🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱இதிஹாஸம் பிறந்தது🌱

வால்மீகிக்கு ராமரின் வரலாறு எப்படித் தெரிந்தது?
அவர் எவ்வாறு அதை லவ – குசர்களுக்குச் சொல்லித் தந்தார்?

அதற்கொரு கதை உள்ளது.

த்ரிலோக ஸஞ்சாரியான நாரதர், *ஸங்க்ஷேப ராமாயணம்* என்னும் பெயரில்
100 ஸ்லோகத்தில் ராம சரிதத்தை வால்மீகி முனிவருக்கு போதித்தார். அது முதல், வால்மீகியின் மனதில் ராமசரிதையே ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் வால்மீகி, தனது சிஷ்யன் பரத்வாஜ முனிவருடன் தமஸா நதியில் ஸ்நானம் செய்ய வருகிறார். பரத்வாஜர் கையில் வல்கலம் (மரவுரி),
மான்தோல் முதலியவற்றுடன் பின்தொடர்கிறார். அப்போது அங்கே இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஆண் க்ரௌஞ்ச பக்ஷியை வேடுவன் ஒருவன் அம்பெய்தி கொன்றுவிட்டான்.

இதுகண்டு மனம் வலித்த வால்மீகியின் வாக்கிலிருந்து அவரையறியாது ஸ்லோகம் போல சில வார்த்தைகள் வெளிப்பட்டுவிட்டன.
அவர் வேடனைப் பார்த்து,

मा निषाद प्रतिष्ठाम्त्वं अगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एकमवधीः काम मोहितम् || १-२-१५

மா நிஷாத! பிரதிஷ்டாம்ப்த்வம் அகம: ஷாஸ்வதீ: ஸமா: |
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம் ||

என்றார். அதாவது,
“ஹே வேடனே! க்ரௌஞ்ச பக்ஷிகள் சந்தோஷமாக இருந்த போது, அதை அம்பெய்தி கொன்றுவிட்டாயே… நீ வெகுகாலம் இருக்க மாட்டாய்….”

என்பது போல் அர்த்தம் காட்டும். வேதனையில் சொன்ன வால்மீகி சட்டென்று உணர்வு மீண்டவர் போல் தன் சிஷ்யனிடம்,

“நான் ஏதோ ஸ்லோகம் சொன்னது போல் மனதில் படுகிறதே….”
என வினவினார். பரத்வாஜரும்,

“ ஆம் ஆச்சார்ய: தங்கள் நாவில் இருந்து அழகிய ஸ்லோகம் ஒன்று வெளிப்பட்டது” என்றார்.

மா – லக்ஷ்மி தேவி
நிஷாத: – கணவர் (மஹாவிஷ்ணு)
ப்ரதிஷ்டாம்த்வம் – பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
அகம – அஸாத்யமான
ஷாஸ்வதீ: – பூமி
ஸமா: – இணை
யத் – அந்த
க்ரௌஞ்ச – ராக்ஷஸன் என்றும் பொருள்
மிதுநாத் – தம்பதி
ஏகம் – ஒருவன்
வதீ: – வதைக்கப்பட்ட
காம – காமம்
மோஹிதம் – மோகத்தினால்

”பூமியில் ராக்ஷஸ தம்பதிகளிலேயே அஸாத்யமான இணையில்லாத ஒருவன், காம மேஹத்தினால் லக்ஷ்மிதேவியின் கணவர் மஹாவிஷ்ணுவால் வதைக்கப்பட்டான்.
அவனை வதைத்த ஹே ராமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ்க”

என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள் என ப்ரும்மா வால்மீகியின் முன் தோன்றி கூறினார்.

10,000 வருஷங்களுக்கும் மேலாக தவம் செய்வோருக்கு மட்டுமே தரிஸனம் தரும் ப்ரும்மா, வால்மீகியின் ராமநாம ஜபத்தின் வலிமையால் அவருக்கு தரிஸனம் தந்தார்.
அவரைக் கண்டதும் வால்மீகி மஹரிஷி, அர்க்யம், பாத்யம், ஆசமனீயம் தந்து பூஜித்து நமஸ்கரித்தார். ப்ரும்மா மனம் மகிழ்ந்து, வால்மீகியை அருகில் அமர்த்தி,

“யாமே ஸரஸ்வதி தேவியை உம் வாக்கிலே ஆவிர்பவித்திருக்கிறோம் (தோன்ற வைத்திருக்கிறோம்).

நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்ரத்தை
நீர் விஸ்தாரமாக, ஒரு காவியமாக்குங்கள்… அவரது சரித்ரத்தில் நடந்தவை அனைத்தும் உமது யோக சக்தியால் உமக்குத் தெரியும். அவர்களே மறந்து போனவை கூட உமக்குத் தெரிய வரும்…

ஒருவருக்கொருவர் தெரியாமல் நடந்தவை முதல், அவர்கள் ரகஸ்யமாகப் பேசியதும், சிரித்ததும், ஹனுமானின் ப்ரபாவமும்…
இப்படி எல்லாம் தெரிய வரும். அதை அப்படியே எழுதுங்கள். அதில் ஒரு பொய்யும் இருக்காது.

நீங்கள் எழுதும் இக்காவியம் மலை, நதிகள் பூமியில் உள்ளவரை இருக்கும். இக்காவியம் பூமியில் இருக்கும் வரை, நீங்கள் ப்ரும்ம லோகம் முதல் எல்லா லோகத்திலும் ஸஞ்சாரம் செய்துகொண்டு,
சிரஞ்ஜீவியாக இருப்பீர்கள்….
மம: ஆஸீர்வாதஸ்ய:”

என ஆஸீர்வதித்தார். மஹரிஷி மனம் நிறைந்து, பயபக்தியுடன் ப்ரும்மதேவர் கூறியபடி ஸ்ரீ ராம சரித்ரத்தை 24,000 ஸ்லோகங்களில் ஒரு காவியமாக வடித்தார்.

“ஸீதாயா” சரிதம் மஹத்” என்னும் பெயரில், ஸீதாதேவி சரித்ரம், ராமரின் வாழ்க்கை, ராவண வதம் என,
தன் மனதில் யோகத்தால் வந்த நிகழ்வுகள் கண்டு, உள்ளது உள்ளபடி 24,000 ஸ்லோகங்கள் அநுஷ்டுப் சந்தஸில் இயற்றிவிட்டார்.

ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் |
ரகுவர சரிதம் முநிப்ரணீதம் தஸஸிரஸஸ்ச வதம் நிஸாமயத்வம் ||
(ததுபகத ஸமாஸ ஸந்தியோகம் = உபகதைகளுடனும், சரியான ஸந்தங்களின் பிரிவு, சேர்க்கை இவகளுடன் கூடியதும்,

ஸமமதுரோ பநதார்த்த வாக்யபத்தம் = ஒரே மாதிரியான மதுரமான அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்

ரகுவர சரிதம் முநிப்ரணீதம் = முநிவரால் இயற்றப்பட்ட ரகுவம்ஸத்தில் வந்த அந்த ராமரின் சரிதத்தை
தஸஸிரஸஸ்ச வதம் = பத்துதலையுடையவனை வதைத்த (ராவணனை வதைத்த)

நிஸாமயத்வம் = கவனித்து நாம் பெறுவோம்/ ஆஸ்சர்யத்துடன் நாம் அநுபவிப்போம்.)

உபகதைகளுடனும், சரியான ஸந்தங்கள் கூடியதும்; ஒரே மாதிரியான மதுரமான, அர்த்தமுள்ள வாக்யங்களை உடையதும்; ராவணனை வதைத்த, ரகுவம்ஸத்தில் வந்த;
முநிவரால் இயற்றப்பட்ட ராமரின் சரித்ரத்தை; ஆஸ்சர்யத்துடன் நாம் அநுபவிப்போம்…. என்கிறார்.

🌱லவ – குசன் மூலமாக வெளிவந்த ராமசரிதை🌱

கர்ப்பினியான ஸீதைக்கு லவன் – குசன் என இரட்டையராக இரு மகன்கள் பிறந்தனர். வால்மீகி அவர்களுக்கு ராமசரிதையைச் சொல்லித்தந்து வளர்த்தார்.
மேலும் எல்லா க்ஷத்ரியக் கலைகளும் கற்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது ராமர் அஸ்வமேத யாகம் செய்வட்தற்கு எண்ணினார். அதற்காக, ஒரு வெண்புரவியில் அஸ்வமேத யாகம் நடைபெறப்போவதை அறிவிக்கும் பட்டயம் கட்டி, புரவியை நாடுகள் சுற்றிலும் அனுப்பினார்.
அவரது புரவியைக் கண்ட மன்னர்கள், தாள்பணிந்து, அஸ்வமேத யாகத்திற்குத் தங்களால் இயன்றதைச் செய்வதாகக் கூறினர். அவரது புரவியைக் கட்டிப்போட்டு, அவரை யுத்தத்திற்கு அழைக்கும் தைர்யம் யாருக்கும் இல்லை.

அந்தக் குதிரை, தாமஸ நதிக்கரையோரம் நடந்து வந்தது. அதன் அழகைக் கண்ட லவ-குசன் இருவரும்,
யாகத்திற்காக அனுப்பிய வெண்குதிரையை கட்டிப் போட்டு விட்டனர். இதைக் கண்டு, அவற்றை மீட்டுப் போக வந்த வீரர்களை த்வம்ஸம் செய்தனர் அவ்விருவரும்.

இந்த நிகழ்ச்சி ராமரின் காதில் எட்டியதும், அவரது தம்பிகள் சத்ருக்ணன், பரதன், லக்ஷ்மணன் என ஒவ்வொருவராக குதிரையை மீட்க வர,
அவர்கள் ஒவ்வொருவரையும் வென்று மயக்கத்தில் கிடத்தினர் அக்குழந்தைகள்.

இதைக் கேள்விப்பட்ட ராமர் கொதித்துப்போய் தானே கிளம்பினார் அக்குழந்தைகளை எதிர்க்க.

Ancient Sculpture of Lava – Kusha fight with Rama Brothers ; Rama Temple – Hazaara Image
ஆனால் ஹனுமான் தான் போவதாய்க் கூறி, அவர் வால்மீகி குடில் வந்த போது அக்குழந்தைகளைக் கண்டார்.

அவை ஸ்ரீராமரின் புத்ரர்கள் என அடையாளம் கண்டுகொண்டார். போரிட வந்தவர், அவர்களை வணங்கி திரும்பிச் சென்றார்.

Ancient sculpture of Rama towards Lava – Kusha : Iraq. Image
ஆனால், தமையன்கள் இன்றி ஹனுமான் வருவது கண்ட ராமர், ஹனுமானிடம் எதுவும் கேட்காமல், தானே அக்குழந்தைகளுடன் போரிட்டார்.

இதை ஞானத்தால் அறிந்த வால்மீகி முனிவர் ஓடிவந்து போரைத் தடுத்து, அஸ்வத்தை திருப்பி அனுப்பும்படிக் கூறினார். அதன்பின், அவர் ஸீதையிடம் நடந்ததைக் கூறினார்.
தனது கடவுளான ராமரிடமே தன் குழந்தைகள் போரிட்டது கேட்டு, ஸீதை அவர்கள் மேல் கோபம் கொண்டாள். ஆனால் வால்மீகி அதைத் தனித்து, அக்குழந்தைகளிடம் அவர்தான் தந்தை என்பதைக் கூறும்படி அறிவுறுத்தினார்.

தந்தை யாரெனத் தெரிந்த குழந்தைகள் வருந்தின. அவர்கள் ராமஸரிதையைப் பாடலாகப் பாடியபடி,
அயோத்தியின் தெருக்களில் வந்தனர். விஷயம் காதில் எட்டியதும், ராமர் அக்குழந்தைகளை அரசவையில் பாட அழைத்தார்.

அரசவையில் ராமரின் பெற்றோர், சொந்தங்கள், மந்திரிகள், பெரியோர்கள், மக்கள் என எல்லார் முன்னிலையிலும் அக்குழந்தைகள் ராமஸரிதையைப் பாடலாகப் பாடினார்கள்.
ஸீதை குடிலில் படும் வேதனைகளையும், அவளது குழந்தைகள் தந்தையைக் காணாது பிரிந்து படும் வேதனையையும், கேட்போர் மனம் கரைந்து, கண்ணீர் பெருகும்படிப் பாடினார்கள்.

”அக்குழந்தைகளின் தந்தையாம் அயோத்தி மன்னன் ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி… அவர்களின் புத்ரர்களாம் லவன் – குசன் ஆகிய நாங்கள்…”
எனக் கண்ணீருடன் பாடி முடித்தனர். மேலும், தந்தை என அறியாது போரிட்டதற்கு மன்னிப்பும் வேண்டினர்.

ராமரின் கண்கள் நீரூற்றுப் பெருக்கெடுத்தது. குழப்பத்தில் ஆழ்ந்தார். வால்மீகி முனிவர், அக்குழந்தைகள் சொல்வது ஸத்யம் எனவும், அவர்கள் தனது குடிலில் தான் வளர்கிறார்கள் எனவும்,
ஸீதை தன்னிடம் கர்ப்பினியாக தஞ்சம் புகுந்தாள் எனவும் கூறி ராமருக்கு எடுத்துரைத்தார். குருவின் வாக்கினால் மனம் தெளிந்த ராமர் ஸீதையைக் காண வேண்டும் என்றார்.

வால்மீகி ஸீதையை அழைத்து வந்தார். ஆனால் ஸீதை,

“நல்ல மகளாக, பத்தினியாக, மருமகளாக, தாயாக எப்படி இருக்க வேண்டுமோ,
அதைத் துளியும் மீறாது, தர்மம் வழுவாது வாழ்ந்த நான் முழுதும் கண்டது வலிகள் தான்…

ராவணனிடத்திலிருந்து மீட்கப்பட்டு, அக்னியில் இறங்கி நான் பத்தினி என்பதை நிரூபித்தேன்...

இன்று வால்மீகி முனிவர் எனது தாய்மைக்கு ஆதாரமாக நிற்க வேண்டி இருந்தது….
போதும்… இனி என்னால் இந்த வலிகளைத் தாங்க இயலாது, என்னைப் பெற்ற பூமித்தாயே... என்னை உன்னோடு அழைத்துக் கொள்...”

என வேண்டினாள்.

Place, where the earth split and Sita Matha went with Bhooma Devi.

Reference : navbharattimes.indiatimes.com/astro/dharam-k… Image
அரசவையில் பூமி இரண்டாகப் பிளந்தது; பூமாதேவி வெளியில் வந்தாள்… ஸீதையைத் தன்னோடு அணைத்து, மீண்டும் பூமியின் உள்ளே மகளுடன் சென்று விட்டாள்…

லவ – குசர்கள் வளர்ந்தனர். ராமர் தன் சகோதரர்களுக்கு ஒவ்வொரு தேசம் பிரித்துத் தந்து ஆளச் சொன்னார். தனது மகன்கள் வளர்ந்ததும் பட்டம் சூட்டினார்.
ராம ராஜ்யம் 1000 ஆண்டுகள் இருந்ததாக வால்மீகி கூறியுள்ளார். லக்ஷ்மணன் முதலில் தனது அவதார முடிவு நாள் அறிந்து ஜலஸமாதியில் மீண்டும் பாற்கடல் சென்றடைந்தான்.

ராமரும் அவ்வாறே வைகுந்தத்தை அடைந்தார். பின் மற்ற சகோதரர்களும் அடுத்தடுத்து, ஸமாதியுற்றனர். இத்துடன் ராமாவதாரம் நிறைவுற்றது.
ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |
ராமபூதம் ஜகத் அபூத் ராமேஎ ராஜ்யம் பிரஷாஸதி ||

வாமேபூமிஸுதா புரஸ்து ஹனுமான்
பஷ்சாத் ஸுமிதாஸுத ||
ஷத்ருக்னோ பரதஷ்ச பார்ஷ்வதல்யோ:
வாய்வாதி கோணேஷுச ||
ஸுக்ரீவஷ்ச பிபீஷ்ணஷ்ச யுவராட்
தாராஸுதோ ஜாம்பவான் ||
மத்யே நீலஸரோஜ கோமளருசிம்
ராமம் பஜே ஷ்யாமளம் ||

ஸ்ரீ ராம சந்தாஸ்ரித ஸத்குருணாம்
பாதாரவிந்தம் பஜதாம் நராணாம் |
ஆரோக்யம் ஐஷ்வர்யம் அனந்த கீர்த்தி :
அந்தே ச விஷ்ணோ : பதமஸ்தி ஸத்யம் ||

ஜானகி காந்த: ஸ்மரணம்….
ஜெய் ஜெய் ராம ராம….
இதில் ராமாயணத்திற்கான ஆதாரம் இன்றும் இருப்பதையும், அதன் பின்னணியில் உள்ள, பொதுவில் அறியப்படாத, சில சிறு வரலாறுகளையும் முதலில் பார்ப்போம்.

1) ராமர் வாழ்க்கை :

ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியாக இக்ஷ்வாகு குலத்தில், ஸூர்ய வம்ஸத்தில், க்ஷத்ரிய வர்ணத்தில் அவதரித்தார் பகவான் விஷ்னு.
குலகுரு வஸிஷ்டரிடம் தனது குருகுலத்தை முடித்தார். அனைத்து அஸ்த்ர – சாஸ்த்ரத்திலும் தேர்ச்சி பெற்றார். சிறு பிராயம் முதற்கொண்டே எல்லோரிடமும் மிகவும் அன்பாகப் பழகி வந்தார்.

அவரது உன்னதமான குணத்தால் அனைவரும் போற்றும் இளவல் ஆனார். விஸ்வாமித்ரருடன் சென்று யக்ஞத்தை ரக்ஷித்து,
மேலும் பல வித்தைகளைக் கற்று, ஜானகியைக் கைப்பிடித்தார். தந்தை வாக்கினை தெய்வ வாக்காக ஏற்றவர்.

“மாதா, பிதா, குரு, தெய்வம்” எனும் நால்வரையும் வணங்கி, அவர் வாக்கை மதித்து நடந்தவர். குடிமக்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்டதால், மக்களாலும் மிகவும் கொண்டாடப்பட்டவர்.
மாதா கைகேயியின் வரத்துக்காக நாட்டைத் துறந்தவர். மனைவி, தம்பியுடன் ஆரண்ய வாஸம் மேற்கொண்டு, ஸீதையை ராவணன் அபகரிக்க, அவளைத்தேடி இலங்கை வரை சென்று, ராவணனை வதைத்து, அவளை மீட்டார்.

மீண்டும் குடிமகனின் ஒரு சொல்லால் ஸீதையைப் பிரிந்தார். வளர்ந்தபின் தான் தனது பிள்ளைகளைத் தானே கண்டார்.
அப்போது ஸீதையை இழந்து தனியானார். தனது தமையன்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கான ராஜ்யப் பொறுப்பை அளித்து ஸமாதி அடைந்தார்.

ஸீதையைப் பிரிந்தும், இறுதி வரை ஏகபத்னி விரதனாகத் திகழ்ந்தார்.

அது கூறும் தர்மம் :

க்ஷத்ரியன் என்னும் வாழ்க்கையின் தர்மத்தில் சிறிதும் வழுவாமல்,
இறுதி வரை வாழும் அரசனே போற்றப்பட்டான். முதல் க்ஷத்ரியன் என ஆனபின், ஒரு மனிதனுக்குத் தனது சுயநலங்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் என்பதை அன்றைய தர்மம் நிலைநிறுத்தியது.

ஒரு அரசன் தேசநலனுக்காக பலதாரம் கொள்ளலாம் எனும் தர்மம் இருந்த போதிலும், ஏகபத்னி விரதன் எனும் உறுதியால்,
அழியாப் புகழ் எய்தியதுடன், அரசர் வாழ்விலும் பலதாரம் என்பது ஒழியும் காலத்தின் கோலத்துக்கு இது முதல் புள்ளி ஆனது.

தமையன்கள் தவறு செய்யும் போதும், கோவம் கொள்ளும் போதும், பொறுமை காட்டியதால், மூத்தவன் தனது இளையவர்களுக்குத் தந்தை ஆவான் எனும் தர்மமும் பெரிதும் மதிக்கப்பட்டது தெரிகிறது.
மனைவியை அக்னிப்பரீட்சைக்கு உட்படுத்துகையிலும், மக்களுக்கு ஒரு நல்ல முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே தெரிகிறது.

ஒரு தேசத்தைக் காப்பவனுக்கு எத்துனை பொறுமையும், தேசபக்தியும் இருந்திருக்கிறது என்பது இவர்இறுதியில் 1000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததில் இருந்து,
த்ரேதாயுகத்தில் வாழ்ந்தோரின் ஆயுட்காலம் குறைந்தது 1000 ஆண்டுகளாவது இருந்தது என்பதும் புரிகிறது.

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan (Modi is My Familyman)

Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Sep 2, 2025
🌺WHY IS USA, ANGRY WITH INDIA - THE BARE TRUTH.🌺

Behind the American perspective is not humility, but a wrong politics is hidden.

There is such a conditional clause which... India has refused to even touch.

Everyone asks, Why is India not signing all those conditions? Image
Trump is pushing.
But India is standing strong.

Let me explain it to you...

India - America trade target:
*Dream of reaching $500 billion by 2030.*

Sounds great, right? But..
There was a condition behind that dream:
Genetically Modified (GM) seeds/crops.
India said – *No* Image
America said – *Sign*
India: *Never*

Because this is not just trade. This is a matter of national independence.
GM seeds are not seeds.
They are software — patented software.

*Sow once.* Always *Keep paying.*

Your crops are no longer yours... Image
Read 16 tweets
Aug 8, 2025
🌺நம் எதிர்காலம்??.??.??🌺

Scary😩😩

இந்த காணொளியை முழுதும் பாருங்கள். இது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் நடந்துவிடும்...😮

AI யை நம் செயல்களின் உதவிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே ஒழிய அதற்கு முக்கியத்துவம் தந்தால் நம் குணம் நம்மை அழித்துவிடும்.
பல துறைகளில் நவீண யந்திரங்கள் வந்து மனிர்களின் வேலையைப் பறித்தன. பணத்தாசை கொண்ட முதலாளிகளும் தொழிலாளி சம்பளத்தை பாரமாக எண்ணினர்.

பல ஆண்டுகள் யந்திரம் வேலை செய்தாலும், காலமாற்றத்தால் பழைய தொழில்நுட்பம் புதியதாக மாற்றுகையிலும், சர்வீஸ் , கோளாறு போன்றவற்றில் செலவு செய்கையிலும்
ஆகும் பணத்தளவைத் தொழிலாளிகள் சம்பளத்துடன் ஒப்பிட்டால், மனிதைரை வேலையில் வைப்பதுதான் சிறந்தது. பல குடும்பங்கள் பிழைக்கும்.

அதன் அடுத்த பரிணாமமான AI மூலம் மனிதன் புறக்கணிக்கப்பட வாய்ப்பு அதிகம். இதற்கும் காரணம் நாமே...

மத்தியஅரசு AI-ஐ எப்படிப் பயண்படுத்தக் கூடாது என்பதைத்தான்
Read 6 tweets
Jul 24, 2025
🌺அடுத்த சுதந்திரப் போரின் அடித்தளமா??🌺
நேற்று கர்நாடகாவில் அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஒன்றை நீதிபதி டி. வெங்கட் நாயக் வழங்கியிருக்கிறார்.

ஜம்கந்தியில் உள்ள ராமதீர்த்தக்கோவிலில் மூன்று இஸ்லாமியர்கள் வேலை வாகனங்கள் தருவதாக உறுதியளித்தும்,
organiser.org/2025/07/24/304…
துண்டுப் பிரசுரங்கள் அளித்தும் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்ததோடு, ஹிந்து மதத்தைக் கேவலமாகவும் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, வழக்கைப் பதிந்தவர் இதில் நேரடியாகத் தொடர்பில் இல்லாதவர் என்றும்,
அந்த இஸ்லாமியர்களின் பிரசாரத்தால் மதமாற்றத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர் மட்டுமே வழக்கு பதிய முடியுமென்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

இந்த விஷயம் புரியவில்லை. ”ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ, அல்லது ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தாலோ, பாதிப்புக்கு உட்பட்டவர்தான் வந்து வழக்கினைப்
Read 12 tweets
Jun 10, 2025
😱 *திடுக்கிடும்_உண்மை....!!* 😱

● சாக்லேட் கிட்காட்டில் மாட்டிறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை சேர்ப்பதை நெஸ்லே நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது !!

● ஃபேர் அண்ட் லவ்லி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், க்ரீமில் பன்றிக் கொழுப்பிலிருந்து
எண்ணெய் கலந்திருப்பதாக ஒப்புக்கொண்டது.
● ஐரோப்பாவின் பல நாடுகளில் Vicks தடைசெய்யப்பட்டுள்ளது..! அங்கு அது ஸ்லோ பாய்சன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
● Lifebuoy என்பது குளியல் சோப்பும் அல்லது கழிப்பறை சோப்பும் அல்ல! ஆனால் அது விலங்குகளைக் குளிப்பாட்டப் பயன்படும் கார்போலிக் சோப் !
ஐரோப்பா நாய்களுக்காக Lifebuoy பயன்படுத்துகிறது! நம் நாட்டில் மில்லியன் கணக்கான மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள் !!
● கோக், பெப்சி உண்மையில் ஒரு டாய்லெட் கிளீனர், அதில் 21 வகையான பல்வேறு விஷங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கேன்டீனில்
Read 13 tweets
May 4, 2025
🌺உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 🌺

8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா எனும் மைமுனா பேகம்" குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅
9️⃣வது அதிசயம்:

தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது?
😂
"காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால்,
இது முடியாதா?😅

🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை!

முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர்.
Read 6 tweets
Apr 24, 2025
🐵 ராம ராம ராம ராம 🐵

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை...

🍒 தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி Image
ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன், ஸ்ரீ ராமன்
வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை, குட்டையானவை என்று. அதில் "சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை. இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர் புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(