அரசன் கடவுள் போல. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பவன் நற்பயன் பெறுவான்...
ஏற்கனவே பஞ்சாங்கத்தில் தொற்றுநோய் பரவல் பற்றி முன்னோர் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தோம். ஜோதிடர்கள் கிரக நிலைகளின் ஆய்வின்படி, இதுபற்றிச் சில விஷயங்கள் பகிர்ந்துள்ளனர்.
பெயர் சொல்ல விரும்பாத ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, வயதான பெரியவர், astrology subject இல் நம்பெருமாள், வழிமுறை கடைபிடித்து, தகவல் கொடுப்பவர், கணித்து கூறிய தகவல்.
ஏன் ? எதனால் ? எப்படி ?
இதற்கான தீர்வு ?
இப்படி பலகேள்விகள்...
காரணமும், தீர்வும்
அமுதம் பெறுவதற்காக பார் கடலை கடைந்தபோது, கயிறாக பயன்பட்ட வாசுகி என்ற பாம்பு, தன் வலி பொறுக்காது விஷம் கக்கிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் !
ஆம் நீச குணமுடைய விஷத்தை நம் ஈசன் பருகிய தருணம் திருவாதிரை நட்சத்திரம் !
அன்று வாசுகி கக்கிய அதே நட்சத்திரத்தில், அரவம் ராகு தற்போது அமர்ந்திருந்து
இதற்கான முதல் முடிச்சு எப்பொழுது விழுந்தது ?
11.09.2019 அன்று அசுரன் ராகு திருவாதிரையில் நுழைகிறான். அன்று ராகுவிற்கு ஆறு, எட்டில் கிரகங்கள் இல்லாதிருந்தால் விஷம் கக்கும் நிலை தோன்றியிருக்காது.
பொதுவாக ஜோதிடம் அறிந்தவர்கள், ஆறு, எட்டு என்பது மறைவு ஸ்தானமாச்சே... ராகுவோடு தொடர்பு பெறாத நிலை தானே என சிந்தனை வரும்.
அப்படியல்ல...
எதிரிகளை பார்த்தவுடன் அசுர குணம் ஆர்ப்பரித்து நிற்கும் !
எதிரிகள் யார் ?
தான் அமர்ந்திருக்கும் ஆறு மற்றும் எட்டில் அமர்ந்துள்ள கிரகங்கள் தான் எதிரிகள் !
அதேபோல், அசுர குணம் படைத்த ராகு
ஆஹா தேவர்கள் மறுபடியும் நம்மிடம் மோத பார்க்கிறார்கள் என பெரும் யுத்தத்திற்கு தயாராகிறான்.
குரு என்பது நம் ஜீவ சக்தியை பராமரிக்கும் கிரகம் ! சந்திரன் நம் தேகத்தை தாங்கும் கிரகம் !
இரண்டையும் அழிக்க ஆயத்தமாகிறான்... அதற்கான நேரம் வருவதற்காக காத்திருக்கிறான்...
அன்று அமாவாசை! நவகிரகங்களின் தலைவன் சூரியனோ கேது பிடியில், முழு சூரிய கிரகணம்!
ஆம் 25.12. 2019 அன்று மூல நட்சத்திரம் தனுசு ராசியில் 6 கிரகங்கள் !
ராஜ கிரகங்கள் எல்லாம் கேது பிடியில் பலமற்று இருக்க, ராகு என்ற அசுரன் தன்போரை துவக்கினான்.
அவனுடைய ஆயுதம் காற்று, நீர் !
அவன் தாக்கும் இடம் தொண்டை (புதன்) ராகு தற்போது அமர்ந்திருக்கும் இடம் மிதுனம். மிதுனம் புதனின் வீடு.
அடுத்து, நுரையீரல் ( சனி ) !
அடுத்து ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறன் (செவ்வாய்)
ராகு, நம் மீது தொடுத்த போரில் நேற்று வரை (20.03.2020 ) , உயிரழந்தவர்கள் எண்ணிக்கை 11,387/- நபர்கள்.
மனிதர்களாகிய நாம், ராகுவை எதிர்த்து போரிடவில்லை. போரிடவும் இயலாது. ராகுவின் விளைவுகளை மனித மூளை கொண்டு
இதற்காக உலக நாட்டின் தலைவர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் மருத்துவ துறையினருக்கும், மற்ற துறையினருக்கும் நாம் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம்.
அரசுகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூறிவரும் விதிகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
அசட்டு தைரியத்தையும், அசட்டு நம்பிக்கையையும் அறவே தவிர்த்து அவர்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும்.
அசுரன் ராகுவிற்கு, நல்லவர் யார் ? தீயவர் யார் என்று தெரியாது.
இன்று 22.03.2020 ல் மகரத்திற்கு வரும் செவ்வாயும், 30.03.2020 அன்று மகரத்திற்கு வரும் குருவும், ராகுவின் உக்கிரத்தை அதிகரிக்க கூடும்.
அப்படியே கேட்போம். அரவத்தின் விளைவுகளை தவிர்ப்போம்.
சரி எப்போது மாறும் இந்நிலை.
இன்னும் 55 நாட்களுக்கு இந்நிலையை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும்.
அதாவது குரு வக்கிர ஆரம்ப நிலை தான், மாற்றத்தின் ஆரம்பம்.
ஒளி கிரகமான சூரியன், குருவின் அருளால் வலுப்பெற, இருள் கிரகமான ராகு கட்டுப்பட துவங்கும்.
ராகுவின் வீரியம் முற்றிலும் குறையத் துவங்கும்.
கிரக நிலைகளின் படி பாரதத்திற்கு அதிக சேதமிருக்காது. இது ஞானிகள் வாழும் பூமி.
இன்னும் 55 நாட்கள் எப்படி நகர்த்த இயலும்.
அசுரனின் ஆதிக்கம் நிரம்பிய இந்நாட்களில், அசுர உணவான அசைவத்தை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
மனித மூளை, நிச்சயம் விளைவுகளை கட்டுப்படுத்தும்.
இந்த 55 நாட்கள், நம்மை நாமே அறிந்து கொள்ள கடவுள் கொடுத்த வரம்.
தவம் இயற்றுங்கள், ஆயுள் காரகன் சனியை பலப்படுத்த மூச்சுபயிற்சி செய்யுங்கள்.
இயலாதவர்கள் சுவாச ஓட்டத்தை மட்டும் கவனியுங்கள். அமைதியும், ஆனந்தமும் பெருகும்.
சந்திரன் பலம்பெற, ஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகங்களை பாராயணம் செய்யுங்கள் நல்ல பலன் அளிக்கிறது.
அதேபோல, சூரியன் பலம்பெற, ரமணர் அருளிய அருணாச்சல அட்சரமண மாலை படியுங்கள். சித்தர்கள் அருகில் இருப்பதை உணர்வீர்கள்.
இந்நிலையை அறுத்தெரிய, திருவாதிரைக்கு வேதையான திருவோணத்தில் அவதரித்த, திருவேங்கடவனின், வலது கரத்தில் அமர்ந்துள்ள சுதர்சன சக்கரத்திற்கே அதிக வலிமை !
வீரியம் மிக்க விஷ வைரஸை செயல் இழக்க,
மேலும் கந்த ஷ்டி கவசம் பொருளுணர்ந்து சொல்கையில் அது நம் உடலை சீராக்கி எதிர்ப்புசக்தியை அதிகமாக்கும்!
அரசன் சொல்வழி நடப்போமா?
🍁வாஸவி நாராயணன்🍁