சுருக்கமா பிளாஸ்மா தெரபி.
அதாவது தடுப்பூசி மருந்து கண்டு பிடிக்க லேட் ஆகுது என்ற காரணத்தால் உலகம் முழுவதும் ஏதாவது ஒரு முறை ஆராய்ச்சி பண்ணப் பட்டு இருக்கிறது. அதுல ஒரு ஆராய்ச்சி தான் இந்த பிளாஸ்மா தெரபி.
இது பத்தி தெரிவதற்கு திரும்ப நாம பத்தாம் வகுப்பு அறிவியலுக்கு போகலாம். அடிப்படை அறிவியல் தான். கொஞ்சம் பொறுமையா படிக்கவும்
இந்த பிளாஸ்மா 90% தண்ணீர் 10% புரோட்டீனால் ஆனது. இரத்தம் தண்ணீராக இருக்க இந்த பிளாஸ்மா தான் காரணம். உடம்பில் உள்ள தண்ணீர் சமநிலையை இதைக் கொண்டு தான் கட்டுப்படுத்த முடியும்.
அதாவது அதிக தண்ணீர் சிறுநீரகம் முலம் வடிகட்டி வெளியேற்றம் செய்யப்படும். அதே சமயம் தண்ணீர் குறைவாக உள்ள போது சிறுநீரகம் தண்ணீர் வெளியேற தடை செய்து இரத்தம் 5 லிட்டர் அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.
கொரோனா வைரஸ் Antigen எனப்படும். இதற்கு உடம்பில் உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தி Antibody எனப்படும். மேலும் இது பற்றி படிக்க சிறிது நாட்கள் முன்பு கொரோனா Antibody என்ற பதிவு இருக்கும். அதைப் பார்க்கவும்
1) நோய் வந்து 15 நாட்கள் கடந்தவர்கள்
2) மூன்று முதல் நான்கு வகையான மாத்திரைகள் உட் கொண்ட பிறகும் தீவிரத் தன்மை குறையாமல் இருப்பவர்கள்
4)வெண்டிலேட்டர் சப்போர்ட் கொடுத்த பிறகும் சிடி ஸ்கேன் எடுக்கும் போது மொத்தமா நுரையீரல் பழுதடைந்தவர்கள்
5)ஒரு தடவை நோய் வந்து குணமாகி திரும்ப வந்தவர்கள்
கிட்டத்தட்ட இந்த மருத்துவமனை ஊழியர்கள் நிறைய பாதிப்பு அடைந்து இந்த மருத்துவமனை முழுவதும் அடைத்து வைக்கப்பட்டது.
இதில் குணமானவர்களின் இரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ய வாய்ப்பு உள்ளது. இது எல்லாம் ஊகம் மட்டும் தான். உண்மையில் என்ன ப்ளான் என்று கேரள அரசுக்கு சொல்லல
ஆயிரம் நோயாளிகள் அருகே வந்தும் நாம் இன்னும் 100 பேர் கூட குணமாகும் பட்டியலில் வரவில்லை. எனவே நம்மிடம் தற்போது இந்த Antibody உள்ள ஆட்கள் குறைவு தான்.