ஒரு படத்தை பார்த்து முடித்து அந்த படத்தில் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும் என்று நான் நினைத்தது இது தான் முதல் முறை படத்தோட திரைக்கதை மற்றும் போக்கு ஹாரர் ஜார்னர்.
படம்: The autopsy of Jane doe(2016)
படத்தோட கரு ஒரு இறந்த பெண்ணோட உடல உடற்கூறாய்வு செய்யும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன அது ஏன்? அவள் யார்? அவள் எப்படி இறந்தாள்? உடற்கூறாய்வு பண்ணவங்க உயிரோட தப்பிச்சாங்களா? இதுல ஒரு மறக்கப்பட்ட வரலாறு இருக்கு அதை பார்ப்போம்
பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கை ஆசியால குறிப்பாக இந்தியா ல மட்டுமே இருப்பது போல் ஒரு நம்பிக்கை ஆனால் மூடநம்பிக்கை,பிற்போக்குத்தனம் எல்லா நாட்லயும் எல்லா மதத்திலும் இருக்கு இதுல எதுவும் விதிவிலக்கு அல்ல
"காந்தி இந்தியா வந்தால்!", - பிரதிலிபியில் படிக்க : tamil.pratilipi.com/story/%E0%AE%9…
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம்
.சுதந்திர தினத்தையொட்டி முதல்முறையாக அரசியல் சமூகம் கற்பனை கலந்து ஒரு கதை எழுதியுள்ளேன் . நண்பர்கள் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்
நான் பெண்களை மதிக்கணும்னு மு நினைக்கிவன் பெண்களை எப்பவுமே திட்டக்கூடாது ஏசக் கூடாது அப்படி நினைக்கிறவன் இன்னிக்கி காலில் கட்டுப் போட்டு போயிட்டு இருக்கேன் வழியில ஒரு பொண்ணு போன் பேசிட்டே என் கால இடிக்கிற மாதிரியே வந்தாள் சரி போன் பேசுது
கழுதை இன்னும் இந்த உலகத்துக்கு வரல னு சொல்லிட்டு நான் ஓரமா ஒதுங்கினேன் பின்னாடியே இன்னொரு பொண்ணு எல்லாம் வயசு ஒரு 18-25 தான் இருக்கும் எனக்கு கோபம் வந்துச்சு கொஞ்சம் பார்த்து நடமானு சொன்னேன் அதுக்கு நான் ஏதோ அந்த பொண்ணு ஈவ்டீசிங் பண்ண மாதிரி பாக்குறா சுத்தி
இருக்கிற ஷாலினி எனி ப்ராப்ளம் க்ரூப் சப்போர்ட் இதுக்கு ஏண்டா நீங்கள்லாம் கொரோனா வந்து செத்தா என்னனு தோனுச்சு ஒரு நிமிஷம்.
இது எனது குடும்பத்தை பற்றிய தனிப்பட்ட பதிவு மறைந்த எனது தாத்தா திரு ராமசாமி பற்றிய எனது நினைவுகளை இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் எனது தாத்தாவை பற்றிய நினைவுகளை எழுத முடியாமல் போனால்
நான் இத்தனை வருடம் படித்த தமிழுக்கும் நான் கற்ற கல்விக்கும் அறிவுக்கும் நியாயமில்லை சிறுவயது நினைவுகள் சில சிதைந்து விட்டன எனக்கு தெரிந்த நினைவுகளில் வழுக்கை தலையுடன் சிறிது நரைமுடியும் தொப்பையுடனும் முகத்தில் புன்னகையுடன் எப்போதும் வலம் வரும் 65 வயது வாலிபன். தாத்தா என்றால்
அன்பை மாரி போல் பொழிபவன் நான் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஒரு அலாவுதீன் அற்புத விளக்கு பூதம். என்னைப் பார்த்தவுடன் என்னை தொட்டு அன்பாக நாய் போல வருடி விட்டு ஒரு பாசப் பார்வை பார்ப்பார்
சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் ஏன் எழுதல அப்டினா இது ஒரு சாதாரண நிகழ்வாக தான் பார்க்கிறேன் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு ஐந்து லாக்கப் இறப்புகள் நடக்கிறதா ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது
இது உலக நாடுகளில் சகஜம் இந்தியாவில் ரொம்ப ரொம்ப சகஜம் இதற்கு காரணம் கேட்டா போலீஸ் மன உளைச்சலோடு வேலை செய்வதாக ஒரு குரூப் சொல்லும் இன்னொரு குரூப்பு மக்கள் மேலயும் தப்பு இருக்கு னு சொல்லும் உண்மையான காரணம் என்னன்னா தனி மனித ஒழுக்க கேடு
அந்த தனி மனித ஒழுக்க கேடுகள் உள்ள மனிதன் போலீசாகவோ ஒரு அதிகாரவர்க்கமாகவோ மாறுமா போது அவனால் எளியோர் நசுக்கப்படுவது இன்னும் தெளிவாக சொல்லனும்னு மந்திரி பையனோ இல்ல பெரிய ஊழல்வாதியோ கடத்தல்காரனோ பணமிருப்பவன் எவராயினும் அவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்காது
"பேசப்படாத மனநோய்"
மனநோய்னா மெண்டல் அதெல்லாம் இங்கே இருக்கிறவனுக்கு இல்லை அப்படி தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இத சமுதாயமும் பிற்போக்குத்தனமும் சேர்ந்து கட்டமைக்கிறது ஒரு ஆண் /பெண் இப்படி தான் இருக்க வேண்டும்னு சமூகம் மறைமுகமாக
மதம் சாதி குடும்பவழக்கம் வழியாக போதிக்கப்படுகிறது ஒரு ஆண் பொதுவெளியில இல்ல வீட்ல கூட அழக்கூடாது னு எழுதப்படாத விதி அப்படி அழுத ஏன் இப்படி பொட்டச்சி மாறி அழுகுறனு கேட்பது முதல்ல ஒரு பெண் தான் அம்மாவோ அக்காவோவா இருப்பது முரண் இதை ஆங்கிலத்தில Toxic masculanityனு
குறிப்பிடுகிறார்கள் இது மட்டுமே காரணி அல்ல இதுவும் ஒரு காரணி மனசு கஷ்டமா இருந்தா தனியா போய் யாரும் பார்க்காத இடத்தில் நின்னு கதறி அழு கத்தி அழு இல்ல மனசில இருக்கிற கோபத்தை திட்டி தீர்த்து விடு நெருங்கிய நண்பர்களிடம் பேசு நிலமையை விவரி ஆறுதல் தான் தேவைனு இல்ல