மாக விசும்பின் வெண் திங்கள்
மூவைந்தான் முறை முறைக்
கடல்நடுவண் கண்டன்ன (கோவூர் கிழார்,
புறநானூறு : 400 : 1-3)
திங்களின் வளர்வது, தேய்வது, மறைவது ஆகியவற்றுடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள் நிலவை,
அதன் இயற்கைத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர்.
வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி,
வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள்
குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்களைக்
குறிப்பிட்டுள்ளனர்.
முழு வெண்ணிலவைப் போல என உவமையாகப் புலவர் கோவூர் கிழார் கூறுகின்றார்.
திங்களின் பெயரில் மாதம் அல்லது திங்கள் எனக் காலத்தைப் பகுத்துள்ளனர்.
எனவே, திங்கள் சுற்றும் கால அளவை உணர்ந்த அறிவியல் தலைமக்களாக நம்
முன்னோர் இருந்துள்ளனர்.