மிகச்சிறிய அளவுகளில் விஷம் தொடர்ந்து கொடுக்கபட்டால் அந்த உயிரினம் வலுவானதாக மாறும் என்பது அக்கோட்பாடு.
விஷம் மட்டுமில்லை,,
மிக சிறிய அளவுகளில் துன்பம், துயரம், ஸ்ட்ரெஸ் அளிக்கும் விசயமும் இப்படியே நன்மையாக மாறும்...
அங்கே கார்கள் தடைசெய்யபட்டிருந்தன.
குதிரைவண்டிகள் தான் பயணிகளை இழுத்துபோயின.
இரு குதிரைகள் 15 பேர் கொண்ட வண்டியை இழுத்துசென்றன.
உடல்பயிற்சியின் நன்மை என மட்டுமே இதை சொல்லமுடியாது.
ஒரு பிரிவு எலிகள் குளிர்நீரில் தினம் 4 மணிநேரம் விடப்பட்டன.
குளிரில் நடுங்கியபடி அவை நாலுமணி நேரத்தை கழித்தன.
மற்றொரு பிரிவு எலிகளை அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டார்கள்.
ஆக குதிரைகளுக்கு வேலை, எலிகளுக்கு குளிர்..
இருவிதமான ஸ்ட்ரெஸ்கள் தொடர்ந்து கொடுக்கபட்டன...
அவை அவற்றின் ஆயுளையும் உடல்நலனையும் கூட்டின.
-> உடல்பயிற்சி
->குளிர், வெப்பம்
-> உண்ணாவிரதம்
இவை மட்டுமின்றி அதிசயிக்கதக்க வகையில் தீமை என கருதப்படும் பல விசயங்களும் மிக சிறிய டொஸேஜில் நன்மையளிக்கும் விசயங்களாக மாறுகின்றன.
இரவு தூங்காமல் விழித்திருப்பது பொதுவாக கெடுதி.
ஆனால் தினமும் நன்றாக உறங்கிவிட்டு என்றாவது ஒரு நாள் ஒரு நாள் முழுக்க அப்படி தூங்காமல் இருந்தால் அது நன்மையானதாக மாறுகிறது.
மிக சிறிய டோஸில் நோய்கிருமிகளை உடலில் செலுத்துவார்கள்.
உடல் உடனே அக்கிருமிகளை எதிர்த்து போர்புரிந்து பழகி தன் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக்கொள்ளும்...
நம் வாழ்வில் சின்ன, சின்னதாக வரும் துன்பம், துயரம் இவை நம்மை வருங்காலங்களில் மிக வலுவானவர்களாக ஆக்குகின்றன.
குளிர், வெயில் காலங்களில் உள்ளே ஏசி, ஹீட்டர் போட்டு பதுங்கியிராமல் அவ்வபோது வெளியே சென்று குளிர், வெயிலுக்கு உடலை பழக்கப்படுத்துங்கள்.
உடல், மனம் இரண்டும் வலுவடையும்...
சொகுசான வாழ்க்கை நம்மை மிகபலவீனமாக ஆக்கும்
சிறிய அளவிலான துன்பங்கள் நம்மை வலுவானவராக ஆக்கும்...
....
....
....👍🏻🙏🏻🥰🌹
பகிர்வு 🇮🇳🙏