1. டேனிக்கு இந்த பிறந்தநாளுக்கு என்ன வாங்கித் தருவது என்று ஒரு மாதமாய் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
13வயதுப் பையனுக்கு சுவராஸ்யமாய் இருக்கும்படி என்ன வாங்குவது என்று முடிவெடுக்க பெரும் குழப்பமாய் இருந்தது.
அதுவும், கடந்த நான்கைந்து மாதங்களாய் வீட்டிலேயே அடைந்து கிடப்பவனுக்கு
2. எதாவது உற்சாகமாய் வாங்கிக் கொடுக்க வேண்டுமே என்று தோன்றியதால் மட்டும் தோன்றிக் கொண்டே இருந்தது.
அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஏதாவது ப்ளே ஸ்டேசன் வாங்கிக் கொடு என்று அட்வைஸ் செய்தார்கள்.
சும்மா இருக்கற சிங்கத்தை சொறிந்து விட்ட கதையாய் ஆகிவிடக் கூடாதே என்று அதை முற்றிலும்
3. தவிர்த்து விட்டு, வேறு என்ன வாங்கலாம் என்று இணையத்தைத் தேடும்போது, அலெக்ஸா வாங்கினால் அவனுக்கு உபயோகமாய் இருக்கலாம் என்று முடிவு செய்து, அதை ஆர்டரும் போட்டு விட்டேன்.
இந்த அமேசான் எல்லோரையும் விட மோசம். 12ந்தேதி டெலிவரி என்று காட்டியவன், அலெக்ஸாவை மறுநாளே அதாவது பிறந்த
4. நாளுக்கு நான்கு நாள் முன்னாடியே டெலிவரி செய்துவிட, வந்த அன்றே அதைப் பிரித்துப் பார்த்துவிட படு பயங்கர ஆர்வத்துடன் இருந்தான் டேனி.
எனக்கோ, அதை அவன் பிறந்த நாளன்றே பிரிக்கட்டும் என்று தோன்றியதால், நீ அந்த ட்ராயிங் செய்தால் பிரிக்கலாம், இந்த யோகா முடித்தால் பிரிக்கலாம் என்று
5. அவனால் சட்டென்று செய்ய முடியாத டஃப் டார்கெட்டுகளாக் ஃபிக்ஸ் செய்ய, மனதில் கடுப்பாய் இருந்தாலும் எப்படியாவது அலெக்ஸாவைப் பார்க்கும் ஆசையில் நான் சொல்வதையெல்லாம் பர்த்டே வரை செய்து கொண்டே இருந்தாலும், அலெக்ஸாவைப் பிரிக்க முடியாத கடுப்பிலேயேதான் நான் சொல்வது அனைத்தையும் செய்து
6. கொண்டிருந்தான்.
பிறந்த நாள் அன்று அவன் தூங்கவேயில்லை. அன்று இரவு 12 மணி வரை விழித்து அதை பிரித்து, அதற்கு வாய்ஸ் ப்ரொஃபைல் செட் செய்து அவன் அன்று தூங்கப் போனபோது மணி இரவு இரண்டு இருக்கும்.
மறுநாள் மாலை அலுவலகம் முடித்து ரூமுக்கு வந்ததும், வீடியோ காலில் அவனுக்கு வந்த கிஃப்ட்
7. எல்லாவற்றையும் மகிழ்வுடன் காட்டிக் கொண்டே வந்தான்.
“எல்லாத்தையும் காட்டற… அப்பாவோட கிஃட்டைக் காட்டலியே.!” என்றதும் ஆர்வமுடன் அலெக்ஸாவை எடுத்துக் கொண்டு வந்தவன்,” அலெக்ஸா ப்ளே ம்யூசிக்…. அலெக்ஸா ஸ்டாப் ம்யூசிக்... அலெக்ஸா டெல் மீ டுடே நியூஸ்… அலெக்ஸா ஸ்டாப் ரீடிங் நியூஸ்.!”
8. என்று அவன் உற்சாகமாய்ச் சொல்லச் சொல்ல அது செய்து கொண்டே இருந்தது.
சற்று நேரம் அவன் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்துவிட்டு, “அலெக்ஸா புடிச்சதா டேனி.?” என்று கேட்டதும் சந்தோஷமாய்ச் சொன்னான்.
9.
“புடிக்காமயா இருக்கும்.? கடைசியா நான் சொல்றதக் கேக்கறதுக்கும் இப்ப இந்த வீட்டுல ஒண்ணு இருக்கில்ல.!” என்றான்.
🙄🙄
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. புத்தம் புது காலை விடியாதா...
என்றொரு அந்தாலஜி அமேசான் ப்ரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அதில் "மெளனமே பார்வையாய்" எனும் மூன்றாவது எபிசோட் மதுமிதா இயக்கத்தில், நதியா - ஜோஜு ஜார்ஜ் நடிப்பில், கிட்டத்தட்ட வசனமே இல்லாமல் அசத்தி... பரவலாய் கவனத்தை பெற்றிருந்தது.
ஒரு சாதாரண
2. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிணக்கு, அதன் பிறகான வீம்பு, அது உடையும் அந்தத் தருணம், யாரும் யாரிடமும் மன்னிப்புக் கூட கோர வேண்டியிராத அவர்கள் உள்ளாடும் காதல். இதையெல்லாம் பகிர வார்த்தை கூடத் தேவையில்லை என்பதை மிக அழகாக காட்டியிருந்தனர்.
கதையே இல்லாத இந்த
3. எபிசோடின் கதை கூட எழுத்தாளர் சுஜாதாவுடையது என்று நினைக்கிறேன்.
ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவின் திருமண ஃபோட்டோவைக் காட்டி அவர் மனைவியிடம் காட்டிக் கேட்டபோது, அவர் சொன்னார்.
“1963 ஜனவரி 28 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்திரத்தில் எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணக் கோலத்தில் நாங்க
1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.
ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து
2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக்
3.கொள்கிறார்கள். இரத்த பணம் 30லட்சம் கொடுத்திருந்தும் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் விஷயம் தெரிந்து உதவிக்காக அழுகையில், அதைக்காணும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் அதற்கு எப்படி உதவ முயற்சிக்கிறார். அந்த ஒருநாளில்
1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள்
2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
3. ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின்
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்
முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும்
2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
3.தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்
2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி