🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱ராவணன் வருகை🌱

லக்ஷ்மணன் வெளியேறியதும், ராவணன் ஒரு துறவி வேடமிட்டுக் குடிலின் வாசலில் வந்து நின்று, ஸீதையிடம் பிக்ஷை கேட்டான். ஸீதை அவனுக்குக் கால் அலம்ப ஜலம் அளித்து, உள்ளே வரும்படி அழைத்தாள்.
ராவணனும் குடிலுக்குள் நுழையப் பார்த்தான். ஆனால் லக்ஷ்மணன் இட்ட கோடு, அவனை நுழைய விடாமல் சுட்டது. அதனால் அவன் வெளியில் நின்றுகொண்டு, ஸீதையை வந்து பிக்ஷை இடும்படிக் கேட்டான்.

வயதான அந்தனர் என்பதால், ஸீதை தன்னிடம் இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு பிக்ஷையிட வந்தாள்.
அவள் கோட்டுக்குள் நின்று கொண்டு,

“அந்தனரே… பிக்ஷை ஏற்க வாருங்கள்….”

என அழைத்தாள். ஆனால் ராவணனோ,

“நான் மிகவும் களைத்துள்ளதால் எழ முடியவில்லை அம்மா. எனது இந்த பாத்திரத்தில் நீயே வந்து பிக்ஷையை இட்டுவிடு”

என்று வேண்டினான். அவனது ஸூக்ஷ்மம் புரியாத ஸீதை,
லக்ஷ்மண்ரேகாவைத் தாண்டி வந்தாள். அவ்வளவு தான்… ராவணன் ஸீதையைத் தனது புஷ்பக விமானத்தில் கடத்திக் கொண்டு பறக்க ஆரம்பித்தான்.

ராவணன் கையில் அகப்பட்ட ஸீதை அவனிடம், தான் ராமனின் மனைவி என்பதைக் கூறி விடுவிக்குமாறு வேண்டுகிறாள். ராமன் வந்தால் பிற அஸுரர்களை த்வம்ஸம் செய்தது போல்,
இவனையும் அழித்துவிடுவான் என மிரட்டுகிறாள்.

“என்னை யாராவது காப்பாற்றுங்கள்…. எனது கணவர் ஸ்ரீராமரைக் கண்டால், ராவணனிடமிருந்து என்னைக் கப்பாற்றச் சொல்லுங்கள்…”

எனக் கதறியபடி, வழியில் எல்லாம் அநுஸூயா அளித்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக வீசுகிறாள்;
தன் கணவன் தேடி வந்தால் எந்த வழியில் போனதாகத் தெரிய வேண்டும் என்று. அவளை அபகரித்துச் செல்வது கண்ட ஜடாயு ராவணனுடன் போரிடுகிறது.

ராவணன் ஜடாயுவின் இறகுகளை வெட்டி விடுகிறான். அது வீழ்ந்து மரணித்த இடம் தான் “லே பக்ஷி” (Le Pakshi) எனப்படும். (இன்று சுற்றுலாத் தலமாக உள்ளது.)
இது ஆந்திர மாநிலத்தில், கர்நாடகத்தின் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ளது.

வானில் இருந்து ஸீதை தூக்கியெறிந்த நகைகளை ஆரண்யத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த வானரங்கள் எடுத்து வந்து ஸுக்ரீவனிடம் காட்டி, ஒரு பெண் தன்னைக் காக்கச் சொல்லி அழுதுகொண்டே வானிலிருந்து இவற்றை வீசி எறிந்தாள்
எனக் கூறுகின்றன. அவற்றைக் கண்ட ஸுக்ரீவன், இவை உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்கள் அணியும் நகைகள்.

ராமரும் தென்திசைக்கு வனவாசம் மேற்கொண்டுள்ளார். அப்படியானால், அது ஸீதா தேவியாக இருக்குமோ என சந்தேகித்து, அந்நகைகளைப் பத்திரப் படுத்தி வைத்தான்.
அதே சமயம் குடிலுக்குத் திரும்பிய ராம-லக்ஷ்மணர்கள் ஸீதை கானாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஸீதையின் பாதச் சுவடும், மேலும் ஒரு சக்கரத்தின் அச்சு போல் சிறிது தூரமும் செல்வது கண்டு, அதைத் தொடர்ந்து சென்றனர்.

பின்னர் வழி தெரியவில்லை. ஸீதையைத் தேடி வருகையில் ராம சகோதரர்கள்,
ஜடாயுவை் உயிர்பிரியும் நிலையில் கண்டனர். ராமரைக் கண்ட ஜடாயு, தான் பக்ஷிராஜன் ஜடாயு என்றும், தஸரதனின் ஸ்நேகிதன் என்றும் கூறியது.

பஞ்சவடியிலிருந்து, ராவணன் ஸீதையே தூக்கிச் சென்றதைக் கூறி, அவன் போக வேண்டிய திசையயும் கூறியது. நடந்ததைக் கூறிய பின், ராமர் கையில் உயிர் நீத்தது.
அது மரணித்ததும், ராமர் அதற்கு ஈமக்கிரியைகள் செய்து மோக்ஷம் அளித்தார். (இன்றும் லே பக்ஷியில் அதற்கான சான்றுடன் கூடிய கோவிலும் உள்ளது).

பின்னர் அவர்கள் ஜடாயு சொன்ன திசையில், காடுகளில் தேடத் துவங்கினர். காட்டில் புதிதாக இரு மனிதர்கள் அலைவதைக் கண்ட வானரங்கள் ஸுக்ரீவனிடம்,
இரு மானிடர்கள் காடுகளில் ஏதோ தேடி அலைகின்றனர் எனும் விஷயத்தைச் சொன்னார்கள். அது ராமபிரான் தான் என முடிவு செய்த ஸுக்ரீவன், கையில் வானரங்கள் தந்த ஆபரணங்களையும் எடுத்துச் சென்றான்.

ராமரைக் கண்டு வணங்கி, தான் யாரென்பதைக் கூறி அறிமுகம் செய்து கொண்டான்.
பின்னர் வானரங்கள் சொன்ன விஷயத்தைச் சொல்லி, ஆபரணங்களைக் காட்டினான். ராமன் பதறிப்போய் அதை லக்ஷ்மணனிடம் காட்டி,

”இவை உன் அன்னியாரின் நகைகளா பார்…”

எனக் கேட்டதற்கு, அதில் இருந்த தண்டையை மட்டும் அடையாளம் கண்டுகொண்ட லக்ஷ்மணன்,

“அண்ணா… இந்த தண்டை அன்னியுடையது தான்.
தினமும் நான் அவரது பாதத்தில் வீழ்ந்து வணக்குவதால், இது மட்டும் அடையாளம் தெரியும். பிற நகைகள் தெரியவில்லை…”

என அழுதான். அவளது ஆரம், சூடாமனி இவற்றை அடையாளம் கண்ட ராமன், ஸுக்ரீவனிடத்தில் அவளை கடத்திச் சென்றது யார், எங்கே இருப்பாள் என்னும் விபரம் அறிந்து சொல்ல வேண்டினான்.
🌱ஹனுமத் ப்ரயத்தனம் 🌱

அதன்படி, ஸுக்ரீவனுடன் இருந்த ஹனுமான், அவன் ராவணன் என்பதை அறிந்து, இலங்கை சென்று ஸீதையைத் தேடினார்.

Hanuman finds Sita. It is from one of Angkor Wat’s many sequential stone wall carvings that depict key scenes from the Ramayana epic. Image
இறுதியில், அஸோகவனத்தில் (தற்போதைய Ashok Vaatikaa) ஒரு பெண் தனிமையில் அழுதுகொண்டிருப்பது கண்டு, அது ஸீதாதேவியாக இருக்குமோ என சந்தேகித்தார்.

அதை நிரூபணம் செய்து கொள்ள, “ஜெய் ஸ்ரீராம்” எனக் கூறினார். அந்தப் பெயரைக் கேட்டதும், ஸீதை மகிழ்ந்து கணவன் பெயரைச் சொன்னது யார் எனத் தேடினாள்.
இதனால், அதுதான் ஸீதாதேவி என உறுதி செய்து கொண்ட ஹனுமான், ராமர் அளித்த கணையாழியை ஸீதையிடம் காட்டி, “நான் ராமரின் தூதுவன் ஹனுமான். என்னோடு வாருங்கள் தாயே…” என வணங்கி நின்றார்.

Shriraam giving Abhigyan (Ring) to Hanuman for identification to show to Sita Devi. Halebid, Karnataka. Image
அதுகண்டு மகிழ்ந்த ஸீதை, ராம லக்ஷ்மணர்கள் பற்றிய நலனை விசாரித்தாள். தான் செய்த தவறுக்கு வருந்தி அழுதாள். பின் ஹனுமானிடம்,

“என்னவர் வந்து இந்த மூர்க்கனைக் கொன்று என்னை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் காத்திருப்பேன் எனக் கூறுவாயாக...” என்றாள்.
“விரைவில் தாங்கள் சொன்னபடி வந்து அழைத்துச் செல்வார்” என ஹனுமன் உறுதி அளித்தார்.

அங்கே ஸீதைக்குத் துணையாக, த்ரிஜடை என்னும் பெண் இருந்தாள். அவள், ராவணன் செய்வது தவறு என ஒப்புக்கொண்டு,

Thrijada with Sita, while Hanuman meets sita, Parambanan, Indonesia. Image
“உனது தாய் போல நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்… உன் கணவன் வரும்வரை நான் துணையாக, உனக்குப் பாதுகாப்பாக இருப்பேன்...”

எனக்கூறி ஸீதையுடன் இருந்தாள். எப்போதும், அவளுக்கு நல்ல தர்மங்கள் தோற்பதில்லை என்பதைக் கூறி தைர்யம் தருவாள்.

Ashok Vaticaa where Ravana Kept Sita finally. Image
லங்கையிலிருந்து திரும்பிய ஹனுமான், அங்கு ஸீதாதேவியைக் கண்டது முதல், நடந்தவை எல்லாம் ஸுக்ரீவனிடத்தும் ராம சகோதரர்களிடத்தும் கூறினார். தேவி எப்போதும் சிந்திய கண்ணீருடன் இருப்பதையும் கூறினார்.

அதைக் கேட்ட ராமர், முதலில் போர் வேண்டாம் என்பதால் தூது அனுப்ப முடிவு செய்தார்.
ராமரின் உத்தரவின் பேரில், ஸுக்ரீவன் ஹனுமனை ராவணனிடம் தூதுவனாக அனுப்பினார்.

தனது தவறைத் திருத்திக் கொண்டு, ஸ்ரீராம பிரானிடம் ஸீதையை மீண்டும் ஒப்படைக்கச் சொல்லியும், இல்லாவிடில் ராமபிரானைப் போரில் சந்திக்க நேரிடும் என்பதையும் ராவணனிடம் கூறச் சொன்னார்.
அவ்விதமே ஹனுமன் தூது போனதும், அவருக்கு தூதுவருக்குத் தரவேண்டிய ஆசனம் கூட அளிக்காது, வாணரம் தானே… என நினைத்து ராஜ்யசபையில் நிற்க வைத்துப் பேசினான் ராவணன்.

Bhatkal Temple Sculpture. Hanuman meets Ravana in his palace & sitting in a high place by making his tail as chair. Image
தனது வாலையே சுற்றிவைத்து உயர்ந்த ஆசனமாக்கி, அவனைவிட உயர்வாக அமர்ந்து, ராவணனிடம் சமாதானமாகப் போகும்படி ஹனுமன் பேசினான்.

ராவணன் அதனைக் காதில் ஏற்கவில்லை. மாறாக, அவன் சேனைகள் ஹனுமன் வாலில் தீயை வைத்தனர். சிரித்தபடி அந்தத் தீயைக் கொண்டு, அவன் நகரத்தையே எரித்த ஹனுமன்,
ஸுக்ரீவனிடத்தில், அவன் தேவியை விட மறுப்பதைச் சொன்னார்.

ராம பக்தனான ஹனுமனுக்கு கம்பன் ஒரு காப்புச் செய்யுள் இயற்றியிருப்பார். கம்பனின் எழுத்தழகிற்கு இது இன்னொரு ஒரு எடுத்துக்காட்டு.

”ஐந்திலே ஒன்று பெற்றான் ஐந்திலே ஒன்றைத் தாவி
ஐந்திலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அனங்கைக் கண்டு – அயலாரூரில்
ஐந்திலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்!”

வாயு பெற்றவன், கடல்நீர் தாண்டி, ராமருக்காக ஆகாயத்தில் சென்று, நிலமகளைக் கண்டு, தீயை வைத்தான்–ஹனுமான்; அவன் எல்லா வளமும் அளித்தெமைக் காப்பான் என்பதே இக்காப்புச் செயுளின் பொருள்.
Ussangoda Ravana Palace which was burnt by Hanuman. Sculpture of ravana in front of the palace wall. Image
இதனிடையே ஸுக்ரீவனின் அண்ணன் *வாலி*, கிஷ்கிந்தையை ஆண்டு வந்தான். அவன் மனைவி *தாரை*. வாலி, தம்பி *ஸுக்ரீவன்* மனைவி *ருமை*யை அபகரித்துக் கொண்டு, தம்பியை நாட்டை விட்டு விரட்டினான்.

ஸுக்ரீவனுடன், அவன் மகன் அங்கதன், ஹனுமன், ஜாம்பவான், என சிலரும் இருந்தனர்.
ராமர் அவன் கதையக் கேட்டு, உன் மனைவியை மீட்டுத் தருவேன் என வாக்களித்தார். வாலியுடன் போரிடுவதில் ஒரு சிறு ப்ரச்சனை இருந்தது.

Tympanum from the Khmer temple of Banteay Srei depicts Sugriva fighting with his brother Bali. To the right, Rama is poised to shoot an arrow at Vali. Image
”தன் முன் யார் நின்று போரிட்டாலும், அவர் பலத்தில் பாதி தனக்கு வந்துவிட வேண்டும்” என வாலி ஒரு வித்தியாசமான வரத்தைப் பெற்றிருந்தான். அதனால் யாராலும் அவனை வெல்ல முடியவில்லை.

Depiction of Vaali – Sughreeva Dhwandha Yudham, Guimet Museum, Paris – 11 CE. Image
இதை அறிந்த ராமர் ஸுக்ரீவனிடத்தில்,

“நீங்கள் சென்று வாலியை த்வந்த யுத்தத்திற்கு (மல்யுத்தம்) அழையுங்கள். யுத்த அறைகூவல் விடுத்தால் அதை கண்டிப்பாக ஏற்று வாலி வருவான். பின் நான் அவனைக் கொல்கிறேன்…”

என்றார். அதன்படி, ஸுக்ரீவன் வாலியை த்வந்த யுத்தத்திற்கு அழைத்தான்.
ஸுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையே 12 நாட்கள் கடும் யுத்தம் நடந்தது. முடிவில் ராமர், ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்று, வாலியின் மேல் அம்பை எய்திக் கொன்றார்.

வாலி தன் மேல் அம்பு எய்தது ராமர் எனத் தெரிந்ததும், “உம்மை வீரபுருஷன் என நினைத்தேன்.
என்னில் மறைந்திருந்து அம்பெய்திக் கொண்றீரே ராமா….”

எனக் கேட்டான். ராமர் அமைதியாக இருந்தார். வாலி உயிர் பிரிந்தது. ஸுக்ரீவனுக்கு ராமர் பட்டாபிஷேகம் செய்வித்தார்.

இப்போது இலங்கைக்கு எப்படிச் செல்வது என்னும் கேள்வி வந்ததும், அவர்களுடன் இருந்த நளன் என்பவன்,
அதற்கான திட்டம் வகுத்துத் தந்தான். நளன் விஸ்வகர்மாவின் மகன், பொறியாளன். (Civil Engineer). வானர சேனைகள் உதவியுடன், நீரில் மிதக்கும் கல்லையும் மரக்கட்டைகளையும் கொண்டு, ஐந்தே நாட்களில் இலங்கைக்கு ஒரு பாலம் அமைத்தன.

அது ராமருக்காகக் கட்டப்பட்டதால் ராமசேது என அழைக்கப் பட்டது.
பின் வானரங்களுடனும் ஸுக்ரீவன் படைகளுடனும் ராம-லக்ஷ்மணர் இலங்கைக்குப் படையெடுத்தனர்.

ராமரின் தூதனாக மீண்டும் வாலி – தாரையின் மகனான *அங்கதன்* வந்து, தற்போதாவது ஸீதையை விடும்படிக் கேட்டான்.

Setubandha.Parambanan temple frieze. Image
ஆனால் ராவணன் அவனையும் இழிவு செய்து அனுப்பினான். ராவணனின் தம்பி விபீஷணன், அண்ணன் செய்வது தவறு என்பதைப் பலமுறை எடுத்துக் கூறினான்.

இத்தனை தர்மவானான அண்ணன், ஒரு பெண் மேல் கொண்ட மோகத்தால் அழிந்துவிடக் கூடாது என்பதை எவ்வளவோ எடுத்துக் கூறியும், ராவணன் மனம் மாறவில்லை.
இதனால், விபீஷணன் அண்ணனைப் பிரிந்து, “அதர்மத்திற்காகப் போரிட மாட்டேன். நான் தர்மத்திடம் செல்கிறேன்” எனக்கூறி ஸ்ரீராமரைச் சரணடைந்தான்.

🌱ராவணனுடன் மூண்டது போர்🌱

Angkor Wat. Rama and Hanuman launching an attack on Ravana. Plaster realized from a stamped clay moyuld.Guimet Museum. Image
ராவணனுக்கும் ராமருக்கும் போர் மூண்டது. வானரங்கள், அஸுர ஸைன்யங்களுடன் போரில் மோதின. ராவணன் போரில் வரிசையாக, தனது தூம்ராக்ஷன், வஜ்ராதம்ஷ்ட்ரன், அஹம்பனன், சேனாதிபதி ப்ரஹஸ்தன், மந்திரி மஹோதரன், அதிகாயன்; மகன்கள் என ஒவ்வொருவராக இழந்தான்.

இறுதியாக கரன், தூஷணன் எனும் தம்பிகளை இழந்தான்.
தம்பி கும்பகர்ணனையும், இந்திரனையே வென்று இந்த்ரஜித் எனப் பெயரெடுத்த மூத்த மகன் மேகநாதன் என்பவனையும் இழந்தான். அப்படியும் அவன் மனம் மாறவில்லை. தானே போரில் இறங்கினான். போரில் லக்ஷ்மணனை நாகாஸ்த்ரத்தால் வீழ்த்தினான்.

Kumbhakarna battles Vanara sena. Angkor Wat. Image
துவண்டு போன ராமர், அவனது தலையை மடியில் வைத்துக் கதறினார்.

அதுகண்ட விபீஷணன், விரைவாக தனது ராஜ்ய வைத்யரை அங்கே அழைத்து வந்தான். வந்த மருத்துவர் லக்ஷ்மணனைச் சோதித்துவிட்டு,

“இதற்கு மருந்து இமயத்திலுள்ள ஸஞ்ஜீவனி மலையில் உள்ளது.

Hanuman, Jatayu, Lakshmana Bhatkal temple, 16th cent. Image
அந்த ஸஞ்ஜீவனி மூலிகையால் தான் இவரைப் பிழைக்க வைக்க முடியும். இல்லையெனில் சிறிது சிறிதாக ப்ராணன் குறைந்து உயிர் பிரிந்துவிடும், அதன்பின் காப்பாற்ற முடியாது”

என்றார். அந்த மூலிகைச் செடியின் அடையாளங்களைக் கேட்டறிந்த ஹனுமான், உடனடியாக இமயத்திற்குப் பறந்தார். ஆசி வேண்டி சிவனை வணங்கி,
ஸஞ்ஜீவனி மூலிகையை, மலையில் ஏறி தேடினார். அவருக்கு மூலிகை சரியாக அடையாளம் தெரியாததால், அப்பகுதியை மலையோடு பெயர்த்து எடுத்து வந்துவிட்டார்.

Hanuman Carrying the Mountain of Medicinal Herbs (left); Rama Battles Ravana (right), Image
Architectural Panel with Ramayana (Adventures of Rama) Scenes Madhya Pradesh, India, 10th cent. Los Angeles County Museum of Art.

(அவர் எடுத்து வரும் வழியில் வீழ்ந்த சில அரிய வகை மூலிகைகள் இன்றும் இலங்கையில் வளர்கின்றன.
அவை இமயம் தவிர, வேறு இடங்களில் பாரதத்தில் இல்லை என்பதை ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.)

மருத்துவர், விபீஷணன் உதவியுடன் மூலிகையை எடுத்து மருந்தாக்கி, லக்ஷ்மணனைப் பிழைக்க வைத்தார்.

Rumassala – a piece of the Rishabha Mountain from the Himalayas Image
ராமருக்கு இதனால் ராவணன் மேல் கோபம் அதிகம் ஆனது. தொடர்ந்த போரில் ஒரு நாள் ஆயுதங்கள் முழுதும் ராமனால் சிதைக்கப்பட்டு, நிராயுதபானியாக நின்றான்.

வால்மீகி இந்த இடத்தை மிக அழகாக வர்ணித்திருப்பார்.

Rama and Ravana War… Continued with severe anger… Halebeedu, Karnataka. Image
கச்சானுஜானாமி ரணார்திதஸ்த்வம்
ப்ரவிஷ்ய ராத்ரிம்சரராஜ லங்காம் |
ஆஷ்வஸ்ய நிர்யாஹி ரதீச தன்வீ
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ ||

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2, 2025
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8, 2025
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24, 2025
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10, 2025
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4, 2025
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24, 2025
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(