🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌿3 : 4 : 3🌿

🌱பாரதவாசிகளின் வாழ்க்கை – இரண்டாம் நிலை🌱

இவ்வாறான வாழ்க்கை முறை அமைக்கப்பட்டு, அதுவும் வளர்ந்து நாகரிகம் பெற ஆரம்பிக்கின்றது. இதில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்… அதான் ப்ராமணர்களுக்கு எல்லாம் தெரியுமே;
ஆரம்பம் முதலேயே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கற்றுக் கொடுத்திருக்கலாமே... என்று. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீகத் தேடலில் இறங்கி, இறையைக் கண்டவர்கள் எல்லாம் அறிவர்.

ஆனால், நம் போன்ற சாதாரன மக்களுக்கு அவை புரியுமா என்பதை எண்ண வேண்டும்.
மேலும், ஒரு மனிதன் தன்னை மாற்றிக் கொள்வதற்கும், ஒரு சமுதாயமே தன்னை மாற்றி அமைத்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

சமுதாயம் என்னும் மக்கள் கூட்டம் மொத்தமாக மாற, காலங்கள் அதிகம் ஆகும். அதுவும் மனிதன், தான் என்பதற்கான வளர்ச்சியில் வர ஆரம்பிக்கும் நேரம்
இன்னும் கால தாமதம் ஆகுமல்லவா? அதனால் தான் ஸத்ய யுகம் 17 லட்சம் ஆண்டுகளையும் த்ரேதா யுகம் 12 லட்சம் ஆண்டுகளையும் எடுத்துக் கொண்டது? அதையும் நாம் யோசிக்க வேண்டும்.

வாழ்வில் மிகுந்த வளர்ச்சி கண்டதாகப் பேசும் நாமே, எத்தனை பேர் ஒரு நல்ல கருத்தையோ, அல்லது நல்லது செய்கிறார் என்றாலோ
முழுவதுமாக ஏற்கிறோம்? எத்தனை மடத்தனமான எதிர்ப்புகள் இன்றும் உள்ளன? அப்படி இருக்கும் போது ஆதி காலச் சமுதாயம் மெதுவாகத் தானே மாறியிருக்கும்?

அதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாகரிகம் பெற ஆரம்பித்ததும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றுகின்றன.
அதாவது அதுவரை சிறு சிறு ஊர்களில் வாழ்ந்தவர்கள், தங்கள் தொழில் சம்மந்தப்பட்ட காரணமாகவோ, அல்லது சென்ற இடம் பிடித்ததாலோ பிற இடங்களிலும் மெதுவாகத் தங்க ஆரம்பிக்கின்றனர்.

இதில் பல்லாயிரம் ஆண்டுகளாக விரும்பியதைப் படித்து, குருகுலத்தில் கற்ற மனிதர்களுக்கு,
தன் குடும்பத்தில் ஒருவர் செய்து வரும் தொழிலைச் சிறு வயது முதல் பார்த்துப் பழகி, அதில் அதிகம் அறிவுத் தெளிவு ஏற்படுகின்றது.

மேலும், "புதிதாக ஒரு விஷயத்திற்காக அலைவதை விட... இதையே அப்படியே மேன்மேலும் முன்னேற்றிக் கொள்ளலாமே” என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
இது மிக மிக இயல்பான ஒன்று. இந்த மாற்றம் அதிகம் ஆனதும், குருகுலங்கள் அப்படியே நான்கு வர்ணத்தாருக்கும் தனித்தனியாக பிரிக்கப் படுகின்றன.

புதியதாக ஒரு தொழில் பற்றி ஒரு மனிதன் பல வருடம் கற்பதை விட, அத்தொழிலைச் செய்பவன் வீட்டில் இருக்கும் சிறுவன்/சிறுமிக்கு, அதைப்பற்றிய நுணுக்கம்
அதிகம் தெரிந்திருக்கும். அதே போல் வர்த்தகத்திலும், எந்த காலத்தில் எந்த வர்த்தகம் செய்யலாம், எந்த தேசம் செல்லலாம், எத்தனை காலமாகும் சென்றுவர, எந்த வர்த்தகத்தில் அதிகம் தேவைப்பட்ட பொருட்களை ஈட்ட முடியும் போன்ற நுணுக்கங்களை, ஒரு வைஷ்யனின் வாரிசு சிறு வயதிலேயே அறிந்து கொண்டு விடும்.
க்ஷத்ரியக் குழந்தைகள் மற்றும் ப்ராமணக் குழந்தைகளும் தங்கள் முன்னோர் அல்லது பெற்றோர் செய்ததை எளிதாகத் தொடர முடிந்தது.

இதற்கு அறிவியல் ரீதியாகவும், ஒரு குழந்தைக்கு அதன் ஏழு தலைமுறை முன்னோரிடம் இருந்தே உடல் அமைப்பு, குணநலம் எல்லாம் வரும் என்பது நிரூபணமான ஒன்று.
அதன் அடிப்படையில் முன்னோர் தொழில் என ஒன்று முதன் முதலாகத் தொடர்ந்து வர ஆரம்பித்தது. இதுவே முதல் காரணம் வர்ணாஸ்ரமவாசிகள் சமுதாயமாகப் பிரிய.

இரண்டாவதாக, ஒரு வர்ணாஸ்ரம தர்மத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களைப் போலவே வாழ்க்கை முறை கொண்டவர்களுடன் கூட்டமாக வாழ்வது,
வாழ்க்கை முறையினை மிகவும் எளிதாக ஆக்கியது. எனவே, மனிதர்கள் தான் செய்யும் தொழிலுக்கு ஏற்ப, அதே வகைப்பட்ட மனிதர்களுடன் இனைந்து ஒரே இடத்தில் வாழத் தொடங்கினர்.

ப்ராமணர்கள் அதீத கட்டுக்கோப்பான, அமைதியான வாழ்க்கை கொண்டதாலும், அதிகம் யக்ஞங்கள், த்யானங்கள் மற்றும்
குருகுலங்கள் ஆகியவற்றைக் கொண்டதாலும், அவர்கள் அநேகமாக ஊரின் எல்லைப் பகுதிகளில் அமைதியான இடங்களில் வாழ்ந்தனர்.

க்ஷத்ரியர்கள் அநேகமாக, முதல் க்ஷத்ரியனான மன்னன் இருக்கும் இடத்தின் அருகிலேயே, அவரைச் சுற்றிக் குடில்கள் அமைத்து வாழ்ந்தனர்.
இது மன்னன் அழைக்கும் நேரம் உடன் விரைந்து வந்து காரியங்கள் செய்ய ஏதுவாக இருந்தது. அடுத்ததாக வைஷ்யர்கள் ஊரின் மையப் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.

பெரும்பாலும் இவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர்த்தக நிமித்தமாகச் செல்வதால், தங்கள் குடும்பம் க்ஷத்ரியர்கள் இருக்கும் இடத்தருகில் இருந்தால்
பாதுகாப்பாக இருக்கும் என்பதால், இவர்கள் க்ஷத்ரியர்களுக்கு அருகிலேயே வாழ்ந்தார்கள்.

ஸூத்ரர்கள் தொழில், விவசாயம் என அதிகம் பார்த்ததால், க்ஷத்ரியர்களிடமிருந்து சற்றுத் தள்ளி, வயல்வெளிகள், தொழிற்கூடங்கள் கொண்ட நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றின் அருகில் வாழ்ந்தார்கள்.
ஆனாலும், இவர்களும் வைஷ்யர்களுடன் தொழில் சம்மந்தமான உறவில் இருந்ததால், அவர்களுக்கு அருகிலேயே அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள்.

மூன்றாவதாக, காலம் மாற மாற, சைவம் என்பது சிறிது குறைந்து, சிலர் வேட்டைக்குப் போன இடத்தில் உணவு கிடைக்காத போது, அசைவம் சுட்டு உண்ணப் பழகினார்கள்.
இப்படி ஆரம்பித்தது தான் அசைவம் மனித வாழ்வில். பின்னர் அவற்றை அப்படியே வீட்டில் பழக்கி, தனது சமுதாயத்திலும் சிலருக்கு பழக்கி விட்டார்கள்.

அப்படியும் அனைத்து க்ஷத்ரியர்களும் அசைவம் உண்பவர்களாக வாழவில்லை. ஒருசிலர் மட்டுமே அவ்வாறு வாழ்ந்தனர்.
இப்படி வளர்ந்த சமுதாயத்தில் தான் பரசுராமர் ஆறாவாது அவதாரமாக வந்தார்.

🌱பரசுராமர் அவதாரம்🌱

அத்ரி மஹரிஷியின் ஆசியிலிருந்து தோன்றியவன் சந்த்ரன் எனக் கூறப்படுகின்றது. அவரது சந்த்ர வம்சத்தில், குசன் என்னும் மன்னனின் பௌத்ரனாக (பெயரன்) காதிராஜன் என்னும் மன்னன் தோன்றினான்.
அவனது மகன் *கௌஸிகன்* எனப்படும் *விஸ்வாமித்ர* முனிவரின் ஸகோதரியும், மகளுமாகிய *ஸத்யவதி*யை *ரிஷீகன்* என்னும் அந்தனன் மணக்க விரும்பினான்.

அவன் எல்லா தெய்வீக சக்தியும் அறிந்தவன் எனத்தெரிந்த மன்னன், அந்தனர் கேட்டது செய்யாவிடில் குலம் நாசமாகும் என்பதால்
தனது மகளை அவருக்கு மணமுடித்து வைத்தார். ஸத்யவதிக்கு உத்தமமான மகன் வேண்டும் என்றும், அவளது தாய்க்கு பராக்ரமஸாலியான மகன் வேண்டுமென்றும் ஆசை தோன்றியது.

ரிஷிகன் யக்ஞம் செய்து, அதிலிருந்து இரு அன்னக் கவளங்கள் எடுத்து வந்தார். அதைத் தன் மனைவி ஸத்யவதியிடம் தந்து,
இரு கவளத்தில் எதில் உத்தமமான மகன் பிறக்க மந்த்ரமும், எதில் பராக்ரமஸாலி பிறக்க மந்த்ரமும் சொல்லப்பட்டு உள்ளதென்பதைக் கூறி, இருவருக்கும் உண்ணத் தந்தார்.

அதன்படி, அவருக்கும் ஸத்யவதிக்கும் ஜமதக்னி முனிவர் பிறந்தார். ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் திருமணம் நடந்தது.
அவர்களுக்குக் கடைசி மகனாகப் பிறந்தவர் *பார்க்கவ ராமர்*. இவர் சந்த்ர வம்ஸத்தைச் சேர்ந்தவர்.

14th century Copper idol of Lord Parasurama found inside temple tank in Oli Muhammed Pettai in Kancheepuram. Image
ஸூர்ய குலத்தில் உதித்த மன்னன் க்ருத வீர்யன் கேகய தேசத்தை ஆண்டு வந்தான். (இன்றைய Kazakasthan). அவனுக்கும் அவன் மனைவி ஸுனந்தை என்பவளுக்கும் கார்த்த வீர்யார்ஜுனன் என்னும் மகன் பிறந்தான்.

ஆனால், இரு கைகளும் இன்றிப் பிறந்தான். இதனால் எல்லோரும் மனம் உடைந்து இருந்தனர்.
கார்த்த வீர்யார்ஜுனன், தன் குறை நீக்கும்படி, அத்ரி மஹரிஷியின் வேண்டுதலால் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்த அவரது மகன் தத்ராத்ரேயரை, கைகள் வேண்டி உபாஸித்து வந்தான்.

உபாஸனையின் முடிவில் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. (ஆயிரம் கைகள் என அவனது பராக்ரமத்தைக் குறிப்பிட்டனர்.
ராவணனின் பத்து தலை போல, இதுவும் உருவகமே.) அதுமட்டுமல்ல.

அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோக, ஞான சக்திகளையும் அவன் பெற்றான். இதனால் மிகுந்த செருக்குடன் இருந்தான்.
தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான்.

ஒரு சமயம் நர்மதா நதியில் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி, அதில் நீராடி மகிழ்ந்தான்.
(இங்கும் இது அவனது அளவிட முடியாத புஜபலத்தைக் குறிப்பிடும் உருவகமே). நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்த இராவணன், பூஜை வேளை நெருங்கியதும், ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான்.

நீராடி முடித்ததும் கார்த்த வீர்யார்ஜுனன், தான் அணைபோல் வைத்திருந்த
தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது.

இதை அறிந்த ராவணன் கார்த்த வீர்யனோடு போரிட்டான். கார்த்த வீரியனோ ராவணனை தோற்கடித்து, தன் பட்டணமான *மாகிஷ்மதியில்* சிறையிலிட்டான்.
இதை அறிந்த மஹரிஷி புலஸ்தியர், கார்த்த வீர்யனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றார்.

இத்தகைய பராக்ரமஸாலியான கார்த்த வீர்யார்ஜுனன் ஒருநாள், தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். வேட்டை முடிந்து திரும்புகையில், பசியில் உண்ண உணவு கிடைக்குமா எனத் தேடியவர்கள்,
ஜமதக்னி முனிவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். பசியால் வாடியவர்களைக் கண்ட முனிவர், அறுசுவை உணவும், நீர்மோர் பானமும் கொடுத்து, அவர்கள் ஸ்ரமப் பரிகாரம் செய்து கொள்ளத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார்.

ஒரு ஏழை முனிவரின் ஆஸ்ரமத்தில் இத்தனை வசதிகளும், ஏராளமான செல்வமும்
இருப்பது கண்டு கார்த்த வீர்யனுக்கு பெரும் ஆஸ்சர்யம் ஏற்பட்டது. ஜமதக்னி முனிவரின் ஆஸ்ரமத்தில் காமதேனு என்னும் தேவபசு இருந்ததால்தான், அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்ட மன்னன்,

“இத்தகைய பசு, ஒரு ஸந்யாஸியான உங்களிடம் இருப்பதை விட, ஒரு அரசனான என்னிடம் இருந்தால்,
நாட்டு மக்கள் அனைவரையும் சந்தோஷமாக செல்வ வளத்துடன் வைத்துக்கொள்ள முடியும். எனவே, இந்தப் பசுவை எனக்கு பரிசாகத் தந்துவிடுங்கள்”

எனக் கேட்டான். ஆனால் முனிவரோ, மன்னனிடம் செல்வமும் அடியாட்களும் இருப்பார்கள். ஆனால், தன் போல் முனிவரிடம் பிக்ஷை என்றோ உதவி என்றோ வருவோர்க்கு
யாருமில்லை உதவ. ஆகையால், இப்பசுவைத் தானம் செய்ய முடியாது என்பதைத் தெரிவித்தார்.

இதனால் கோபமான கார்த்த வீர்யார்ஜுனன் சேவகர்களை அனுப்பி, முனிவரும் அவர் பிள்ளைகளும் ஆஸ்ரமத்தில் இல்லாத சமயத்தில் அதைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
முனிவர் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வந்தபோது காமதேனு இல்லாததைக் கண்டதும், கார்த்த வீர்யன்தான் அதைக் கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். தனது புதல்வர் பரசுராமரிடம் அதைக் கூறினார்.

Parashuramar Birth Place of Jaadhagni Ashram Source : naidunia.com/chhattisgarh/a…
(பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் தனது பர்ணசாலை அமைத்து வாழ்ந்து, கல்வி பயிற்றுவித்து, யக்ஞங்கள் செய்து, வந்தோரை உபசரித்து, வாழ்ந்த இடம் என்று புராணங்களில் குறிப்பிட்டுள்ள இடம். தேடிக் கண்டறிந்த இவ்விடத்தில் சிவலிங்கத்துடன் கூடிய சிதைந்த கோவில் கட்டமைப்பு உள்ளது.) Image
இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்த வீர்யார்ஜுனனின் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீர்யனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார்.

கார்த்தவீர்யனுடன் தனித்துப் போர் புரிந்தார். அதில் அவன், ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி, Image
அவர் மீது அம்புமழை பொழிந்தான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோபலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார்.

பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆஸ்ரமத்தில் தந்தையிடம் ஒப்படைத்தார். அங்கே என்ன நடந்தது என்பதை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார்.
அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

”ராமா! நேர்மையான காரணம் இன்றி மன்னனைக் கொல்வது என்பது, அந்தனனை வதைப்பதைவிடக் கொடுமையான அதர்மம். அவனை போரில் வென்று ரக்ஷித்து விட்டிருக்க வேண்டும். அதுவே ப்ராமண தர்மம். அந்தப் பொறுமையால் தான் பிறர் போற்றும் முன்னோடியாக இருக்கிறோம்.
எனவே, அதர்மத்தின் பாவம் தீர்க்க, நீ ஓராண்டுக்கு தீர்த்த யாத்ரைக்காக பல க்ஷேத்ரங்கள் சென்று, புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, பாவத்தைப் போக்க இறைவனிடம் தவமிருந்து மன்னிப்பு கேட்டு வா”

என்றார். அந்த அளவிற்கு தர்மம் கடைபிடிக்கப் பட்டது.
தவறே செய்தாலும், மன்னன் என்பதால், அவன் தவறை உணர வைத்து மன்னிப்பது தான் ப்ராமண தர்மம்.

இந்த இடத்தில், “மன்னன் மக்களை ரக்ஷிக்க நினைப்பதும் க்ஷத்ரிய தர்மம் தானே?” என்ற கேள்வி வரும். கண்டிப்பாக சரி தான். ஆனால், அவன் முனிவரிடம் கேட்டும் அவர் அளிக்க இயலாத காரணத்தைக் கூறிய பின்,
அதைக் கவர்ந்து சென்றது அதர்மம். மேலும், க்ஷத்ரிய தர்மத்தின் படி, ஒரு க்ஷத்ரியன் மற்றொரு க்ஷத்ரியனுடன் தான் போர் புரிய வேண்டும்.

ப்ராமணர்கள் வார்த்தையைக் கேட்டு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அந்தனர்களைத் துன்புறுத்தக் கூடாது. இது தான் அன்றைய க்ஷத்ரிய தர்மம்.
அதன் படி, கார்த்த வீர்யார்ஜுனன் அவற்றை மீறிவிட்டான். எனவே காமதேனுவை ரக்ஷித்துத் தந்தையிடம் சேர்ப்பிக்க, ப்ராமணன் போரிடக் கூடாது என்ற தர்மத்தை பரசுராமர் மீற வேண்டி இருந்தது. Image
தர்மத்தைப் பொறுத்த வரை, அதில் ஒரு ஸுக்ஷ்மம் உள்ளது. இதைப் புரிந்து கொள்வது சிறிது கடினம்.

அதாவது, ஒரு அதர்மம் நடைபெறுகிற போது, அதை தர்ம வழியில் எதிர்க்க வேண்டும். ஆனால், அங்கே அதர்மம் வலுவுடைத்து இருந்தால், அதை அதர்மத்தால் அழிப்பது தான் தர்மம்.
இன்று நாம் பார்க்கும் நீதி என்பது வேறு… தர்மம் என்பது வேறு... நீதி என்பது புத்தியினால் முடிவு செய்யப் படுவது… தர்மம் என்பது மனஸாக்ஷியினால் முடிவு செய்யப் படுவது…

நீதி என்பது, ஒரு அதர்மம் நடந்தால், அதன் இருபுறமும் விசாரித்து, அதில் யாருக்கு எந்த வகைத் தண்டனை வழங்க வேண்டும்
என முடிவெடுப்பது. உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். தற்போது சமீபத்தில் தீர்ப்பு வந்த நிர்பயா என்னும் மருத்துவ மாணவியின் கொலை…

ஒரு பெண்ணை நான்கு பேர் கதறக் கதறக் கற்பழித்து விட்டார்கள். ”சிறு வயது, அறியாமல் செய்துவிட்டேன்” எனக் கருணை மனு அளித்தவன்,
அவளது உயிர்வழியில் இரும்புக் கம்பியைச் செருகி இழுத்ததில், குடல் வெளியில் வந்துவிட்டது. அடித்துக் கொலை செய்யப்பட்டாள் அந்தப் பெண்.

இந்தச் சம்பவத்தை “நீதி மன்றம்” எனும் ஒன்று, இருபுறமும் விசாரித்து, ஏழு ஆண்டுகள் கழித்து, அதுவும் சமூகத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என
மக்களால் தொடர் போரட்டம் ஓயாமல் எழுந்த பின்னர், பொறுமையாக மரண தண்டனை விதித்தது.

இதுவே, அங்கே அருகில் அவள் தாயோ , தந்தையோ இருந்திருந்து, அவர்கள் யாரையாவது மகளைக் காப்பாற்ற வேண்டிய வேகத்தில் அடித்துக் கொலை செய்திருந்தால்,
”ஆயிரம் காரணம் ஆனாலும், தனி மனிதன் சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு… எனவே அவர்களும் தண்டனைக்குரியவர்கள் தான். ஆனால், நடந்த சம்பவத்தின் சூழ்நிலையால் அவர்களுக்கு குறைந்தபக்ஷமாக சில ஆண்டுகள் சிறை வாசம்” என்று தீர்ப்பு ஆகியிருக்கும்….

இது தான் நீதி என்பது.
ஏனெனில், நீதி என்பது புத்தியினால் முடிவு செய்யப் படுவது…

ஆனால் தர்மம் என்பது அப்படி அல்ல….

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2, 2025
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8, 2025
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24, 2025
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10, 2025
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4, 2025
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24, 2025
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(