கண்ணதாசன் “வனவாசத்தில்” தன்னை ‘அவன்’ என்றே கூறிப்பிட்டுள்ளார்.அவர் கருணாநிதியைப் பற்றி எழுதிய விமர்சனங்கள்.1 #வனவாசம்#கண்ணதாசன்
அண்ணாவின் ‘நேர்மை’ கருணாநிதியின் ‘சுய’மரியாதை:
இந்த நிலையில் சென்னை மாநகர் மன்றத் தேர்தல் வந்தது. பொதுத்தேர்தல் முடிந்து திருக்கோஷ்டியூரில் அவன் தோல்வியுற்று, சென்னைக்குத் திரும்பிய உடனேயே சென்னையில் திமுகவின் வெற்றியைக் கண்டான்.அப்போதே ‘தென்றலில்’ ஒரு தலையங்கம் எழுதினான்.2
'அடுத்த மாநகர் மன்றத்தேர்தலில் முன்னேற்றக் கழகத்தவரே மேயராக வருவார்’என்று அதில் அவன் குறிப்பிட்டான்.
அந்த நம்பிக்கையை துணைகொண்டு இப்போது தேர்தல் வேலைகளில் இறங்கினான்.அந்தத் தேர்தலில் சென்னையில் தி.மு.க.வுக்காக அதிகம் உழைத்தவர்கள் அவனும் நடிகர் டி.வி.நாராயணசாமியாவார்.3
உடலுழைப்பு,வாகன உதவி,பொருள் உதவி அனைத்தும் அவர்கள் இருவருமே செய்தார்கள்.சிவகெங்கைச்சீமை படம் வெளிவருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடந்ததால்,அவன் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்தது.பல தொகுதிகளில் இவன் தன் பணத்தைச் செலவழித்தான்.4
காய்கறிகளுக்குப் போடப் பட்டிருந்த வரிகளையே பிரச்சாரத்திற்கு பொருளாகக் கொண்டான்.அவன் எதிர்பார்த்ததுபோல் தி.மு.கழகம் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது.அண்ணாத்துரையே திகைத்தார்.ஏனென்றால் அவர் எதிர்பார்க்கவில்லை.5
வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் அவனது கம்பெனிக்கே வந்து அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் போனார்கள்.கடற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம்.வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள்.நடுவிலே அண்ணாத்துரை.அவர் பக்கத்திலே கருணாநிதி.6
கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.பலர் பாராட்டிப் பேசுகிறார்கள்.தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள்போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள். கருணாநிதி பேசுகிறார்.அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர்போல் பேசுகிறார்.7
இவ்வளவுபேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார்.அடுத்தாற்போல் அண்ணாத்துரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.காங்கிரசை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார்.வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார்.8
அதில் தன் பெயரும் வரும் என்று அவன் காத்துக்கொண்டு இருக்கிறான்.அந்தோ,அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூட இல்லை.அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.9
"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை.எனக்கென்றுகூட நான் நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கிவந்தேன் ஒரு கணையாழி.அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்.”10
கூட்டத்தில் பெருத்த கையொலி.'கருணாநிதி வாழ்க!’ என்ற முழக்கம்.அவன் கூனிக் குறுகினான்.பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.
பெரிய ஜாதிக்காரனையும் சிறிய ஜாதிக்காரனையும் ஒரே மாதிரியாக எப்படி ஜாதிவெறி ஆட்டி வைக்கிறது என்பதை 11
அன்று அவன் நேருக்கு நேர் பார்த்தான்.அண்ணாத்துரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார்.அவரை வரம்புமீறிப் புகழ்ந்துகொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப்பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று.ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார்.அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது.12
கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.அவன் நேரே அவரிடம் போனான்."என்ன அண்ணா! இப்படிச் சதி செய்துவிட்டீர்கள்?”என்று நேருக்கு நேரே கேட்டான். “அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு.அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்” என்றார்.13
"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?”என்று அவன் கேட்டான்."அட சும்மா இரு.அடுத்த தேர்தல் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்”என்றார்.14
அவன் அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே நடக்கலானான். அவன் கண்களில் நீர் மல்கிற்று. பயன் கருதி அவன் உழைக்கவில்லை என்றாலும், உழைத்தவனுக்கு ஒரு நன்றி கூட இல்லையே என்று கலங்கினான்.15
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை விற்காதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்' என்றார். அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப-புண்ணிய கணக்கை பரிசீலித்து, "ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள்" என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே' என்று கூறியது
நினைவுக்கு வந்தது.அதனால் அதற்கு விலை கூற மறுத்து,"ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்"என்றான்.திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது' என்று எண்ணி,"இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்.வா இந்திரனிடம் போகலாம்"
திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்.
சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்ட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு
என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.
பல ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் சூரியக்காலடி என்று அழைக்கப்பட்ட நம்பூதிரி இல்லம் ஒன்று இருந்தது.வசதிமிக்க இந்த நம்பூதிரிக்கு தென்னந்தோப்பு ஒன்று,மூத்த செக்கன் என்னும் காவலாளியின் பொறுப்பில் இருந்து வந்தது.அவனும் எஜமானர் மீது விசுவாசம் கொண்டவன்.உண்மையே பேசுவான்.மற்றவர் பொருளுக்கு
ஆசைப்பட மாட்டான்.எஜமானரின் பொருளை,தன் பொருளாக பாதுகாத்தான்.தென்னை மரத்தில் இருந்து முற்றிய நெற்றுக் காய்கள் காற்றில் அடித்து விழும்.அந்த காய்கள் காவலாளிக்கு உரியதாகும்.ஒருநாள் மார்கழி மாத இரவில் செக்கனுக்கு குளிர் தாங்க முடியவில்லை.தென்னை மட்டைகளை குவித்துத் தீ மூட்டினான்.
இரவு முழுவதும் கண்விழிக்கவே பசிக்க ஆரம்பித்தது. நெற்றுக்காய் இரண்டை எடுத்து உரித்து,கொப்பரைகளை பிரித்து,தீயில் சுட்டு சாப்பிட்டான்.தினமும் இதை இரவு வழக்கமாக்கினான்.ஒருநாள் தேங்காய் சாப்பிடும்போது, பின்புறத்தில் இருந்து ஒரு துதிக்கை நீண்டது.
சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்.
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது. சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக தீரும் என்பது ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததாலும், கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை 'அவசர திருக்கோலம்' என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.பாதங்கள் சக்கரத்தைப்போல சுழன்று