🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱மிதிலையில் ராமன் 🌱

பின்னர், விஸ்வாமித்ரருடன் மிதிலை ராஜ்யம் சென்று, மிதிலை அரசன் ஜனகன், ஸீதையின் ஸ்வயம்வரத்திற்கு சவாலாக வைத்திருந்த சிவதனுஸு தனை, நாண் ஏற்றுகையிலேயே வில்லோடு முறித்தார்.
அவரது பராக்ரமத்தில் மனமகிழ்ந்த ஜனகர், தனது மந்திரிமார்களை தஸரதனிடம் நடந்தது கூறி, சம்மந்தத்திற்குச் சம்மதம் கேட்டுத் தூது அனுப்பினார்.

தஸரதனும் ராமன் பராக்ரமத்தால் மனம் மகிழ்ந்து ஒப்புதல் அளித்தான். ஒரு நல்ல நாள் குறித்து, குடும்பம், பரிவாரங்கள், மரியாதைகளோடு மிதிலை வந்தான்.
அங்கே ஜனகர் - ஸுநைனாவின் மகள் ஸீதையை ராமர் கரம் பற்றினார்.

கதை வால்மீகியின் வழி இருந்தாலும், தமிழில் கம்பன் சில இடங்களின் மிக அழகாக, நம் உள்ளமே கொள்ளை போகும்படி படைக்கிறான்.

Rama breaking Shiva's bow in the Hazare Rama Temple in Hampi. Image
வால்மீகியின் எழுத்தின்படி, ராமர் – ஸீதை ஒருவருக்கொருவர் திருமணம் வரை பார்க்கவில்லை.

ஆனால் கம்பனோ நகரில் நுழைகையிலேயே கன்னி மாடத்தில் ஸீதையை ராமர் காண வைக்கிறான். கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அவன் தரும் அழகிய பாடலைப் பார்ப்போம்.
எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுவழி
கண்ணொடுகண் இணைகவ்வி ஒன்றோடு ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள்!

(கம்ப ராமாயணம் - மிதிலைக் காட்சிப் படலம்)

ஸீதையினுடைய சகோதரி *ஊர்மிளை*யை *லக்ஷ்மணன்* மணந்தான். இதன் பின், தஸரதன் ஜனகரின் தம்பி
குஸத்வஜனின் மகள்களான *மாண்டவி*, *ஸ்ருதகீர்த்தி* ஆகியோரை முறையே *பரதன்*, *சத்ருக்ணன்* ஆகியோர்க்கு மணமுடித்து வைத்தார்.

பின்னர் சில தினங்களில் நாடே கொண்டாட, ஜனகன் விழிநீர் மல்கி வழியணுப்ப, மீண்டும் அயோத்தி திரும்பினார் நான்கு மறுமகள்களுடனும். Image
🌱ராமாவதாரத்தில் பரசுராமர்🌱

ராமர் சிவ தனுஸை உடைத்து, ஸீதையைத் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பரசுராமர், மிதிலைக்கு வந்தார். ராமரைப் பார்த்து,

“நான் ஜமதக்னி முனிவரின் புதல்வன். எனது தந்தையை கார்த்தவீர்யார்ஜுனன் என்னும் மன்னன் கொன்றான். அதனால் நான் க்ஷத்ரிய குலம்
தழைக்கத் தழைக்க, அவற்றை அழித்து, கஸ்யப முனிவருக்கு இப்பூமியை அளித்தேன். பின் மஹேந்த்ர பர்வதத்தில் தவமியற்றச் சென்றுவிட்டேன்.

ஆனால், நீ சிவ தனுஸை உடைத்த பராக்ரமம் குறித்து தேவர்கள் பெருமையோடு பேசித் திரிவதைக் கேட்டேன். சிவ தனுஸை உடைப்பது மிகவும் கடினமானது.
அதைச் செய்ததனால் நீ சிறந்த வீரன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என்னிடம், எனது தந்தை ஜமதக்னி அளித்த விஷ்ணுவின் *வைஷ்ணவ தனுஸு* உள்ளது. இதை நீ முறித்துக் காட்ட வேண்டும்.

இதை நீ முறித்தால், நீ பராக்ரமஸாலி என ஏற்று, உன்னுடன் போர் புரிவேன். ஒன்று, வைஷ்ணவ தனுஸை நாணேற்றி,
போரில் எனை வென்று காட்டு…. அல்லது நீ தோற்றாய் என ஒப்புக் கொள்…..”

எனக் கூறினார். ராமர், விஸ்வாமித்ரரை வணங்கி, குருவின் ஆசியுடன், வைஷ்ணவ தனுஸில் நாணேற்றினார். பின்னர் பரசுராமரை வணங்கி,

“தங்களின் தவ வலிமையும், பராக்ரமமும், எல்லா உலகும் ஸஞ்ஜரிக்கக் கூடிய திறமும் பற்றி
நான் கேள்வியுற்றிருக்கிறேன் ஐயனே… தாங்கள் என்னால் போற்றப்பட வேண்டிய அந்தனன் ஆவீர். மேலும், தாங்கள் விஸ்வாமித்ரரின் சொந்தமும் ஆவீர். எனவே, நான் தங்களைப் பணிகிறேன்… என்னை ஆஸீர்வதியுங்கள்!!

மேலும், உங்களோடு போரிட மாட்டேன். இத்தனைப் போற்றுதலுக்கு உரிய தாங்கள் அழியக் கூடாது.
ஆனால், அதற்கு பதில் வேறு எதில் நான் அஸ்த்ரத்தைக் குறி வைக்க என்பதைத் தாங்களே கூறுங்கள்…” எனப் பணிந்து நின்றார்.

பரசுராமரும், தான் பலதேசம் ஸஞ்ஜரிக்கும் வல்லமையை அழித்து விடக் கூறினார். அதன்படியே அவ்வல்லமை அழிந்து, ராமபாணம் பட்டதால், அவர் இன்னும் தேஜஸ் உடையவரானார்.
தனது அஹங்காரமும் கோபமும் முற்றிலும் அழிந்து, ராமரிடம் சரணடைந்து, மீண்டும் மஹேந்த்ர பர்வதத்திற்கே தவமியற்றச் சென்று விட்டார்.

Ramar meeting Parasuramar and other sages, while returning from Mithila after marrying Sita Devi. Image
ஸீதை மஹாலக்ஷ்மியின் அவதாரம். ஒரு முறை ஜனகனின் மிதிலா தேசத்தில், அரசரின் நிலத்தில் ஒருவர் ஏர் கொண்டு நிலத்தை உழும்போது, ஏர் முனையில் ஒரு பெட்டி தட்டுப்பட்டது.

அதைத் திறந்தால், அதில் ஒரு அழகிய பெண் குழந்தை இருந்தது. அதை ஜனக மன்னனிடம் ஓடி வந்து அளித்தார்.
குழந்தை இன்றி வாடிய மன்னனுக்குக் கிடைத்த அந்தக் குழந்தையை ஜனகர், தானே தத்தெடுத்துக் கொண்டார். கலப்பையின் முனைப் பகுதிக்கு *ஸீதே* என்று பெயர்.

அதில் பட்டுக் கிடைத்ததால் இக்குழந்தைக்கு *ஸீதை* எனப் பெயரிட்டனர். ஜனகரின் புதல்வி ஆனதால் ஜானகி எனப்பட்டாள்.
மேலும், தந்தை தாய் யாரென உருவமே தெரியாது. எனவே தேகம் அறியாத பெற்றவராகக் கணக்கில் கொள்ளப்பட்டனர் அவளது பெற்றோர்.

ஆதலால், அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்பதால் வைதேஹி (வி + தேஹம் = தேகம் அறியாதவர்) எனவும் பெயருண்டு என்கின்றனர் சிலர்.
பூமியில் கிடைத்ததால் பூமாதேவியை அவளது தாயாராகப் போற்றினர்.

மகன்களின் திருமணம் நடந்தேறி, ஸீதை நாட்டில் ப்ரவேசித்த பின்னர், சில காலம் கழித்து, இனியும் ராமனை இளவரசனாகவே வைத்திருக்கக் கூடாது என முடிவு செய்தார். சபையோர், பெரியோர், குரு ஆகியோரின் ஆலோசனையின் பேரில்,
தஸரதர் ஸ்ரீராமருக்கு யுவராஜப் பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் செய்தார். அப்போது பரதனும் சத்ருக்ணனும் *ராஜக்ருஹம்* என்னும் நகரத்தில், தனது தாய்மாமன் அகத்திற்குச் சென்றிருந்தனர்.

கைகேயியின் தோழி மந்தரை (எ) கூனி, கைகேயியிடம், அவளது மகன் பரதனுக்கே யுவராஜ பட்டம்
தர வேண்டும் எனக் கேட்கச் சொன்னாள். கைகேயி ஒரு முறை, தஸரதன் போரில் வென்றிட, அவனது சாரதியாக இருந்து உதவிய போது வெற்றி வாகை சூடிய தஸரதன், “வேண்டும் வரம் கேள்” எனக் கைகேயியிடம் கூற, “தேவைப்படும் பொழுதில் கேட்கிறேன்” எனக் கைகேயி பதில் உரைத்திருந்தாள்.
அதைத் தற்போது கேட்கச் சொல்லி நினைவூட்டினாள் கூனி. மேலும், யுவராஜன் பதவி கிடைக்காத காரணத்தால் ராமன் தொந்திரவு செய்தால் என்ன செய்வது என்பதால், அதன் கூடவே, ராமன் 14 வருஷங்கள் ஆரண்ய வாஸம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்கச் சொல்லி வற்புறுத்தினாள்.
முதலில் மறுத்த கைகேயியும், பின்னர் ஒப்புக் கொண்டு, தஸரதனிடம் அவ்வரத்தைக் கேட்டாள். தசரதன் தன்னால் தர முடியாத வரம் இது என்பதால், கைகேயியிடம் கெஞ்சினான்.

பரதனுக்கு யுவராஜப் பட்டாபிஷேகம் வேண்டுமானாலும் செய்கிறேன்; ஆனால் அப்பாவியான ராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கதறினான்…
ஆனால், தன் முடிவில் கைகேயி பிடிவாதமாக இருந்தாள். இதை அறிந்த ராமர், தனது தமையன் யுவராஜனாவதில் தனக்கு மகிழ்ச்சி தானே ஒழிய துக்கம் இல்லை.

மேலும், தன்னை மிகவும் அன்போடு வளர்த்த தாய் கைகேயி… ஆதலால், அந்த தாயின் ஆசையை நிறைவேற்றுவது தான் தர்மம் எனக்கூறி, தந்தையை சமாதானம் செய்தார்.
கோஸலை இதைக்கேட்டுக் கதறினாள். ராமன் தன் தாயிடம், தந்தையின் வாக்கைக் காக்க வேண்டியது தனது கடமை என்பதை உணர்த்தி, அவளைச் சமாதானம் செய்தான்.

”இப்படி ஒரு வரத்தைக் கொடுத்த தந்தையைக் கொல்லப் போகிறேன்” எனத் துடித்த லக்ஷ்மணனுக்கு அறிவுரை கூறினார்.
ஆனால், பால்யம் முதற்கொண்டே ராமன் – லக்ஷ்மணன்; பரதன் – சத்ருக்ணன் ஆகியோர் சேர்ந்து இருந்தனர். அதனால் ராமரைப் பிரிய முடியாத லக்ஷ்மணர் தானும் அவருடன் கிளம்பினார்.

தனது மனைவி ஊர்மிளையை, பெற்றோரைத் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ள இருத்தி விட்டு,
ராமர் மற்றும் ஸீதா தேவியுடன் கானகம் புறப்பட்டார். மரவுரி எனப்படும் காவி வஸ்த்ரம் அணிந்து, ஆபரணக்கள் தவிர்த்து, துளசி மாலை மட்டும் அனிந்து அவர்கள் புறப்பட்டனர்.

அவரைத் தொடர்ந்த நாட்டு மக்களை அவர், தர்மத்தை எடுத்துக்கூறி நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்.
தனது நாட்டில் இருந்து சிறிது மண்ணை, தினமும் பூஜிப்பதற்காக எடுத்துச் சென்றார்.

ராமருடன் காட்டிற்குக் கிளம்பிய நகரத்தாரை திருப்பி அனுப்ப, ஓரிடத்தில் ஓய்வுக்குத் தங்குவது போல் ராமரும் மற்ற இருவரும் தங்கினர். பின், விடிவதற்குள் அவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
தேரை வேறு திசையில் செலுத்திச் செல்ல ஸுமந்த்ரருக்கு ராமர் கூறியதால், எழுந்து ராமரைக் காணாத மக்கள், தேர்ச்சக்கரம் வேற்று திசையில் செல்வது கண்டு, அவரை இழந்துவிட்டோம் என அழுதுகொண்டே அயோத்தியை அடைந்தனர்.

இதனிடையே நடந்தது அணைத்தும் அரிய வந்த அயோத்தி மக்கள் அனைவரும் கைகேயியை சபித்தனர்.
இதனால், அயோத்தி பொலிவிழந்து போனது. ராமரைப் பிரிந்த துயர் தாங்காத தஸரதர், நிலை குலைந்து படுக்கையில் வீழ்ந்தார். பார்க்கும் இடமெல்லாம் ராமரைத் தவிர வேறொன்றும் காண முடியாதவர், இந்நிலைக்கு ராமரை ஆளாக்கிய கைகேயி,

Ramayana Scenes, depicted at Parambanan, Indonesia. Image
தான் மரணித்தால் தன்னைக் காணக்கூடாது எனக் கூறி விட்டார்.

🌱குஹனின் நட்பு 🌱

*ஸ்ருங்கவேரபுரம்* என்னும் இடத்தில், ராமரின் ஆத்ம, பால்ய ஸ்நேகிதனான குஹன் என்பவன் இருந்தான். இவன் ஸ்ருங்கவேரபுரத்து அரசன். *நிஷாதர்* என்னும் வகுப்பைச் சேர்ந்தவன்.
அரசன் மகன் என்பதால், அவனும் வசிஷ்டரிடம் குருகுலம் பயின்றான். (நிஷாதர்கள் என்பவர்கள் நீர்நிலை, காடு போன்றவற்றின் அருகே ராஜ்யம் அமைத்து வாழ்ந்தவர்கள். அவர்களையே வேடுவத் தலைவர்கள் என்கின்றனர் தமிழ் உரையில்.)

அவன் ராமனைக் கண்டதும் இறுகித் தழுவி, “ஸ்நேகிதரே, நீர் வந்ததால் இன்று இந்த
ஸ்ருங்கவேரபுரமும் அயோத்தி போல் ஆனது…”

எனக்கூறி மகிழ்ந்தான். மேலும், அவர்கள் மூவரையும் உபசரித்து, அவர்கள் உண்பதற்கு அண்ணம், கிழங்கு வகைகள், பழரசம் ஆகியவற்றை அளித்தான். ராமன் துறவறம் மேற்கொண்டதால் அவற்றை ஏற்கவில்லை. சிறிது நீர் மட்டும் போதும் எனக்கூறி, நீரை மட்டும் பருகினார்.
மூவரும் அன்று அங்கேயே ஓய்வெடுத்தனர். தரையில் படுத்து உறங்கினர். லக்ஷ்மணன் காவல் புரிந்தான். அடுத்த நாள் குஹன் அவர்களை கங்கையின் மறுகரையில் கொண்டு சேர்த்தான்.

அயோத்தி திரும்பிய பரதன் நடந்தது அறிந்து மனம் குமைந்தான். தாயின் தவறுக்கு அவளைத் தூற்றினான்.
இனி இறக்கும் வரை தாய் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று கூறினான். அதற்குள் தஸரதன் ராமனின் நினைவால் வாடித் துயருற்றான்.

பரதன் தந்தையிடம், மீண்டும் தமையனை அழைத்து வந்து சிம்மாஸனத்தில் ஏற்றுவேன்; அதில் தனக்கு உரிமை இல்லை அதனால் என்றும் சிம்மாஸனத்தில் அமர மாட்டேன் என ஸத்யம் செய்தான்.
தஸரதன் உயிர் பிரிந்தது. ஈமக் கடன்களை முடித்த பரதன் சத்ருக்ணனுடன், அண்ணனைத் தேடிப் பரிவாரங்களுடனும், மக்களுடனும் புறப்பட்டான்.

குஹன் ராமரை ஆற்றின் மறுகரை கொண்டு சேர்த்தது கேள்விப்பட்டு அங்கே ஓடினான். அங்கே பரத்வாஜ மஹரிஷியை அவரது ஆஸ்ரமத்தில் சந்தித்தான்.
ராமர் அங்கிருந்த *மந்தாகினி நதி*யின் அருகே *சித்ரகூடம்* என்னும் இடத்தில் இருக்கிறார் எனக் கூறி, முனிவர் பரதனை ஆஸீர்வதித்தார்.

சித்ரகூடத்தில் ராமர், அவ்விடத்தின் அழகு பற்றி ஸீதையிடமும் லக்ஷ்மணனிடத்திலும் பேசிக் கொண்டிருந்தார். மேலும், லக்மஷ்ணன் கேட்டதன் பேரில்,
தாடகா வதம் பற்றியும், ஸுபாஹூவை *ஆக்ஞேய அஸ்த்ரம்* ஏவிக் கொண்றதையும் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு அவரைத் தேடி வந்த பரதன், அண்ணனைக் கண்டதும், ஓடி வந்து அவரது காலில் வீழ்ந்து கதறினான். தாய் செய்த குற்றத்திற்கு தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.
அங்கே நடந்ததையும், தந்தை இறந்த செய்தியையும் கூறினான். தந்தை இறந்தது அறிந்த ராமர், தனது தந்தைக்கு ஈமக்ரியைக்கான தர்ப்பணங்களை மூத்தவன் எனும் முறையில் செய்தார்.

கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்பதால், திரும்பி வர இயலாது என்பதை பரதனுக்கு எடுத்துக் கூறினார்.
அண்ணனை அழைத்து வர இயலாத பரதன், ராமரின் பாதரக்ஷைகளைப் பெற்றுக் கொண்டான்.

“இனி இதுவே அயோத்தி சிம்மாஸனத்தில் வீற்றிருக்கும். இதை சக்ரவர்த்தியாக வைத்து, நான் ஒரு சேவகனாக இருந்து நீங்கள் திரும்பி வந்து ராஜ்யம் ஏற்கும் வரை சேவகம் செய்வேன்; அரச வாழ்க்கை அனுபவிக்க மாட்டேன்;
தாங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே ஒரு ஸந்யாஸ வாழ்க்கை மட்டுமே வாழ்வேன்”

என உறுதியுடன் ஸத்யம் செய்தான். ராமரின் பாதரக்ஷைகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு, கண்ணீரோடு நாடு திரும்பினான்.

Bharathan taking Sri Raamaa’s Padharaksha on his head, Badrachalam, Andhra Pradesh. Image
அயோத்தி திரும்பியவன், அண்ணனுக்கு இணையாக அவரது பாதரக்ஷைகளை சிம்மாஸனத்தில் இருத்தி, தான் ஒரு சிறு குடிலில் தங்கி, காய், கனிகளை உண்டு, தரையில் படுத்து, காவி வஸ்த்ரம் மட்டும் தரித்து ஸந்யாஸியாகவே வாழ்ந்தான்.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2, 2025
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8, 2025
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24, 2025
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10, 2025
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4, 2025
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24, 2025
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(