சுந்தரத் தோள்களோடும் வால் இடைத் தூங்கச் சுற்றி,
சிந்துரக்கிரிகள் தாவித்திரிந்தனன்,தேவர் உண்ண
மந்தரக் கிரியால் வேலை கலக்கினான்,மைந்தன் என்றான்
ராவணன்னு ஒருத்தனை வாலில் கட்டி ஊரெல்லாம் சுத்தினானே, அந்த வாலியின் மகன் நான் என்கிறான்
தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்
சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் பெற்றேன்
ஏது எனக்கு அரியது? என்றான்
நீ தரக் கொள்வேன் யானே இதற்கு இனி நிகர்வேறு எண்ணின்,
நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசுஎன்று நக்கான்.
அடேய் யாருக்கு வேண்டும் உன் அரசு, நாய் கொடுத்த உணவை எங்கேயாவது சிங்கம் சாப்பிடுமா என்று சிரித்தானாம் அங்கதன்