மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.
இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*
*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*
*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22