ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை
'ஆடிப் பட்டம் தேடி விதை' என இன்றைக்கும் சொல்லும் வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட ஒதுங்கியது இல்லை
செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க..
அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?
இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?
ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய காய்ப்பு உவப்பில்லாத அனுபவம்தான் அந்த அறிவு.
பாரதி சொன்ன 'விட்டு விடுதலையாயிருந்த மனமும்'
சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.
'க்ரீன் சட்னின்னா என்ன தெரியுமா?’ எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.
ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை. இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!
*எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி*
*பலாப் பழம் மாந்தம்*
*பச்சைப் பழம் கபம்*
*புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்* என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.
அதென்ன சூடு, குளிர்ச்சி? அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
விளைவு? லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’ எனும் அம்மா,
வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம்.
மலச்சிக்கல்ல கஷ்டப்படுறானா? ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;
பித்தக் கிறுகிறுப்புக்கு முருங்கைக்காய் சூப்,
மூட்டு வலிக்கு முடக்கத்தான் அடை,
மாதவிடாய் வலிக்கு உளுத்தங்களி,
குழந்தை கால்வலிக்கு ராகிப் புட்டு,
வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு வாழைத்தண்டுப் பச்சடி’
என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும் சில நேரம் மருந்துகள்;பல நேரம் மருத்துவ உணவுகள்.
சுழியத்தைக் (ஜீரோவை) கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.
இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?
🇮🇳🙏