சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 என்ற வரைவு அறிக்கையை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது.அது குறித்த த்ரேட்.விருப்பம் இருப்பின் படிக்கலாம்
முதலில் நம் நாட்டில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் உள்ள சட்டங்கள் பற்றி பார்க்கலாம்
1974 நீர் பாதுகாப்பு சட்டம் ,1981 காற்று மாசு சட்டம்..ஆகியவை முதலில் கொண்டுவரப்பட்டன ..1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு தான் 1986இல் சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது .
இத் திட்டத்தின் கீழ் இயற்கை வளங்களை பாதுகாக்கும்
நோக்கில் முதல் முறையாக 1994 ஆம் ஆண்டு வாக்கில் ஜனவரி 24ஆம் தேதி சுற்றுசூழல் பாதிப்பு பாதிப்பு மதிப்பீடு 1994 கொண்டுவரப்பட்டது பின்னர் இது 2006 ஆம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது..இந்த திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால் ? ...இந்திய நாட்டில் எந்த ஒரு
ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அந்த திட்டத்தின் மூலம் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து தக்க மதிப்பீடு செய்யபட்டு அது குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்யப்படவேண்டும்... விரிவாக சொல்ல வேண்டும் என்றால் ... ஒரு தொழிற்ச்சாலை தொடங்க விருப்பும் நிறுவனம் ,அதற்கு தேவையான இடம் ,
அதில் இருந்து வெளியேறும் கழிவு , கழிவு மேலாண்மை,சுற்றுசூழல் பாதிப்புகள்.முதலிய விவரங்கள் தொடர்பான ஆவணம்களை தாக்கல் செய்ய வேண்டும்.இதனை அரசு தரப்பில் நியமிக்க பட்ட குழு ஆய்வு மேற்கொண்டு சுற்றுசூழல்க்கு பாதிப்பு இல்லை என்று உறுதியளித்தால் தான் அது தொடர்பாக அனுமதி வழங்கப்படும்
இவ்வாறு சுற்றுசூழல்க்கு பாதிப்பு இல்லை என்னும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பான விளக்கம் கிடைத்துவிடும்...இதை மற்றும் வகையில் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு 2020 ஆஹ் தற்போது மத்திய அரசு கொண்டுவருவதாக தற்போது தோன்றுகிறது... #EIA2020#EIA2020draft@Nandhuupriya@hari979182
இந்த சட்டம் வரும் பட்சத்தில்.இதனால் தமிழகத்திக்கு ஏற்படும் பாதிப்பு
தேனி நியூட்ரீனோ ஆய்வு & ஹைட்ரொ கார்பன் பணிகளை இனி கேட்பரின்றி இஷ்டம் போல நிறைவேற்றலாம்
சேலம் சென்னை இடையே 8 வழிச்சாலைகளை செயல்படுத்தலாம்
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரளாவிற்கும் @erasaravanan
காவேரி இல் மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கும் மிக எளிதாக அனுமதி கிடைக்கும்
இது குறித்து மேலும் தெரிந்துகொண்டு #பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் & மறுப்புக்களை eia2020-moefcc@gov.in என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு மத்திய அரசு தெரிவித்து உள்ளது