My Authors
Read all threads
#துளசி துளசியின் பெருமைகள் எண்ணிலடங்காதவை, ஆன்மிகத்திலும் சரி மருத்துவ பயனாலும் சரி. விஷ்ணு பூஜை துளசி இல்லாமல் நடப்பதில்லை. எந்த நைவேத்யமும் துளசி தளம், நீர் சுற்றுதல் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாவங்கள், வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை
இலை அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாளக்ராமமாக இருக்கும்போதெல்லாம்
துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.
விஷ்ணு ஆலயங்களில், மாத்வர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே. பத்ம புராணத்தில்,
பாதாள காண்டத்தில் சிவபெருமான்: நாரதா
துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள் என்று வரிசையாக சொல்கிறார்- எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப் படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும்.
எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ,
துளசி கட்டையை தொடுகிறானோ அவன் மோக்ஷம் எய்துவான். கிருஷ்ணனே அவனை எதிர்கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார். எவன் துளசி கட்டையை சமித்துகளோடு சேர்த்து வைத்துக் கொள்கிறானோ அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு
தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான். துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை 100 அக்னி ஹோத்ர பலனையும் 100 கோதான பலனும் கொடுக்கும். ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம் பல லக்ஷம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல
கிருஷ்ணனுக்குப் பிடித்தவன் வேறு யாருமில்லை. துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான். துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்த பிறகு
கிருஷ்ணனையே அடைகிறான். எவன் வழியிலே எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ அவன் சர்வ பாப தோஷங்கள் நீங்கப் பெறுவான். துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன். காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதால்
கூட ஒருவன் பரிசுத்தமாகிறான். (துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்)
கங்கை எப்படி ஸ்நானம் செய்தவர்களை பரிசுத்தப் படுத்துகிறாளோ அதுபோல் துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி
செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட தீய சக்தி நெருங்காது. தினம் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன். துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு அர்ச்சித்தவன் வைஷ்ணவன் ஆகிறான். துளசியை நமஸ்கரித்து கிருஷ்ணனை ஆராதிப்பவன்
ஜனன மரணம் இல்லாதவன். துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். துளசியின் மகிமை ஈடு இணையற்றது. பாமா தன் நகைகள் அனைத்தும் வைத்த பின்பும், கிருஷ்ணனின் எடைக்குச் சமமாக இல்லை, ஒரு துளசி தளத்தை ருக்மிணி சமர்ப்பித்த பின் சரியாயிற்று.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!