#tnpsc
உங்களுக்கு நீங்க எழுதப்போற தேர்வின்(Group1/2/4 etc) சிலபஸ், தேர்வின் இயல்பு மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றி தெளிவான புரிதல் இருந்தா க்ளாஸ்க்கு போகவேண்டிய கட்டாயம் இல்ல.
2. Tnpsc தேர்வு எழுதி வேலை வாங்க குறைந்தது எவ்ளோ நாள் ஆகும்?
தேவையில்ல. ஆனா படிக்கற சப்ஜெக்ட்லருந்து கேட்கப்பட்ற எல்லா கேள்விக்கும் சரியா பதிலளிக்கற அளவுக்கு தெளிவா படிக்கணும். குறைந்தது 6 சப்ஜெக்டாவது படிக்கனும் முதல் நிலை தாண்ட. Mainsக்கு எல்லா சப்ஜெக்டும் படிச்சுதான் ஆகனும்.
நிறைய பேருக்கு இருக்க million dollar questionஆன இதுக்கு மூனு பதில் சொல்லலாம்.
அ) ஏற்கனவே இந்த துறைல படிச்சுட்டு, சில தேர்வுகள எழுதியிருக்கவங்களுக்கு:படிச்சுட்டே இருங்க. வேற வழியில்ல. திடீர்னு தேர்வு வெச்சாலும் தேர்ச்சி பெற தகுதிய வளத்துக்கோங்க.
இ)வேற வேலைல இருந்து இந்த துறைக்கு மாறலாமானு யோசிச்சுட்டு
5. முன்னாடி கேள்வியின் துணைக்கேள்வி இது.. புதுசா எந்த போஸ்ட்டும் உருவாக்கத்தடை போட்ருக்காங்களே..
காலி பணியிடம் ஒரு அலுவலகத்தில் ஒவ்வொரு பதவிகளிலும் ஒப்புதலளிக்கப்பட்ட(sanctioned strength) அளவிலான அலுவலர்கள், பணியாளர்கள் தான் இருக்க வேண்டும்.
பணி ஒய்வு மற்றும் பணி மாறுதல்கள் மூலம் ஏற்படுவது தான் காலி பணியிடங்கள்.
புதிய பணியிடங்கள் என்பது ஒரு அலுவலகத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும் சமயத்தில் அரசிடம் கோரிக்கை செய்து sanction strength அளவை அதிகப் படுத்துவது ஆகும்.
அலுவலகம் அல்லது குறிப்பிட்ட துறையில் இல்லாத ஒரு புதிய பணியிடத்தை அரசின் அனுமதி பெற்று நிரப்புவது.
உதாரணமாக ஒரு அலுவலகத்தில் இரு இளநிலை உதவியாளர்களுக்கு (Junior Assistant) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் கூடுதலாக ஒரு இளநிலை உதவியாளரை கேட்க முடியாது.
இந்த புதிய பணியிடங்கள் அதிகப்படுத்தும் நடவடிக்கைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது..
காலி பணியிடங்கள் நிரப்பும் தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை.
கண்டிப்பா. Tnpsc exams syllabus ல இருக்க சப்ஜெக்டெல்லாமே ரொம்ப பேசிக் தான். எந்த துறைசார்ந்த அறிவும்(specialization) தேவையில்ல. General Science தான் எல்லாமே. அதனால டிகிரி படிக்கும்போதே ஆரம்பிக்கறது இன்னும் நிறைய
7. 200% effort அப்டிங்கறதுக்கு அளவுகோல் என்ன?
Tnpsc ல entry level ஆன குரூப் 4 தேர்வுக்கே ஐஏஎஸ் பரிட்சைக்கு படிக்கறவங்கள்ள இருந்து பிஎச்டி படிக்கறவங்க வரைக்கும் எல்லாரும் அப்ளை பண்ணுவாங்க. அதனால போட்டியின் அளவு மிக அதிகமாதான் இருக்கும்.
8. Online ல நிறைய வீடியோஸ் இருக்கே.. அதுலயே படிக்கலாமா?
குரூப் 4 மாதிரி ஒரே நிலை இருக்க பரிட்சைக்கு அது போதும்.
நன்றி!