நான் ஏன் திமுகவை எந்த நிபந்தனையில்லாமல் ஆதரிக்கிறேன்?
நேற்று ஒருநாளை எடுத்துக்கொள்வோம். உலக வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு திணிக்கப்பட்ட அநீதியான தேர்வினால், மூன்று பிஞ்சுகள் கொலை செய்யப்பட்ட நாள். தமிழ்நாட்டு சமூகநீதி கல்வியால் பயன்பெற்ற எந்த ஒரு தமிழனும் பதறியதை பார்த்தோம்.
இதை மனநிலையை அப்படியே பிரதிபலித்தவர்கள் திமுகவின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்களின் குரல்களில் தெரிந்த பதற்றம், அறச்சீற்றம், ஆற்றாமையில் உண்மை இருந்தது. சமூக அடுக்கில் எங்கே இருந்தாலும், அனைத்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்து சிந்திக்கும் கட்சியாக திமுக இருக்கிறது.
அண்ணா-பெரியார் விதைத்த சிந்தனை மரபு அப்படியே இருக்கிறது. அதனால் தான் கலைஞர் சொன்ன அதே “எளியமக்களுக்கு நடக்கும் அநீதியை”, இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் ராஜன் என அனைவரும் வெளிப்படுத்தினார்கள்.
திமுக எம்.பி திருச்சி சிவா, மாணவர்களுக்கு நெகிழ்ச்சியான ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அனைத்தும் கீழே இருக்கிறது.
இன்னொரு பக்கம், நீட் என்ற சொல்லை அப்படியே விட்டுவிட்டு பாஜக-அதிமுக கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். பச்சைத் துரோகிகள்!
திமுக போன்ற ஒரு கட்டமைப்பு கொண்ட கட்சி, திமுக போன்ற கொள்கை உடைய கட்சி, திமுக போன்ற தலைவர்கள் உள்ள கட்சி வேறு எங்கு உள்ளது என்றுத்தெரியவில்லை. இனி இப்படி இன்னொன்று தமிழ்நாட்டில் உருவாகுமா என்றும் தெரியவில்லை.
திமுகவின் அருமையை இன்னும் உணராமல், துரோகிகளின் சூழ்ச்சிக்கு பழியாகி திராவிடத்தை எதிர்க்கிறோம், திமுகவை எதிர்க்கிறோம் என்று மாயையில் சிக்கியிருக்கும் தமிழர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
எத்தனை நிறைகள் இருந்தாலும், குறைகளை தேடித்தேடி திமுகவை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருக்கட்டும். அந்த விமர்சனத்தை சட்டைசெய்யாமல், கேட்டு, சரிசெய்ய முனையும் ஜனநாயகம் கொண்ட கட்சியாகவும் திமுகவே இருக்கிறது.
திமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பது தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு முக்கியமானது. இல்லாவிட்டால், தமிழ்நாட்டை செங்கல் செங்கலாக பிரித்துவிற்க துரோகிகள் காத்திருக்கிறார்கள். சிந்திப்போம். செயல் படுவோம்!
- ராஜராஜன் ஆர்.ஜெ
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெரியார் ரெட்டிகள், நாயுடுகளுக்கு ஆதரவாக இருந்தார்! - அரங்க குணசேகரன், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு!
—
பெரியபுராணம் சனாதனத்தை பரப்புகிறது என்று பெரியார் கொளுத்திய போது, பெரியார் வைணவர், அதனால் தான் பெரியபுராணத்தை எதிர்க்கிறார் என்று வாய்கூசாமல் பேசியவர்கள் தான் ++
இன்றைய தமிழ்த் தேசிய சைவர்களுக்கான முன்னோடிகள். பெரியார் இராமயண மாகாபாரதத்தையும் கிழித்து தொங்கவிட்டார். குறிப்பாக வட இந்திய சனாதன குப்பையை தமிழுக்கு கொண்டு வந்த கம்பனை தமிழின விரோதி என்றே திராவிட இயக்கம் சொல்லியது.
++
இதெல்லாம், பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பார்த்த விசயங்கள் தான்.
பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் இன்றும் அவரை சுற்றி தான் இயங்குகிறது. இதனைப் பொறுக்க முடியாத சனாதனக்கூட்டம் பல வழிகளில் பெரியாரை அழிக்க முற்படுகிறது.
++
கேள்வி: உங்கள் மூளைக்குள் இந்துத்துவம் இருக்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
பதில்: இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று ஒரு மீம் பார்க்கிறீர்கள். நீங்கள், அதை பார்த்ததும் , "ஆகா சூப்பர்" என்று அதை ஷேர் செய்கிறீர்கள்.++
உங்கள் பதிவில், உங்கள் நட்பு பட்டியலில் உள்ள ஒருவர் வந்து இடஒதுக்கீடு ஏன் தேவை என்று விளக்கம் தருகிறார். நீங்களும் அவர் என்ன சாதியாக இருப்பார் என்று யோசித்துக்கொண்டே இடஒதுக்கீட்டினால் தான் நாடு முன்னேறவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த நேரத்தில்,++
உங்கள் நட்பு பட்டியலில் இல்லாத ஒரு வேற்று மத பெயர் கொண்ட நபர் உங்கள் பதிவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார்.உடனே,அவர் பெயரை பார்த்தவுடனேயே அவர் எதிர்வினைக்கு பதில் சொல்லாமல், அவர்கள் மதத்தில் உள்ள பிரச்சனையை பேச ஆரம்பித்தால்..++
பேரறிஞர் அண்ணா நினைவு சிறுகதைப் போட்டிக்கு,சிறுகதைகள் வந்த வண்ணம் இருக்கிறது.மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் நண்பர்களே.Keep them coming.Another 3 days to go.
விரிவான செய்தி:திராவிட வாசிப்பு “பேரறிஞர் அண்ணா”நினைவு சிறுகதை போட்டிக்கு,இதுவரை சிறுகதைகளை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.++
சிறுகதைகளை அனுப்ப இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. அனைவரையும் எழுத அழைக்கிறோம். விரிவான செய்தி கீழே..
—-
பிப்ரவரி மாதம், திராவிட வாசிப்பு இதழுக்காக, “பேரறிஞர் அண்ணா நினைவு சிறுகதை போட்டி” நடக்கிறது.சிறுகதைகளை எழுத அழைக்கிறோம்! 1) சிறுகதைகள் திராவிட வாசிப்பு மின்னிதழில் வெளியாகும்.++
2) முதல் மூன்று சிறந்த கதைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
3) சிறுகதை 5000 சொற்களை மிகாமல் இருக்க வேண்டும்.
4) கதை எந்த வகைப்பாட்டிலும் இருக்கலாம். பெரியாரிய, திராவிட இயக்க, முற்போக்கு, இடதுசாரி கருத்தியல் சார்ந்த படைப்புகள் வரவேற்கப்படுகிறது.++
எங்க வீட்டில் மாமா - அத்தை ன்னு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் பலர் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களே!
வேளாங்கண்ணி திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் அப்பா, ரெட்கிராஸ் சார்பில் சேவை செய்திருக்கிறார்.
வேளாங்கண்ணி செல்லும் போதெல்லாம் நாகூர் தர்கா செல்லாமல் நாங்கள் திரும்பியதில்லை!
++
அப்பாவின் பிறந்தநாளுக்கு அவர் அழைக்கும் பல நண்பர்களில் அனைத்து மதத்தவர்களும் இருப்பார்கள். தினமும் திருநீர் இடாமல் வெளியே செல்லாத அப்பா, தன் பிறந்தநாளுக்கு பாஸ்டரை வைத்து ஜெபம் செய்வார்!
ரம்ஜான், பக்ரீத்துக்கு பிரியாணி மட்டுமல்ல, ++
பொங்கலுக்கு கரும்பும் ராஜகிரி பாய் வீட்டில் இருந்து வரும்!
எங்கள் வீட்டு சுக துக்கங்களை வெளிப்படையாக அப்பாவும் அம்மாவும் பகிர்ந்ததில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் உண்டு. அவர்கள் வீட்டு பிரச்சனைகளையும் உரிமையாய் பேசும் இடமாக எங்கள் வீடு இருந்தது.
++
காமராசர் ஆட்சியில் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா சொல்வார்.
எப்படியும் தோற்றுவிடுவீர்கள். எதற்கு வாக்கெடுப்பு என்று ஆதிக்க மமதையில் ஏளனமாக கேட்பார்கள்.
அதற்கு பேரறிஞர் அண்ணா பதில் சொல்வார்.++
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை யார் யார் எல்லாம் எதிர்த்தார்கள் என்பதை வரலாற்றில் பதிய வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பார். அண்ணாவின் அந்த சட்டமன்ற உரை வரலாற்று சிறப்புமிக்கது.
அதே, பேரறிஞர் அண்ணா, 1967 ல் முதலமைச்சராக பதவியேற்ற பின்,++
தாய் திருநாட்டிற்கு, தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
அன்று, பேரறிஞர் அண்ணா செய்த மற்றொரு சம்பவம்.
எந்த காங்கிரஸ்காரர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை எதிர்த்தார்களோ, அவர்களையும் சேர்த்து, தீர்மானத்தின் முடிவில்..
தமிழ்நாட்டில் அறிவார்ந்த சங்கி என்று யாராவது இருக்க முடியுமா?
சங்கி என்றாலே முட்டாள்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், அப்படி நினைப்பது தான் முட்டாள்தனம். சங்கிகளில் பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன. மேல் அடுக்கில் இருப்பவர்கள் முட்டாள்கள் இல்லை. ++
அவர்கள் அறிவு தளத்தில் வேலை செய்பவர்கள்.வரலாற்றையே மாற்றும் அளவுக்கு ஆற்றல் படைத்தவர்கள். கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி மையங்கள் என அறிவுத் தளம்,பண்பாட்டு தளத்தில் இவர்களது ஊடுறுவல் அதிகம்.இவர்களின் இன்னொரு பிரிவு தான் இலக்கியத்துறையிலும் இருக்கிறது.இது சங்கிகளின் மேலடுக்கு.
++
அடுத்த அடுக்கில் இருப்பவர்கள், காலாட்படையினர். அதாவது foot soldiers. இவர்களின் வேலை முற்றிலும் வேறானது. சாதி, மத, மொழி, இன அடையாள பிரச்சனைகளை கிளப்பி நம்மை பிசியாக வைத்திருப்பவர்கள் இவர்கள் தான். நாம் அதிகமாக பார்ப்பது இவர்களாக தான் இருக்கும். ++