My Authors
Read all threads
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3
நிறுவனத்திலுள்ளோர் கோப்பைத் திறக்குமுன் உங்களைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம் கிடைத்துவிடும்.

2. மின்னஞ்சலின் தலைப்பையும் (Subject) இதே நோக்கத்துக்காகப் பயன்படுத்துங்கள் “Job Application”, “Hello Sir” என்றெல்லாம் பொதுவாக எழுதாமல், எந்த வேலைக்கான விண்ணப்பம் என்பதைக் குறிப்பிடுங்கள்.|4
வேலை அறிவிப்பில் Job ID என ஏதாவது எண் இருந்தால், அதையும் சப்ஜெக்டில் குறிப்பிடலாம்
இதெல்லாம் எதற்காக?
அந்நிறுவனத்தில் இதுபோல் பல வேலை வாய்ப்புகள் இருக்கும், தலைப்பிலேயே விஷயத்தைத் தெளிவாக்கிவிட்டால், நீங்கள் எதற்காக விண்ணப்பம் செய்கிறீர்கள் என்பது பளிச்சென்று புரியும்.|5
3. Dear Sir/Madam என்று தொடங்கும் அறிமுகக் கடிதங்களால் பெரிய பயன் ஏதும் இருக்காது. அவற்றை அநேகமாக யாரும் படிக்கமாட்டார்கள். உங்கள் மன நிறைவுக்காக 2 வரி எழுதுகிறீர்கள் என்றால் சரி, அதற்குமேல் அவற்றைச் செதுக்கிக்கொண்டிருக்கவேண்டாம். |6
4. அறிமுகக் கடிதத்தில், ரெஸ்யூமில் எழுத்து, இலக்கணப் பிழைகள் இல்லாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றைக் கண்டறிந்து திருத்த இணையத்தில் ஏராளமான கருவிகள் உள்ளன, இல்லாவிட்டால் நண்பர்களிடம் உதவி கேட்டுத் திருத்திக்கொள்ளலாம். |7
அது அவ்வளவு முக்கியமா என்றால், முக்கியம்தான். எழுத்துப்பிழையைப் பார்த்தவுடன் எரிச்சலாகிறவர்கள் பலர் உண்டு. எரிச்சலுடன் அவர்கள் நம்முடைய விண்ணப்பத்தைப் பரிசீலிப்பது நம் வாய்ப்புகளைச் சிறிதளவேனும் பாதிக்கலாம். ஆகவே, இதற்காக ஒரே ஒருமுறை 1 மணி நேரம் செலவிடுங்கள். |8
5. ஒரே மின்னஞ்சலை நான்கைந்து பேருக்கு அனுப்புவதில் தவறில்லை; அதற்காக அனைவரையும் ஒரே மின்னஞ்சலில் போடாதீர்கள், தனித்தனியே அனுப்புவது அவர்களை மதிப்பதாகும். |9
6. A என்ற நிறுவனத்துக்கு அனுப்பிய வேலை விண்ணப்பத்தை அப்படியே Bக்கு ஃபார்வர்ட் செய்யலாம்; ஆனால் கீழே உள்ள A என்ற நிறுவனத்தின் பெயரை அழிக்காமல் விட்டுவிடக்கூடாது. இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் இப்படி அடுக்கடுக்காக 3 நிறுவனங்களின் பெயர்கள் இருந்தன. |10
7. Resumeக்குள் என்ன இருக்கவேண்டும் என்பது மிகப்பெரிய தலைப்பு, அதையெல்லாம் சொல்ல இது இடமில்லை. ஆனால் குறைந்தபட்சம் உங்கள் தொலைபேசி எண்ணும் மின்னஞ்சலும் இருக்கவேண்டும், அவை கோப்பைத் திறந்தவுடன் பளிச்சென்று கண்ணுக்குத் தெரியவேண்டும், படிப்பு, வேலை அனுபவம் (இருந்தால்) |11
ஆகிய தகவல்களைச் சுருக்கமாக எழுதுங்கள் (கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் அவர்களே கேட்பார்கள்), குறிப்பிட்ட சாதனைகளை, விருதுகளை எழுதுங்கள், புகைப்படங்கள் பெரும்பாலும் அவசியப்படாது, ரெஸ்யூமில் Marital Status, Hobbies எல்லாம் எதற்கு என்று எனக்கு இதுவரை புரியவில்லை. |12
8. குறிப்பாக, ரெஸ்யூமில் பொய் சொல்லாதீர்கள், ஆன்லைன் நேர்காணல்தானே என்று இன்னொருவரையோ இணையத்தளங்களையோ உதவிக்கு அழைத்துக்கொண்டு திருட்டுத்தனம் செய்யாதீர்கள், பிழையான வழியில் சென்று அதன்மூலம் கிடைக்கிற எந்த நன்மையாலும் பலனில்லை என்பது காந்தி சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. |13
9. இன்னொரு கோணத்தில் பார்த்தால், இன்றைக்கு Resumeஐவிட, LinkedInபோன்ற தளங்களில் உருவாக்கும் (தொடர்ந்து வளர்ந்துகொண்டேயிருக்கிற) ஆளுமைப்பக்கங்கள், Portfolio எனப்படும் பணித்தொகுப்புகள், பிறர் உங்களுக்குப் பொதுவில் அளிக்கின்ற புகழாரங்கள் ஆகியவற்றுக்கு மதிப்பு மிகுதி. |14
உங்களுடைய இணைய அடையாளம் எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் யோசியுங்கள், துணிவும் திறமையும் உள்ளவர்கள் ஓரிரு ஆண்டுகளில் அதையே தங்கள் ரெஸ்யூம் ஆக்கிக்கொண்டுவிடலாம். |15
10. வேலை தொடர்பான கேள்விகள் இருந்தால் தாராளமாகக் கேளுங்கள், அதேசமயம், யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்துக் கேள்விகளை அமையுங்கள். எடுத்துக்காட்டாக, சம்பள விஷயங்களை HR (மனிதவளக்) குழுவினர் தவிர மற்றவர்களிடம் கேட்டால் சரியான பதில் கிடைக்காது. |16
11. மின்னஞ்சல் அனுப்பியபிறகு, ஓரிரு நாட்களுக்கு எந்தப் பதிலும் வராவிட்டால் நினைவூட்டுங்கள். பத்தாவது நிமிடமே ‘என்னாச்சு? ஏதேனும் தகவல் உண்டா?’ என்று கேட்டால் அது மறுமுனையில் உள்ளவர்களுக்கு எரிச்சலைத்தான் உண்டாக்கும். |17
12. நல்ல வேலைகளை மக்கள் தேடுவது எந்த அளவு உண்மையோ, அதே அளவுக்கு நல்ல மக்களை நிறுவனங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன; என் நிறுவனத்தில் சில HR நண்பர்களுடன் கிட்டத்தட்ட நாள்தோறும் பேசிக்கொண்டிருக்கிற அனுபவத்தில் சொல்கிறேன், |18
ஒரு சிறந்த திறமையாளர் கிடைத்துவிட்டால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்; அதேசமயம், அதற்காக ஏராளமானோரை வடிகட்டவேண்டிய மிகக் கொடுமையான (அழுத்தம் நிறைந்த) சுமைக்கும் அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். |19
ஆகவே, அவர்களைக் கொஞ்சம் பரிவுடனே அணுகுங்கள், அவர்களும் பேரியந்திரத்தின் சிறு பற்சக்கரங்கள்தாம். |20/20
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with N. Chokkan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!