Asiriyar K.Veeramani Profile picture
Aug 10, 2020 20 tweets 8 min read Read on X
சென்னை விமான நிலையத்தில் கவிஞர் கனிமொழி எம்.பி,க்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவம்! மொழிப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது! #HindiImposition
@AAI_Official
நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கவிஞர் கனிமொழி 9.8.2020 அன்று டில்லிக்குப் புறப்பட்டுச் செல்ல சென்னை விமான
விமான நிலையச் சோதனையை முடித்துச் செல்லும் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பெண் அதிகாரி ஒருவர், கரோனா தடுப்பு நிகழ்ச்சிகள்பற்றி ஹிந்தியில் கூறினார். #HindiImposition
@AAI_Official
ஆனால், கனிமொழி எம்.பி., அவர்கள் 'எனக்கு ஹிந்தி புரியவில்லை; ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசுங்கள்' என்றார். இதையடுத்து அந்தப் பெண் அதிகாரி கனிமொழியிடம், "நீங்கள் இந்தியரா?" என்று கேட்டுள்ளார். #HindiImposition
@AAI_Official
இதையடுத்து, கனிமொழி எம்.பி., அதிர்ச்சி அடைந்ததோடு, விமானம் புறப்பட வெகு குறைவான நேரமே இருந்ததால், இந்தச் சம்பவம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு, டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். #HindiImposition
@AAI_Official
இது ஒரு சாதாரண நிகழ்வு போல - மேலெழுந்தவாரியாகப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்; ஆனால், இந்தக் கேள்விக்குள் தொனிக்கும் ஹிந்தி ஆதிக்கத் திணிப்பும், ஆணவச் சூழ்நிலையும், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பின் கோர முகமும் இதன்மூலம் தெரியவில்லையா? இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். #HindiImposition
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அரசமைப்புச் சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ள மொழிகள் 22. அதில், இந்திய ஆட்சி மொழியான இந்தியும் இடம்பெற்றுள்ளது. #HindiImposition
தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் அதிகாரிகள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மாநில அரசில் IAS, IPS அதிகாரிகளுக்கும்கூட விதிக்கப்பட்டுள்ள அரசின் கோட்பாடு. எந்த மாநிலத்தில் பணி செய்யச் செல்லுகிறார்களோ, அந்த மாநில மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது ஆளுமைக்குத் துணை புரிய உதவும் என்பதால்!
அதுபோல, எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், மத்திய அரசுத் துறை அதிகாரிகள், அந்த மாநில மொழியை அறியவேண்டும் அல்லது அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசவேண்டும் என்ற குறைந்த அளவு நாகரிகம் தேவையல்லவா? #HindiImposition
#HindiImposition மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் மிகவும் அதிகமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே (ஹிந்தி அல்லாத மற்ற மொழியினருக்கும்) மசோதாக்களின் நகல்கள் ஹிந்தியில் மட்டும் அனுப்பப்படுகின்றன. சபாநாயகர் உள்பட பலரும் இந்தியிலேயே நடவடிக்கைகளை நடத்துகின்றனர்.
எல்லா மத்திய நலத் திட்டங்களின் பெயர்களும் வாயில் நுழையாத ஹிந்திப் பெயர்களாகவே உள்ளன. #HindiImposition
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 22 மொழிகளில் - அந்தெந்தப் பகுதிக்குரிய மொழிகளில் அங்கே விமானங்கள் பறக்கும்போது அறிவிப்புகள் செய்யப்படவேண்டும். #HindiImposition
@AAI_Official
விமான நிலையப் பரிசோதனை அதிகாரிகளாக அந்தந்த மொழி தெரிந்தவர்களையோ அல்லது அனைத்து மொழியாளர்களுக்கும், நடைமுறையில் உண்மையான இணைப்பு மொழியான ஆங்கிலத்தையோ பயன்படுத்துவதுதானே, ஆளுமைக்கு உரிய சிறந்த நடவடிக்கையாக இருக்க முடியும்.
@AAI_Official #HindiImposition
எந்த நோக்கத்திற்காக அது செய்யப்படுகிறதோ, அந்த நோக்கம், அந்த மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட்டால்தானே நிறைவேறி பலன் தர முடியும். #HindiImposition
@AAI_Official
தாய்மொழிபற்றி மிகவும் பேசுகின்றனர் பிரதமர் முதல் பல பா.ஜ.க. தலைவர்கள் வரை!
விமானங்களில் அறிவிப்புகளில் - மற்ற நாட்டு விமானங்களில் தமிழ் அறிவிப்புகள் இடம்பெறும்போது, நம் நாட்டு விமானங்களில் வெறும் ஹிந்தி, ஆங்கிலம் மட்டும் இடம் பெறுவானேன்? #HindiImposition
@AAI_Official @PMOIndia
மும்மொழித் திட்டம் என்று கல்வியில் திணிக்க முயலும் இவர்கள், பயணிகள் வசதிக்காகத் தமிழ்நாட்டு உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு ஏற்ப ஏன் தமிழில் அறிவிப்புகளைச் செய்யக் கூடாது?
@AAI_Official #HindiImposition
எந்தெந்த மாநிலங்களில் விமான சேவை உள்ளதோ, அந்தந்தப் பகுதியில் அவரவர் மொழியில் கூறினால், அறிவிப்பின் நோக்கம் நிறைவேறும். இன்றேல் அது வெறும் கூச்சல் போலத்தானே ஆகி விடும். #HindiImposition
@AAI_Official
தமிழ்நாட்டு எம்.பி.,க்கள், ஒத்த கருத்துள்ள, மற்ற மொழியாளர்களான எம்.பி.,க்களும் கலந்து இதற்கு ஒரு மாறுதலை உருவாக்கப் போதிய அழுத்தம் தர முன்வரவேண்டும்.
மொழிப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. #HindiImposition
@CMOTamilNadu
தமிழக அரசும் இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகப் பார்க்காமல், மொழி உரிமை, தமிழ்நாட்டின் பாரம்பரிய மொழிக் கொள்கைப் பாதுகாப்புப் பிரச்சினையாகப் பார்த்து, மத்திய அரசுக்குத் தனது கருத்தினை எழுதி வலியுறுத்த வேண்டியது முக்கியக் கடமை! #HindiImposition
மொழித் திணிப்பினால் ஒருமைப்பாட்டை ஒருபோதும் உருவாக்கிவிட முடியாது.
”ஒருமைப்பாடு - மண்ணுக்கல்ல; மக்களுக்குத்தான்” என்ற அடிப்படையான உணர்வை அலட்சியப்படுத்த வேண்டாம்! #HindiImposition
@PMOIndia

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Asiriyar K.Veeramani

Asiriyar K.Veeramani Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @AsiriyarKV

Jul 30, 2021
சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து
இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன.
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.
Read 5 tweets
Jul 28, 2021
தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி!
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்
நேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது’’ - முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
Read 6 tweets
Jun 4, 2021
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
Read 16 tweets
Jun 3, 2021
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
Read 14 tweets
Jun 3, 2021
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
Read 10 tweets
Jun 1, 2021
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(