1. #புறநானூறு
|| கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு ||
2. #அகநானூறு
|| வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் ||
3. #பதிணெண்கீழ்க்கணக்கு
#பழமொழிநானூறு
|| பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;- பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல் ||
4. #சிலப்பதிகாரம்
|| தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ ||
| மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! ||
- ஆய்ச்சியர் குரவைப் பாடல், மதுரைக்காண்டம்.
|| அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல ||
- மதுரைக் காண்டம்/புறஞ்சேரி இறுத்த காதை
5. #மணிமேகலை
|| நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் || - உலக அறவி புக்க காதை
|| மீட்சி என்பது இராமன் வென்றான் என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் ||
- சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
அதாவது இராமன் வென்றான் என்கிறபோதே இராவணன் தோற்றான் என்பது பொருள் என அழுத்தி சொல்கிறது இராம இராவண யுத்த நிறைவை.