— யார் அது வனிதா? பேஸ்புக்குல ஒரு வனிதாதான் ஞாபகமிருக்கு. கொஞ்சம் குறும்புக்காரப் பொண்ணு.
— அதில்ல சார். இது வேற வனிதா
— சரி, அந்த வேற வனிதா யாரு?
— பிக் பாஸ்ல வந்துச்சு சார்.
— நீ பிக் பாஸ் பாத்தியா?
— ஓஓஓ... விடாம பாப்பேன் சார்
— இப்படிப் பண்ணிப்போடுச்சு சார்?
— எப்படிப் பண்ணிப்போடுச்சு?
— கல்யாணம் பண்ணிகிச்சு சார்
— நீ பிக்பாஸ்ல ரசிச்சு பாத்துகிட்டிருந்தது இப்போ கல்யாணம் பண்ணிகிச்சு... அதான் உன் பிரச்சினையா?
— அட அதில்ல சார்... மூணாம் கல்யாணம்...
— என்ன சார்... ஏற்கெனவே ரெண்டு கல்யாணம் பண்ணி புள்ளைக கூட இருக்கு.
— இருக்கட்டுமே... அந்தப் புள்ளைக வந்து உன்கிட்டே அழுதுச்சா எங்கம்மா இப்படி மூணாம் கல்யாணம் பண்றாங்கன்னு?
— பின்னே உனக்கு அதில் என்ன பிரச்சினை?
— அதில்லே சார். இதெல்லாம் நல்லாவா இருக்கு?
— அவங்களுக்கு நல்லா இருக்கு. அவங்க பண்ணிக்கிறாங்க. உன்கிட்டே ஏதாச்சும் உதவி கேட்டாங்களா?
— சரி, இதுக்கு முன்னாடி ரெண்டு கல்யாணம் பண்ணி, அது முறிஞ்சுபோச்சு. இப்போ மூணாவது கல்யாணம். அப்படித்தானே?
— ஆமா சார்
— இல்ல சார்... இருந்தாலும் இந்த வயசுல போய்
— எந்த வயசுல?
— நாப்பது வயசுல
— ஏன்... நாப்பது வயசுல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?
— ஏப்பா... அது அவங்களுக்கும் அவங்க புள்ளைகளுக்குமான பிரச்சினை. உனக்கு அதுல என்ன பாதிப்பு அதைச் சொல்லு.
— எனக்கு தனிப்பட்ட பாதிப்பு ஏதும் இல்ல சார். ஆனா சமூகத்துல...
— அப்போ பிரச்சினை உனக்கு இல்லை. உன் புள்ளைகளுக்கு நாளைக்கு வரப்போற பிரச்சினை பத்தி கவலைப்படறே. அதானே?
— ஆமா சார்.
— என்ன சார் இப்படி அபசகுனமா பேசறீங்க
— இல்லப்பா... நீதானே சொன்னே புள்ளைகளும் இதுமாதிரி ஆயிடுமோன்னு பயம்னு. அதான் கேட்டேன்.
— அப்பிடில்லாம் ஆக விட மாட்டேன் சார்.
— உன் கேள்விகள்லியே தெரியுதே நீ நல்லா வளப்பேன்னு. சரி அதைவிடு. உன் புள்ளைகளைப் பத்தியும் கவலை இல்லே. பின்னே என்னய்யா பிரச்சினை உனக்கு?
— கல்யாணத்துல யாருமே மாஸ்க் போடல சார்...
— அப்பதே கேட்டா இந்த வயசுல கல்யாணமான்னு கேட்டே,
— அப்படியா சார்... அது தெரியாதே
— ஆமாமா...தெரிஞ்சாலும் தெரியாதுன்னு சொல்லுவேன்னு எனக்குத் தெரியாதா
— இல்ல சார். பேஸ்புக்குல போட்டோலதான் பாத்தேன்.
— என்ன ஒரு நூறு பேர் வந்திருப்பாங்களா?
— தெரியல சார். நான் பாத்தவரைக்கும் முப்பது நாப்பது பேர் இருக்கும்போலத் தெரிஞ்சுது. ஒரே மாதிரி டிரஸ் போட்டுகிட்டு ஆறேழு பொண்ணுங்க.
ஒரே மாதிரி டிரஸ் போட்டு மாஸ்கும் போட்டா யார் எதுன்னு தெரியாமப் போயிடும்னும் கழட்டியிருக்கலாம்
அது ஒரு பெரிய குத்தமா... குத்தமாவே இருந்தாலும் அதுக்கு கவர்மென்ட் நடவடிக்கை எடுக்கட்டும்.
— நீங்க வேற... கொரோனா நேரத்துல பொண்ணும் மாப்பிள்ளையும் முத்தம் வேற குடுத்துகிட்டாங்க சார்!
— மாப்பிள்ளை பேர் என்ன?
— பீட்டர்னு பாத்தேன்.
— கிறித்துவ முறைக் கல்யாணத்துல முத்தம் குடுத்துக்குறது வழக்கமா இருக்கும். குடுத்துகிட்டாங்க. உனக்கு ஏன் குத்துது?
— ஏய்... கல்யாணம் பப்ளிக்கா நடக்கும்போது கல்யாணச் சடங்குக்காக ஒளிஞ்சுகிட்டு முத்தம் குடுக்கணுமா?
— இல்லே சார். கொரோனா நேரத்துல இப்பிடி முத்தம் குடுக்கலாமா? ரெண்டு பேருல யாராவது ஒருத்தருக்கு கொரோனா இருந்தா?
— எதுக்கு சார் ஊருக்கு அனுப்பணும்? கூடதான் இருக்கா...
— உனக்கோ உன் பொண்டாட்டிக்கோ கொரோனா இருந்தா?
— அதெல்லாம் இருக்காது சார்.
— அதேதான் அவங்களுக்கும் நம்பிக்கை. விடேன்.
— அப்படியா... சரி, அந்த பீட்டர் மனைவி வந்து உன்கிட்டே புலம்பினாங்களா?
— இல்ல சார்... விவாகரத்து செய்யாமலே கல்யாணம் செய்யறார்னு அவங்க போலீஸ்ல புகார் குடுத்திருக்காங்களாம்.
— எனக்கு எந்த நட்டமும் இல்ல சார். ஆனாலும் காலம் போற போக்கு சரியில்லே.
#சுட்டபதிவு