மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக”
அந்த வேதத்திற்கு மாறுபாடான பௌத்தம் போன்ற பொய் நெறிகளில் செல்லாமல் இருபத்தோரு வேள்விகளைச் செய்து முடித்தோரின் பரம்பரையில் வந்தவனே என்கிறார் புலவர். அதென்ன 21 வேள்விகள் ?
“நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை சுவல்பூண்ஞாண் மிசைப்பொலிய”
அதாவது, கலைமானின் தோலை பூணூலுக்கு மேல் போர்த்தி இந்த யாகத்தை நீ செய்கிறாய்
நீர்நாண நெய்வழங்கி”
காட்டுப்பசு ஏழிலும் நாட்டுப்பசு ஏழிலும் இருந்த பெறப்பட்ட நெய்யை நீர் போலச் செரிந்து அந்த யாகம் நடைபெற்றதாம். இது வாஜபேயம் எனும் யாக வகையைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கூறுவர்.