My Authors
Read all threads
உடையும் இந்தியா: ஒரு பார்வை
தமிழர்கள் கிறிஸ்தவத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாறவேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வில் இணைவதன் மூலம் ‘திராவிட சமயத்துக்கோ’ மதம் மாறவேண்டும். /1 Image
வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு’ கதைகளை கான்ஸ்டான்டைன் ஜோஸப் பெஸ்கி என்ற மதமாற்றம் செய்யவந்த பாதிரி, தைரியநாதராகி, பின் வீரமாமுனியாகி, இந்துமதத் துறவிகளை முட்டாள்களாகச் சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதே ‘பரமார்த்த குரு கதைகள்’ என்பதை அறிய இந்நூலை வாசிக்க வேண்டும். /2
பிராமணர்களை தமிழர்கள் அல்லாதோர் என்றும், ஆரிய வந்தேறிகள் என்றும் நிறுவப்படும் கருத்து வரலாற்று உண்மையல்ல. 1840களில் ஸ்காட்டிஷ் மிஷனர் சொஸைட்டியினரால் அனுப்பப்பட்ட ரெவண்ட் ஜான் ஸ்டீவன்ஸனால் விதைக்கப்பட்ட புனைவு என்பதையும், /3
ஏழாம் நூற்றாண்டில் பிராந்தியம், மொழி ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ‘திராவிடன்’ என்ற சொல்லை முதன்முதலாக இனக்கோட்பாட்டுப் பொருளில் பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1856ல் பயன்படுத்தியதையும், ‘உடையும் இந்தியா’ ஆதாரங்களுடன் முன்வைக்கிறது./4
மதமாற்றம் செய்ய வந்த ஜி.யு. போப்பும் ராபர்ட் கால்டுவெல்லும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களாக்கப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையில் சிலைகளாக நிற்கக் காரணம் நம் வரலாற்றினை நாம் அறியாத காரணம் என்பதைப் புத்தகம் கூறுகின்றது./5
புத்தகத்தின் முக்கியமான அத்தியாயமாக நான் கருதுவது, பதினோராவது அத்தியாயமான ‘இந்தியப் பிளவுகள் குறித்த மேற்கத்திய புனைவாக்கம்’. இந்தியாவைப் பிளவுபடுத்தவும் இந்திய ஐக்கியத்திலிருந்து தமிழ்நாட்டை விண்டுபோகச் செய்யவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் நிதியாதாரம் வழங்கும்/6
அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள், கிறிஸ்தவச் சபைகள், ஊடகங்கள் ஆகியனவற்றைப் பற்றி இந்த அத்தியாயம் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. மேலும் இக்கூறுகள் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளதை விளக்குகிறது./7
‘ஆரிய சூழ்ச்சிக்குத் திராவிடர்கள் பலியானார்கள்’ என்று கால்டுவெல் விதைத்த நச்சுவிதையை, இனக்கோட்பாட்டினை, ஓர் அரசியல் இயக்கமாக ஈ.வெ. ராமசாமி விருட்சமாக வளர்த்தெடுத்தார். பிராமணர்களுக்கு எதிராக அதிதீவிரமான வன்முறையைச் செயல்படுத்துமாறு பேசியும் எழுதியும் அழைப்பு விடுத்தார்./8
ஏறக்குறைய ஹிட்லர், முஸோலினி போன்றவர்களின் பிரதிபலிப்பான ‘இனச்சுத்திகரிப்பிற்கு’ அருகில் அமைந்த கோட்பாட்டினை அவர் விதைத்ததை நூல் பேசுகிறது./9
இந்தியாவின் விடுதலை நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கவேண்டும் என்று ஈ.வெ.ரா கூறியது தனது ‘எஜமான விசுவாசத்தால்’ அன்றி வேறில்லை என்பதைப் புத்தகம் நிறுவுகின்றது./10
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போன்றவை ‘தமிழ்த்தேசியம்’ பேசுவதையும், அதன் தலைவர் திருமாவளவனுக்கு 2009ல் குருகுல் லுத்தரன் கிறித்துவ அமைப்பு ‘இறையியல் முனைவர்’ (Doctor of Divinity) பட்டம் அளித்ததையும் ஆராய்கின்றனர்./11
‘உடையும் இந்தியா?’ ஏன் முக்கியமான நூல் என்பதை விளக்க மேற்படி ஆதாரம் ஒன்றே போதும்.
/12

valamonline.in/2018/02/blog-p…
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Sarveshwaran सर्वेश्वरन ह சர்வேஸ்வரன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!