My Authors
Read all threads
தின்னு கெட்ட பரம்பரை.!

வசீம் அல்கமயீல் ஒரு ஜோர்டானியன். எங்க கம்பெனில கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜரா இருக்கான்.
கொஞ்சம் திறமையான ஆளு. அதுவும் குறைஞ்ச லேபர் வெச்சு, புரொடக்‌ஷன் ப்ளான் பண்ணி, பக்காவா ரிசல்ட் குடுக்கறது இவனோட பலம்.
பெரிய ஃபுட்பால் பைத்தியம். கூடவே ஃபுட்பால் நல்லா
1/n Image
விளையாடவும் செய்வான்னு அவனோட மத்த நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன்.
அன்னிக்கு எதோ லோக்கல் மேட்ச்ல அவங்க ஜெயிச்ச சந்தோஷத்துல மதியம் எங்க எல்லோரையும் சாப்பிடக் கூட்டிட்டுப் போனான்.
அன்னிக்குத்தான் நான் அதுல ஒரு புது விஷயம் கத்துக்கிட்டேன்.

நானும் இத்தனை வருஷமா
2/n
சாப்பிட்டுட்டுத்தான் இருக்கேன்.
உணவை வீணாக்கக் கூடாதுங்கறது எங்கள மாதிரியான விவசாயக் குடும்பத்துக்கு பாலபாடம்.!
தட்டுல எப்பவும் கொஞ்சம் அதிகம் போட்டு, 'வளர்ற பையன்... நல்லா சாப்பிடு...'னுதான் சொல்லும் அம்மா.
அப்பிடி சாப்பிட்டுத்தான் பழக்கமும் கூட.

அப்படி சின்ன வயசுல என்ன
3/n
தின்னாலும் எவ்வளவு தின்னாலும் செரிச்சது.
அன்னிக்கு நல்ல விதமா வெளஞ்ச அரிசி பருப்புனு ஆரோக்கியமா சாப்பிட்டதும் ஒரு காரணமா இருக்கலாம்.
ஆனா, இப்ப அரிசி வெளயறதுல ஆரம்பிச்சு அத்தனைலயும் அவசரம்.
மரபணு மாற்றம்ங்கறாயங்க.
கேட்டா புத்திக்குப் புரியலைனாலும், சாப்ட்டா ஒடம்புக்குத்
4/n
தெரியுது.
ஒண்ணு செரிக்க மாட்டுது. இல்லைனா ஆரோக்கியத்த கெடுக்குது.

இப்பல்லாம், ஏற கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நெஞ்சுக்குள்ளயே நிக்கறாப்ல ஒரு ஃபீலிங்கு.
ஹோட்டல்ல போயி மினிமீன்ஸ் ஒரு மினிமீல்ஸ் சாப்பிட்டாக்கூட, செரிக்கறதுக்கு ஒரு பெப்ஸியோ கோக்கோ குடிக்க வேண்டியிருக்கு.

நெலமை
5/n
இப்படி இருக்கறப்ப வசீம் கூட்டிட்டுப் போனது ஒரு ஜோர்டானியன் ரெஸ்ட்டாரண்ட்.
பத்தாதுக்கு ”எது புடிக்குமோ அது ஆர்டர் பண்ணிக்கங்க”னு மெனு கார்டை எங்க பக்கமே தள்ளி உட்டுட்டான் வேற.
மெனு கார்ட் வேற முழுக்க அரபில இருக்கு.
எது நல்லாருக்கும்னு கேட்டிருக்கலாம்.
பெருமைக்கு பாஷை
6/n
புரியாம, படத்த பாத்து இருக்கறதுலயே நமக்கு செட் ஆகும்னு தோணுன ஒரு சிக்கனோட இருக்கற மீல்ஸ் பார்த்து ஆர்டர் பண்ணிட்டேன்...
கொஞ்ச நேரம் கழிச்சு கொண்டு வந்தான் பாருங்க ஒரு சாப்பாட...
நல்ல ஒரு பெரிய ப்ளேட்ல நாலஞ்சு சிக்கன் லெக் பீஸ் வெச்சு, கிட்டத்தட்ட என்னை மாதிரி நல்லா சாப்பிடற
7/n
ஆளே மூணு பேரு சாப்பிடலாம் அத.

திருப்பி கொண்டு போனும் சொல்ல முடியல. யாராவது ஷேர் பண்ணிக்கலாம்னு பார்த்தா அவனவன் அல்ரெடி ஆர்டர் பண்ணத சாப்பிட்டுட்டு இருக்காய்ங்க.
சரி… வேற வழியில்லைனு, சாப்பிட ஆரம்பிச்சு கால்வாசி தாண்டும் போதே வயிறு ரொம்பிடுச்சு.
ப்ளேட்ல அரைவாசி தாண்டறப்பவே
8/n Image
மூச்சு முட்டுது... ஆனாலும் வேஸ்ட் பண்ண மனசு இல்லாம மெதுவா கொஞ்ச கொஞ்சமா உள்ள தள்ளிகிட்டு இருக்கேன்
முக்காத் தட்டு வரைல சுத்தமா முடியல... முழி பிதுங்குது. ஆனா, சாப்பாட்ட எப்படி வேஸ்ட் பண்ண.?

முக்கி முக்கி நான் சாப்பிடறத பாத்துட்டு அந்த வசீம்தான் கேட்டான், "என்ன யெம்மெஸ்...
9/n
சாப்பிட முடியலையா.?".

”ஆமா... ஒரு மீல்ஸ்னா இவ்வளவு இருக்கும்னு தெரியாம ஆர்டர் பண்ணிட்டனே...”னு நான் சொன்னதும், "முடியலைனா அப்பறம் ஏன் சாப்பிடற.. வச்சுட்டு எந்திரி"ன்னான்.

ஆனாலும் எனக்கு உணவை வீணாக்க மனசில்ல… "நாங்க உணவை வேஸ்ட் பண்ண மாட்டோம். எங்களுக்கு அது பழக்கம்
10/n
இல்ல. கிட்டத்தட்ட அது எங்க கல்ச்சர்" அப்பிடின்னேன் எல்லோர் முன்னும் கண்ணில் பெருமை பொங்க.

அவன் சிரிச்சுட்டே சொன்னான்.

"அப்படினா ஆர்டர் பண்ணைலயே க்வாண்டிஃபை பண்ணனும். இப்ப தப்பாய்டுச்சு. என்ன பண்ணரது.? ப்ராக்டிகலா திங் பண்ணா... சாப்பிட முடியலனா தட்டுல வச்சுட்டு எந்திரிச்சனு
11/n
வச்சுக்க.. அதை குப்பைத் தொட்டில போடுவாங்க. அந்த சாப்பாடு மட்டுந்தான் கெடும். ஆனா, அதவிட்டுட்டு இப்பிடி அள்ளி உள்ள கொட்டுனா உணவோட சேத்து உன் உடம்புமில்ல கெடும்.? விடு.. சாப்பாடு மட்டும் கெட்டாத் தப்பில்ல... விட்டுட்டு

12/n
எந்திரி.!"ன்னான்.

இன்னாங்கடா இது.?

நமக்குத் திங்க் பண்ணத் தெரியாதுனு தெரியும்.
திங்கக் கூடத் தெரியாதுனு அன்னிக்குத்தான் தெரிஞ்சது.!

😭😭😭
n/n Image
இணைப்பு: பேக் பண்ணி கொண்டு போகலாமேனு கேக்கறாங்க.
பிரச்னை நம்மகிட்ட தான். சூடு பண்ணி சாப்பிட, கை வெச்சத மறுபடி சாப்பிட ஆகாது. சாப்பிட்ட மிச்சத்தை பார்சல் பண்ணி செக்யூரிட்டிக்கு குடுக்க எனக்கு மனசு ஒப்பாது. இதெல்லாம் அங்க பேச்சு ஓடுச்சு. போஸ்ட் நீளமாகுதேனு சுருக்கி, தப்பாய்டுச்சு.!
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with டேனியப்பா

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!