ஆனந்தி Profile picture
சிறப்பிற்கான நிலைத்தன்மை மகிழ்ந்து மகிழ்வி
May 30, 2021 22 tweets 2 min read
தலைவி:
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

வெண்ணிலவே!
தலைவன் இருக்கும் அத்திக்கில்(அத்திசையில்)
சென்று காய்க!

ஆலம்(விடம்) போல கொடுமையாக வருத்துக இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

நான் இருக்கும் இத்திசை நோக்கி வருத்தாதே!நீயும் என்னைப்போல் பெண்தானே (என்னுள்ளம் அறிவாய் நீ)
Feb 21, 2021 29 tweets 8 min read
"ஒரு தாய் தன் குழந்தையின் தலையை வருடுவது போல, ஒரு தந்தை வாஞ்சையுடன் தன் குழந்தையை அணைப்பது போல கதைகளால் அரவணைக்கிறார் பவா. கதைகளையும் சுமக்கிறார்.
 பவா செல்லதுரை அவர்கள் கதை சொல்லும் போது மட்டும் ஒருசேர அனைத்து இதயங்களையும் கசிய வைக்க முடிகிறது "
நன்றி: jeyamohan.in அவ்வாறாக இதயம் கசிந்த ஒரு
நிகழ்வாக திண்டுக்கல் துளிர் நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த எண்ணமும் எழுத்தும் நிகழ்வு -5-ல்,
ஐயா திருமிகு.பவாசெல்லத்துரை
அவர்களின் பெருங்கதையாடல் நிகழ்வில் பங்குபெறும் நற்பேறமைந்தது.
Nov 4, 2020 4 tweets 1 min read
எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.
-(புறநானூறு 5,
பாடியவர்:நரிவெரூஉத்தலையார்) அருஞ்சொற்பொருள்:
1. இடை = இடம். 2. பரத்தல் = பரவுதல். 4. ஓர் = ஒப்பற்ற. 6. நிரயம் = நரகம். 7. ஓம்பு = காப்பாற்றுவாயாக; மதி - அசைச் சொல். 8. அளிது = செய்யத் தக்கது.
Nov 3, 2020 4 tweets 1 min read
#பத்துப்பாட்டு
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்
-(மதுரைக்காஞ்சி,
மாங்குடி மருதனார்) அறம் கூறு அவையம் – நீதி மன்றம்  அறநூல் முறைப்படி அறம் கூறும் தருமாசனத்தார்
செற்றம்-பகை
ஞெமன்கோல்-துலாக்கோல்
Nov 2, 2020 4 tweets 1 min read
#எட்டுத்தொகை
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே. 
-(குறுந்தொகை 146,
வெள்ளி வீதியார்) ImageImage அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் -  அசைச்சொல்.
Aug 31, 2020 4 tweets 1 min read
#சான்றோர்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
-(புறநானூறு 218,
கண்ணகனார்) அருஞ்சொற்பொருள்:
1. துகிர் = பவளம்; மன்னிய = நிலைபெற்ற. 2. பயந்த = தந்த; காமர் = விருப்பம். 3. தொடை = தொடுத்தல். 5. பால் = பக்கம்
Aug 15, 2020 6 tweets 2 min read
விடுதலைநாள்...
இத்தனை ஆண்டும்
வாயில் சிரிப்புதிர்த்து
களிப்போடுகூடிநின்று
தேசியக்கொடிவணங்கிய
இனிப்புடன் கூடிய விடுமுறைநாள்..
இன்றோ படிக்கும்பருவமதை தீநுண்மிதிருடிப்போனது
விஞ்ஞானம் கண்டறிந்து
விந்தைபல விளைவித்து
மெதுமெதுவாய்
இயற்கை மறந்து
விண்ணும் மண்ணும் அடிமையென்ற இறுமாப்பில்
இயல்புநிலை மறந்ததால்
அடிவேரும் வலுவிழக்க
அல்லவைபலநாடியே இன்றுவேதனையின் பிடியினிலே
உயிரோட்டம்டம் விடும்மூச்சிலும் உறைந்ததே நம் விடுதலை..
ஒற்றுமையும் அன்புமேஉலகு
ஒருங்கிணைக்கும்
Aug 10, 2020 15 tweets 2 min read
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 
கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர் ஊரடங்கை எவ்விதம் பயனுள்ளதாக
Jul 28, 2020 6 tweets 2 min read
#மூதூர்க்கலம்
கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!
-(புறநானூறு 256,
பாடியவர்: பெயர் தெரிந்திலது) அருஞ்சொற்பொருள்:
1. கோ = குயவன். 2. சாகாடு = வண்டி; ஆரம் = ஆர்க்கால். 4. சுரம் = வழி. 5. வியன் = பெரிய; மலர்தல் = விரிதல்; பொழில் = நிலம். 6. வனைதல் = செய்தல்.
Jul 27, 2020 6 tweets 2 min read
#அம்பணம்
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவிந்தாங்கு
-(பதிற்றுப்பத்து 71 : 3 - 5
அரிசில் கிழார்) அம்பணம் – மரக்கால் ; அம்பண அளவை உறை – அறுபது மரக்கால் – ஓர் உறை ; அக் குவியலைப் பொலி என்பர். இந்த அறுபது அலகு கொண்டது உறையாகும்
May 22, 2020 5 tweets 1 min read
#வெள்ளுவாஎனும்பௌர்ணமி
மாக விசும்பின் வெண் திங்கள் 
மூவைந்தான் முறை முறைக் 
கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்,
புறநானூறு : 400 : 1-3) பிறப்பு, வளர்ச்சி, தாழ்ச்சி, இறப்பு முதலான உலகியல் நிலையாமை குறித்துத் 
திங்களின் வளர்வது, தேய்வது, மறைவது ஆகியவற்றுடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள்  நிலவை,
 அதன் இயற்கைத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர்.
Feb 12, 2020 10 tweets 2 min read
#வாரணம்
இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு- அகநானூறு 272
காட்டுயானை கொம்பால் புலியைக்கொன்றுபின் தன் உடலையும்,கொம்பையும் நீரில் கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளுமாம்... யானைகளின் இளமை கால பெயர்கள் உண்டு.
(1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி – ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் – உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி – மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்