கலைஞர் சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்திக்காதவர் என்பார்கள். அதிலும் 13 முறை தொடர்ந்து எம் எல் ஏவாக இருந்திருந்தார் என்பார்கள்...!
ஆனால் அவர் வென்றது பதினான்கு முறை..! அதிலும் அந்த ஒரு கூடுதல் வெற்றியை அவர் ஈட்டியது எம் ஜி ஆரை தோற்கடித்து பெற்ற வெற்றி..!
மயிலாடுதுறை தொகுதி திமுக கோட்டை. அதை சில காரணங்களுக்காக எப்படியாவது வென்றெடுக்க வேண்டுமென்பது MGRஇன் கனவு. 77 & 80 இரண்டு தேர்தலிலுமே திமுகவின் கிட்டப்பா தான் வென்றார். நொந்து போன MGR ஒரு கட்டத்தில் எப்படியோ கிட்டப்பாவை வளைத்து அதிமுகவுக்கு இழுத்து விட்டார்.
அதிமுக போன கிட்டப்பா மன உளைச்சலில் 6 மாததிற்குள்ளாக இறந்து விட்டார். உடனே மயிலாடுதுறைக்கு இடைத்தேர்தல் வருகிறது. அப்பொழுது தான் அதிமுகவில் ஜெயலலிதாவும், திமுகவில் டி.ராஜேந்தரும் இணைந்திருந்த நேரம். இந்த முறை மயிலாடுதுறையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று எண்ணிய MGR..
அதிமுக சார்பாக பால வேலாயுதத்தை களமிறக்கி... அவருக்கு ஆதரவாக 15 அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் தாமரைக்கனி போன்ற அரசியல் ரவுகளையும் களமிறக்கினார். அது மட்டுமின்றி முதல்வராக இருந்த MGRஏ மயிலாடுதுறை தொகுதியில் தொடர்ந்து 5 நாட்கள் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் கலைஞர் பிரச்சாரம் செய்ததோ வெறும் 3 நாட்கள் மட்டுமே. ஒரு வீதியின் ஒரு முனையில் கலைஞர் வேனில் நின்று பிரச்சாரம் செய்தால்... அதே நேரத்தில் அதே வீதியின் மறு முனையில் MGRஇன் வேனும் வந்து நிற்கும்..! ஒரு கட்டத்தில் MGR தனது பிரச்சார உரையில் வேறு எதையும் முன் வைக்காமல்..
இது தம்பி பால வேலாயுதத்துக்கும், திமுக வேட்பாளரான சத்தியசீலனுக்கும் நடக்கின்ற போட்டி இல்லை...! மாறாக இது எனக்கும் திருவாளர் கருணாநிதி அவர்களுக்கும் இடையே நடக்கின்ற போட்டி..! இங்கு நானும் அவரும் தான் வேட்பாளர்கள்... என்று தொடர்ந்து ஒவ்வொரு இடத்திலும் பிரச்சாரம் செய்கிறார்..
அதுவரையிலும் ஒரு மாதிரி சென்று கொண்டிருந்த தேர்தல் களம்... வேறு மாதிரி சூடு பிடித்து விட்டது. மயிலாடுதுறை பூங்காவில் கலைஞர் பேசிய நிறைவு பிரச்சார கூட்டத்தில்... முதல்வர் MGR என்னை இங்கே நம் கழக வேட்பாளரா நிறுத்தியிருக்கின்றார்...
நான் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, அதிமுக வேட்பாளரான அவரை எதிர்த்து நானே இங்கே களம் காண்கிறேன். நான் பொதுவாக என் தொகுதியில் அதிகம் பிரச்சாரம் செய்வது கிடையாது. என் தம்பிமார்களிடம் அந்த பொறுப்பை விட்டு விட்டு மற்ற தொகுதிகளுக்கு செல்வது தான் வழக்கம். தஞ்சை தொகுதிக்கு செல்கிறேன்
என்னை இங்கு வெற்றிபெறச் செய்யுங்கள் என்று முழங்கிவிட்டுச் சென்றார்..!
அங்கே திமுக தான் வென்றது... இல்லை இல்லை... தலைவர் கலைஞர் தான் தனது 14ஆவது வெற்றியை MGR ஐ வீழ்த்தி பதிவு செய்தார். இது வரலாறு..!
வெற்றி நாயகன் கலைஞர்
#HBDKalaignar97