அயோத்தியில் நாளை ராமஜென்ம பூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் மொத்தமே 175 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமஜென்ம பூமி இருந்த இடத்துக்கு உரிமை கொண்டாடி முதன்முதலில் வழக்கு தொடர்ந்த ஹாசிம் அன்ஸாரி 2016- ம் ஆண்டு இறந்து போனார். பிறகு, அவரின் மகன் இக்பால் அன்ஸாரி இந்த வழக்கை நடத்தி வந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஷியா வக்புபோர்டு தலைவர் சயீத் வாஷிம் ரிஸ்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் தவிர, மற்றோரு இஸ்லாமிய பெரியவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவருக்கும் பாபர் மசூதி தொடர்பான விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
மக்களுக்கு சேவை செய்தவர் என்ற அடிப்படையில் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 80 வயதான ஷெரீப் சாச்சாவால் ராமர் பூஜையில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் சொல்கின்றனர்.
பாலிமர்