வரி வருவாய் இன்றி கடுமையான பாதிப்பில் தமிழகம் தள்ளாடி வருகிறது. பிரதமரிடம் முதலமைச்சர் @CMOTamilNadu 12 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்டார். ஆனால், முதற்கட்டமாக கொடுத்தது வெறும் 500 கோடி (1/4)
டாஸ்மாக் மூலம் மாதத்துக்கு 3000 கோடி, முத்திரைத்தாள் பதிவுக் கட்டணம் மூலம் 1200 கோடி என வருவாய் வருகிறது!
ஆனால், இவையெல்லாம் #கொரோனா -வால் முடங்கிக் கிடக்கிறது (2/4)
தற்போதே வருவாய் தரக்கூடும் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் நிலையில் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வருவாய் வறட்சியை சந்திக்கபோகிறது (3/4)
பெயரளவில் பட்ஜெட் பெட்டியை தூக்கிக்கொண்டு வரும் அமைச்சரை வெளியில் பார்க்கவே முடியவில்லை!
இவ்வளவு பெரிய இழைப்பை அரசு எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பதற்கு பதில் தர ஆளுங்கட்சியில் ஒருவரை காண்பியுங்கள்!? (4/4)