நமக்கு வேற வழி இருக்கா என்ன?
வாங்க பழகலாம் கொரோனாவோடு வாழ!
#கொரோனாவோடுகல்யாணம்
எத்தனை வயசானாலும் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் எங்களுக்கு பையன் தான் )
பொண்ணு பார்த்தாங்க பார்த்தாங்க பாத்துக்கிட்டே இருந்தாங்க
திடீர்னு ஒரு நல்ல இடம் (think positively ) அமைஞ்சது
இது கொரோனா காலம் கல்யாணத்த முன்ன மாதிரி (பஸ்ஸே விட்டாங்க ஊர்ல இருக்கறவங்களுக்கு கல்யாண மண்டபம் வர... அதெல்லாம் ஒன்ஸ் அப்பான் எ டைம் )
Limited circleக்கு மட்டும் நேர்ல பத்திரிகை கொடுத்தாங்க
Using the technology in an opt way
கல்யாண மண்டபம் தான் கிடைக்காதே...
டாக்டர்ஸ்... மண்டபம் எதுக்கு இருக்கு
அங்கே காவல்துறை கிட்ட அனுமதி வழிகாட்டுதல் எல்லாம் வாங்கி...
#கொரோனாவோடுகல்யாணம்
Batch batchஆ சொந்தங்கள் நட்புகளைப் பிரித்து டைம் ஒதுக்கி அந்த நேரம் வந்துட்டு போற மாதிரி... ஏன்னா கூட்டம் கூடக் கூடாதுல
#கொரோனாவோடுகல்யாணம்
Lockdown ஆகறதுக்கு முன்னால வெளியே போனது...
மாஸ்க் போட்டு முகமூடி கொள்ளக்காரவுக மாதிரியே 🤣🤣 கெளம்பியாச்
கல்யாணம்ன்னா வரவேற்புல பன்னீர் தான தெளிப்பாங்க
Hand sanitizer தெளிச்சாங்க வரிசையா வாங்கிக்கிட்டோம்
#கொரோனாவோடுகல்யாணம்
முந்தி எல்லாம் வர்றவங்க கை நிறைய அள்ளுவாங்க
இப்ப வேணாம்மா னு ஓ மை கடவுளே அசோக் செல்வன் மாதிரி ஒரு கும்புடு போட்டு நகர்ந்தாச் 🤣🤣
#கொரோனாவோடுகல்யாணம்
பந்தில கொஞ்சப்பேர் தான் (அதான் டைம் சொல்லி வச்சாச்சே) பரிமாறுறவங்க மாஸ்க் போட்டும் சாப்பிடுறவங்க மாஸ்க்க மடில வச்சிக்கினும்...
வழக்கமான மெனு தான்...
#கொரோனாவோடுகல்யாணம்
போய் ஆளுக்கொரு புள்ளியல உட்கார்ந்தோம்
#கொரோனாவோடுகல்யாணம்
தாத்தாவே போட்டாரு தாய்மாமன் மாலைய (எந்த ஒரு ரூல்ஸ்க்கும் ஒரு உட்பிரிவு விலக்கு இருக்கும்ல)
#கொரோனாவோடுகல்யாணம்
கெட்டிமேளம் சொல்லாம... கேட்காம...
தாத்தா பாட்டி தாலி எடுத்துக் கொடுக்க...
லைவ் ரிலே ஆனது வெளியூர்ல இருந்த வர முடியாம போனவங்களுக்காக மேடையில் இருந்து
#கொரோனாவோடுகல்யாணம்
அதான் ஒவ்வொரு குடும்பமா போய் குரூப் போட்டோ எடுப்போமே அதுதான்...
மாஸ்க்க கழட்டுங்க அடையாளம் தெரியவேணாமா - போட்டோகிராபர்
#கொரோனாவோடுகல்யாணம்
இந்த புடவை நல்லா இருக்குடா
யக்காவ் 2வருசம் முன்னால மாமா பையன் கல்யாணத்துல கட்டின அதே புடவைதான் இதுனு வார...
அப்ப கூட்டத்தில இதையெல்லாம் எங்க கவனிச்சோம்னு சமாளிபிகேஷன் இல்ல அதான் நெசமும்
#கொரோனாவோடுகல்யாணம்
தாம்பூலப் பை வாங்கின பிறகு... (போறப்ப கர்சீப் மொபைல் தவிர எதுவும் எடுத்துட்டு போகல)
கடைசியா மறுபடியும் Hand Sanitizer தெளிப்பு வாங்கி...
#கொரோனாவோடுகல்யாணம்
இதோட முடிஞ்சதுனு நினைச்சீங்களா நோநோ
#கொரோனாவோடுகல்யாணம்
தாம்பூலப் பை வாசல் பக்கத்தில வச்சாச்
பட்டுப்புடவை தனியா (ஒருவாரத்துக்கு அத தனிமைப்படுத்திடுவோம்ல)
மத்த துணிகளை சோப்பு போட்டு ஊற வச்சாச்
#கொரோனாவோடுகல்யாணம்
நாங்களும் ஹெட்பாத் எடுத்து #கொரோனாவோடுகல்யாணம் இனிதே முடிந்தது
மொபைலுக்கு பிளாஸ்டிக் கவர் (பிளாஸ்டிக்கும் நல்லது செய்யுதே தட் மைனஸ் இன்டு மைனஸ் இஸ் பிளஸ் மொமண்ட் )
வீட்டுக்கு வந்ததும் அந்த கவரையும் சோப்புத்தண்ணீல குளிப்பாட்டி காயவச்சாச்
#கொரோனாவோடுகல்யாணம்