அது ஒரு இருண்ட காலம்.
ஆர்யத்தின் மாயை, வைதீகத்தின் சாயை,
வடமொழியின் போதை, உயர்சாதியின் காதை,
எனும் வரலாற்றுக் கசடுகளால்
களிம்பேறி,
களப்பிரர் காலமெனத் தமிழகம் மங்கித் தூங்கியிருந்த காலம்!
தமிழன் சற்றே பின்தங்கிச்
சோம்பியிருந்த காலம். 1/3
முயலின் தூக்கமே ஆமையின் வெற்றி எனில்,
புலியின் தூக்கம் -
தமிழ்ப் புலியின் தூக்கம்
ஆர்யத்தின் வெற்றி அல்லவா?
சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணி புரியும், சென்னை - நீலாங்கரையைச் சேர்ந்த திரு.பாஷா பாய் கலாம் என்பவர், கடந்த 22-ஆம் தேதி சவுதி அரேபியா - தனுமா என்ற இடத்தில் விபத்தில் சிக்கி, மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 1/4
அவரது குடும்பத்தினருக்கு அவர் உடல் நலன் குறித்த தகவல் தெரியாமல் தவிப்பதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இன்று (28.05.2021), திரு.@S_AravindRamesh MLA வுடன், சென்னை - நீலாங்கரையிலுள்ள அவரது இல்லம் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன்.
2/4
பின், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, திரு.பாஷா பாய் கலாமின் உடல்நிலை குறித்து, சவுதி அரேபியா தூதரகம் மூலம் விசாரிக்கக் கோரினேன். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துரித நடவடிக்கையால்,
3/4
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மேடும், பள்ளமுமாயிருந்த தமிழ்நாட்டின் பட்டி தொட்டிக்கெல்லாம் ஈரோட்டிலிருந்து ஒரு பகுத்தறிவுத் தார் ரோடு போட்டது சுயம்புவாய்த் தோன்றிய ஒரு சுயமரியாதைக் கனல்.
ஆரியத்தின் அதிகாரத் தலைப்பாகைக்கோ கொடுங்கானல்;
வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை -
தன் தடிக்கொரு கைப்பிடியாய் ஒரு பகுத்தறிவு நெசவாளரையும், காஞ்சீபுரத்தில் கண்டெடுத்தது!
அதுவரை, பட்டுக் கடலிலும், பஞ்சுப் பொதியிலும் அமிழ்ந்திருந்த தமிழகத்தின் பாமரத்துத் தறியை இடம் பெயர்த்து,
2/4
ஈரோட்டிற்கு எடுத்து வந்த அந்தக் காஞ்சிபுரத்துக் கலைக் கரம்,
இனமான ஆடையொன்றைத் தமிழருக்குத் தனியாகத் தயாரித்துத் தர, அதுவரை ஆட்சி செய்த, மேல்சாதி ஆயத்த ஆடைகள் ஒழிந்து போய், அன்று முதல், தோளிலே நீண்ட துண்டு அணிந்த கம்பீர உடை அமுலுக்கு வந்தது!
3/4
தலைவர் கலைஞர் மீதும், கழகத்தின் மீதும் மாறாத விசுவாசமும், தீராப் பற்றும் கொண்ட மூத்த முன்னோடி, மேனாள் தமிழக அமைச்சரும்,
கழகத்தின் செய்தி தொடர்பாளர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான, எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய,
1/7
அத்தா ஏ.ரகுமான்கான் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டுச் செயலற்று அமர்ந்திருக்கிறேன்.
என் தந்தையின் மனமொத்த நண்பராக எங்கள் குடும்பத்தில் ஒன்றானவர்.
அரசினர் தோட்டத்தில் எங்களது வீட்டின் பின்புறத்தில் அவரது வீடு என்பதால் சுக, துக்கங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து,
2/7
இன்று அடுத்த தலைமுறை வரை தொடர்கின்ற அற்புதமான உறவானவர். அவரது அன்பு மனைவி, எனக்கு உடன்பிறவாத ‘நிலவர் அக்கா’.
‘குட்லி’ எனப் பாசத்தோடு அவர் குடும்பத்தார் அழைக்கும் என் மூத்த மகளுக்கு, அன்பான’ பாய் தாத்தா’.
3/7