1. தில்லுதுரயின் ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், இனிமேல் அவர் எதற்குமே கவலைப்படக் கூடாது... எதற்காவது கவலைப்பட்டால் உயிருக்கே ஆபத்து என்று சொல்லிவிட்டார்.
கம்பெனி நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குடுக்க முடியாத நிலை. எப்படி கவலைப்படாமல் இருக்க
2. முடியும் என்று யோசித்தவர் கடைசியாய் ஒரு வழியையும் கண்டுபிடித்து விட்டார்.
ரெண்டொரு நாளில் பேப்பரில் விளம்பரம் கொடுத்து, இன்டர்வியூ செய்து, இவருக்காக கவலைப்படுவதற்கென்றே இப்போது ஒரு ஆளை மாதம் ஐம்பதாயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது.
அன்று
3. இரவு வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது மனைவி கேட்டாள்.
"இப்பத்தான் உங்களைப் பாக்கவே நல்லாருக்கு. கவலைப்படறதுக்குனு ஒரு ஆளைப் போட்ட உடனே, பாக்க நல்ல தெளிவா இருக்கீங்க. கம்பெனி நல்லாப் போகுதா இப்ப.?"
கேட்ட மனைவியிடம் தில்லுதுர சொன்னார், "எங்க... முன்னைவிட நெலமை ரொம்ப
4. மோசமா இருக்கு. இதோ இந்த மாசம் கவலைப்படறதுக்குனு ஒருத்தன் வேலைக்குச் சேர்ந்தானே... அவனுக்கு சம்பளம் குடுக்கக் கூட காசு இல்ல.!"
சொன்ன தில்லுதுரயிடம் மனைவி வருத்தத்துடன் கேட்டார், "என்னங்க... அதுக்கு கொஞ்சம் கூட கவலையில்லாம சொல்றீங்க.?"
கேட்ட மனைவியை எந்த உணர்ச்சியும் இல்லாமல்
5. நிமிர்ந்து பார்த்த தில்லுதுர சொன்னார்.
"நான் ஏன் கவலைப்படணும்.? அதுக்கும் சேத்து அவன்தான கவலைப்படணும்.? அதுக்குத்தான அவனை வேலைக்கு வெச்சிருக்கு.!" என்றார்.
😂
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.
நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++
எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதை. தமிழும் மலையாளமும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்கும் போஸ்டர் டிசைன் சொல்வது போன்ற ஒரு குழப்பமான மயக்கம் அது.
படத்தில் ஒரு மதிய உணவுக்குப் பின்னான உறக்கத்தில் விழும் ஜேம்ஸ் விழிக்கும் போது சுந்தரமாய் விழிக்கிறான். பிறகு ஒருநாள் முழுவதும் ++
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி
"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.
"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.
உடனே
2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்
ஆனா,
3. இப்ப எனக்கு உதவிக்கு வந்த இன்னொரு இந்தியர் சொன்ன பதில் கொஞ்சம் பொருத்தமா தெரிஞ்சது.
அவர் சொன்னாரு, "இந்தியா ஒரு விநோதமான நாடு. இங்க அரசியல்ல விளையாடுவாங்க. விளையாட்டுல அரசியல் பண்ணுவாங்க.
இங்க ஃபுட்பால் மட்டுமில்லை. எங்க தேசிய விளையாட்டான ஹாக்கியவே அம்புட்டு கவனிக்க
விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு
2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.
வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.
இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
3. விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.
கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.
சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.
பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய்
2. வாழ்கிறார்.
போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.
அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.
இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
3. பார்க்கிறார்.
எல்லாப் பெண்களும் அழகுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் அழகுடன் கொஞ்சம் அறிவும் உள்ள பெண்கள் அந்த அழகை வைத்து அரசனை அடிமையாக்கி, அத்தனை சவுகரியங்களை அனுபவித்து விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை வளர்க்கிறார்... ஆனால் பில்கேட்ஸ்ன்