அடுப்பங்கரையிலும் அமெரிக்காவிலும், புரோகிதராகவும், பிரொபஷனலாகவும், தமிழ் எழுத்தளாராகவும், நுனி நாவில் ஆங்கிலம் பேசுவராகவும், பழுத்த ஆத்திகராகவும், கம்யூனிஸ்டாக… பல தளங்களில் பரந்து விரிந்தோம்.
அமெரிக்கா போனாலும் ‘ஆத்து’ பாஷை. எங்கெங்கு சென்றாலும், உலகெங்கும் தமிழ் சங்கம் வளர்த்தோம். தமிழ் நூல்கள் எழுதினோம்.
தமிழை ‘செந்தமிழ்’ முதலில் சொன்னோம். தேடி தேடி பழந்தமிழ் இலக்கியம் சேகரித்தோம். திடீரென ஒருவன் “நீ தமிழனில்லை” என்றான். முதலில் திகைத்து பிறகு சிரித்து சமாளிக்க கற்றோம்.
அரசாங்க வேலை உன்னதம் என்றே நம்பினோம். வேலையில் உண்மையாய் இருந்தோம். ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்று எவரும் சொல்லிக் கொடுக்காமலேயே வாழ்ந்தே காட்டினோம். திடீரென ஒருநாள் “உனக்கு அரசு ஊழியம்” இல்லை என்றான்.
மாற்றுவழி கண்டோம். அரசு ஊதியம் பற்றி கவலை கொள்ளாத, ஏன் விண்ணப்பமும் செய்யாத ஒரு தலைமுறை கண்டோம். ஏன்! 45 வயதுக்கு கீழ் அரசு ஊழியத்தில் எவரும் இல்லை என்றே நிலை கண்டோம்.
சுதந்திர போராட்ட களம் கண்டோம். தியாகிகள் பலரை தந்தோம். துப்பாக்கி ஏந்தினோம்.ரகசிய இயக்கங்களில் இருந்தோம்/நடத்தினோம். அடிபட்டோம், உதைப்பட்டோம். சிறை சென்றோம்.
இன்று தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பலவற்றில் எம்.எல்.ஏ.வாக அல்லது அமைச்சராக அல்ல. ஒரு கவுன்சிலர் ஆக கூட தடை இருக்கும். ‘நவீன தீண்டாமைக்கு’ பழகி கொண்டோம்.
மகாத்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க ‘அரிஜன சங்கம்’ அமைத்தோம். தமிழகத்தின் கோயில் கதவுகளை தாழ்த்தப்பட்டோருக்காக திறந்தோம். ‘வைக்கம்’ ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு மதுரையும் சிதம்பரம் கோயில்கள் எவ்விதம்/யாரால் தலித்துக்களுக்கு திறக்கப்பட்டன என்பது தெரியவே தெரியாது.
அவைர்களில் சிலர் “ஆரிய” வாதம் செய்யும்போது அமைதியாய் விலகுகிறோம்.
கணித மேதையை தந்தோம். அறிவியலில் நோபல் பரிசுகள் பெற்றோம். (இந்தியா அறிவியலில் பெற்ற 4 நோபல் பரிசுகளில் 3 தமிழகத்தை சேர்ந்தது) நல் ஆசிரியராய் இருந்தோம்.இந்திய அரசியல் சாசன அமைப்பில் பெரும்பங்கு ஆற்றினோம்.
கல்வி சாலைகள் அமைத்தோம். அறிவு தளத்தில் பெரும் பங்கு ஆற்றினோம். ஆனால் நாடகங்களிலும் சினிமாவில் ‘அறிவு இல்லாத’ முட்டாளாக மட்டுமே பிராமணர்களை காட்டும் மூடநம்பிக்கையை கண்டு சிரிக்க கற்றோம்.
“பார்பார புத்திய காட்டிடேயே” என்ற வசவுகள் வலித்தாலும், சிரிக்கும் முகம் எளிய வாழ்க்கை. உலகில் எந்த தவறு நடந்தாலும் (அட! மழை பெய்யாவிட்டாலும்) ‘பார்பன அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டு சதியை முறியடிப்போம்’ என சிவப்பு மையில் அடிக்கப்படும் போஸ்டர்களை பார்த்து அடிக்கடி குழம்பி போவோம்.
எம்மை காரணம் இல்லாமல் வெறுப்பவர்கள் ஒரு நாள் மாறுவர். அதுவரை நாம் காத்திருப்போம்.
செலவு குறைந்த எளிய உணவு, வேலையில் அற்பணிப்பு. வழியில் கோயிலை பார்த்தால் கன்னத்தில் போடும் பக்தி.
அவசர கதியில் காயத்திரி ஜபம். குழந்தைகளின் எதிர்கால கவலை. சாதி சண்டை மற்றும் மத சண்டைகளை படித்தால், மனதில் வருத்தம்.
எவரையும் விட உயர்ந்தவனும் இல்லை. எவரையும் விட தாழ்ந்தவனும் இல்லை. என் தாய் மொழியையும் நாட்டையும் நேசிக்கும் நாங்கள் எளிய மனிதர்கள்.
#பிரண்டை அல்லது #வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது.
முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
#செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூ மருத்துவ குணங்களை கொண்டதாகும்.
இது கிழக்கு ஆசியாவில்
தோன்றிய ஒரு தாவரமாகும்.
இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது
மருத்துவக் குணங்கள்
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
#திப்பிலி (Piper Longum), எனும் பல பருவத்தாவரம், Long Pepper (அ) Indian Long Pepper என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும். Piperaceae குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.
ஒரு மூலிகைத் தாவரமான இது அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும்.
கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான
கரும்மிளகை (piper nigrum) ஒத்த சுவையோடும், அதைக் காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.
#சித்தரகம் (ஆங்கிலம்: White Leadwort (தாவரவியல் பெயர்: Plumbago zeylanica)
என்றழைக்கப்படும் இது, தென்னிந்திய
பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்டது.
இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான பீகார்,
மேற்கு வங்காளம், மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் வளர்க்கப்படும் மருத்துவத் தாவரமாகும்.
சித்தரகத்தின் இலைகள், இலைக்காம்புள்ளமை அல்லது ஒட்டிவாழ் தன்மையும், மற்றும் முட்டை வடிவம் கொண்ட, மற்றும் நீளம் 5-9 × 2.5-4 செ.மீ. அளவில் கத்திகள் தலைகீழ் ஈட்டி வடிவானது. தொற்றிப் படரும் புதர் வகை பல பருவத் தாவரமான இது 5 மீ உயரம் வரை வளரக்கூடியது.
#கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிட்டு அழைத்தனர்.
பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.