
திருநாவுக்கரசர் தாம் இயற்றிய தேவாரப் பகுதியில்- 4ஆம் திருமுறையின் 6ஆம் பாடலில்-
'சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’
என்கிறார்.
ஆனாலும், இது 'தேவாரப் பாடல்', தமிழ்க்குறவர் நால்வருள் ஒருவரான 'திருநாவுக்கரசர் இயற்றியது ' என்பதற்காகவெல்லாம் அச் சொற்களை தமிழ்ச் சொற்கள் என ஏற்கவே முடியாது.
அதுபோன்றே 150 பாடல்களைக் கொண்ட கலித்தொகையும் ஆகும்.
ஆனால், உலகப் பொதுமறையாம் திருக்குறளில்,
வள்ளுவர் 'நாள்' என்ற சொல்லினை ஒருவகையில் அல்ல பலப்பல வகையில் எடுத்தாண்டிருக்கின்றார்
மணந்தநாள்',
'உற்றநாள்',
'வீழ்நாள்',
'ஒருநாள்',
'வருநாள்',
'எழுநாள்'
'ஒருநாளை',
'நாளென',
'நாடொறும்',
'நாளிழுக்கம்',
'நாளொற்றி'
என்றவாறாகப் பலவகையில்
1.குறட்பால்:அறத்துப்பால்.இயல்:
பாயிரவியல்.அதிகாரம்:அறன் வலியுறுத்தல்.குறள்-38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்.
2.இல்லறவியல்- பொறையுடைமை.குறள்-156:
ஒறுத்தார்க்கு ஒருநாளைஇன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்
நிலையாமை. குறள்-334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்./
4.குறட்பால்:பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை. குறள்-553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
6.குறட்பால்:காமத்துப்பால். இயல்: களவியல். அதிகாரம்: அலரறிவுறுத்தல்.குறள்-1146:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
உற்றநாள் உள்ள உளேன்.
8.இயல்: கற்பியல். அதிகாரம்: உறுப்புநலனழிதல். குறள்-1233:
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
9.இயல்:கற்பியல். அதிகாரம்: அவர்வயின்விதும்பல்.
குறள்-1261:
10.குறள்-1266:
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட.
11.குறள்-1269:
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
ஆனால், வள்ளுவர் பெருந்தகை திருக்குறளில் ஒரேயொரு முறைகூட 'தினம்' என்னும் வடசொல்லை சொல்லவேயில்லை என்பதை அறிக.
தினம்' என்பது #வடசொல் , வடசொல்லே தான்!
'நாள்' என்பதே தமிழ்ச் சொல்லாகும்.
நன்றி, வணக்கம்!