My Authors
Read all threads
திருவள்ளுவர் ஏவியேஷன் கார்ப்பரேஷன்:-
நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாள் அதுவும் வரலாம். அந்தத் தருணத்தில் மனதில் கொள்ளவேண்டியது,இடதுசாரிகள
வலுவாக உள்ள கேரளா மாடலை. இதற்கு முன்பாக கொச்சி விமான நிலையத்தை PPP பாணியில் தனியார் மயமாக்கப்போவதாக சொன்னபோது இடதுசாரிகள் வலுவாக உள்ள கேரள அரசு ஒரு நிறுவனத்தை உருவாக்கியது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தது கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசு.இதற்காக கொச்சி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
லிமிட்டெட் (சிஐஏஎல்)என்ற நிறுவனம் இதற்காக உருவாக்கப்பட்டது. 33.36% பங்குகளுடன் கேரள அரசு இதன் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தது. ஏர் இந்தியா, பிபிசிஎல், இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை 8.74% பங்கு முதலீடு செய்தன. ஃபெடரல் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி ஆகியவை 5.91%
பங்கு முதலீடு செய்தன. மீதமுள்ள பங்குகளை 29 நாடுகளில் இருந்த 10,000 பேர் முதலீடு செய்தார்கள். இவர்கள் பெரும்பாலும் மலையாளிகள்.
கேரள முதல்வரே இதன் கௌரவத் தலைவராக இருப்பார்.2015ல் இந்த விமான நிலையம் உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றது.இந்தியாவின்
மெட்ரோ நகரங்களில் இல்லாத மிகச் சிறந்த விமான நிலைய விருதைப் பெற்றது.கடந்த 2017-18ல் இதன் லாபம் 158.42 கோடி ரூபாய். இதில் கேரள அரசுக்குக் கிடைத்த டிவிடெண்ட், 31 கோடி ரூபாய். இதன் உள்ளே இயங்கும் டியூட்டி ஃப்ரி ஷாப்பையும் சிஐஏஎல்ஏ இயக்குகிறது. இடதுசாரிகள் வலுவாக உள்ள கேரளாவில்தான்,
காங்கிரசால் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தால்தான் இது நடந்திருக்கிறது.இதில் கவனிக்க வேண்டியது, இந்த விமான நிலையம் ஏர்போர்ட் ஆத்தாரிடி ஆஃப் இந்தியாவால் தண்ணீர் தெளிக்கப்பட்டுவிட்டாலும், மாநில அரசின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது என்பதுதான். இப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை
மத்திய அரசு தனியார் மயமாக்குவதற்கு கேரள அரசு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.எதிர்ப்பை மீறி தனியார்மயாக்கினால்,கொச்சி பாணியில், திருவனந்தபுரம் விமான நிலையத்தையும் மாநில அரசே கையகப்படுத்தி நடத்துமென முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். கேரளாவின் இந்த மாடல், நாளைப் பின்னால்
தமிழ்நாட்டிற்கு உதவும். திருவள்ளுவர் ஏவியேஷன் கார்ப்பரேஷனோ, அண்ணா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிட்டடோ ஆரம்பிக்க இது ஒரு ரெஃபரன்ஸாக இருக்கும்.
இதில் இன்னொரு சாதகமான அம்சமும் இருக்கிறது. மாநில அரசு 51 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருந்தால், மாநில அரசின் இடஒதுக்கீட்டையும் இந்த
நிறுவனங்களில் செயல்படுத்தலாம்.

(நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் மத்திய அரசு தன் பங்குகளில் ஒரு பகுதியை விற்க முயன்றபோது அவற்றை தமிழக அரசு வாங்கியது நல்ல முன்னுதாரணம்.)
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with G. Sundarrajan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!