1915-16, 17, 18,19-வரை ஈரோடு வியாபார சங்கத் தலைவன்.
தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை உறுப்பினர்.
5-ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவர்.
ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி
பழைய மாணவர் சங்க செக்ரட்டரி
ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி பிறகு தலைவர்
1/N
1914-ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி
10-ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட்
ஈரோடு தாலுக்கா போர்ட் பிரசிடெண்ட்
பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென்.
ஜில்லா போர்டு மெம்பர்
வாட்டர் ஓர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி
பிளேக் கமிட்டி செக்ரட்டரி
2/N
10 ஆண்டு கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரி பிறகு 1929-வரை வைஸ்பிரசிடெண்ட், பிரசிடெண்ட்
1918-ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்
1918-ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுகா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்மெண்டாரின் நிர்வாகி
3/N
கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி;
காங்கிரசிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி தலைவர்
காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளர் பின் 5-வருடம் தலைவர்
1940, 42-இல் 2 முறை முதல்வர் வாய்ப்பு
போதும், இவ்வளவு எடுத்துக் காட்டுவகற்கே நான் மிகமிக வெட்கப்படுகிறேன். இருந்தாலும்
4/N
இருந்தாலும், நான் ஏன் "வெட்கம்" என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்துக்காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழ வேண்டிய அவசியம் எனக்கு எந்த கட்டத்திலும் வந்ததில்லை என்பதை எடுத்துக் காட்டவேயாகும்.எல்லாத் துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத
5/N
அனுபவமும், திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது, நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக்கூடும்; பல கருத்துக்களை மாற்றியும் இருக்கிறேன்.
6/N
இவை எல்லாம் எனது கண்ணியமான அனுபவம் ஆராய்ச்சியைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ, பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ,பெரிய ஆள் ஆகவோ,இழிவை மறைத்து கொள்ளவோ கடுகளவு கூட இருக்காது.
---பெரியார்
இவ்வளவு வசதிகளை துறந்து மக்களுக்காக நின்ற ஒரு மனிதனை பார்க்க முடியாது
N/N
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கால்டுவெல் கிறிஸ்தவர் என்றால் வில்லியம் ஜோன்சும் கிறிஸ்தவர்தான்,
கால்டுவெல் ஆங்கிலேயர் என்றால் வில்லியம் ஜொன்ஸும் ஆங்கிலேயர்தான் ஆனால் ஆளுநரிலிருந்து எச். ராஜா வரைக்கும் எல்லா சங்கிகளும் கால்டுவெல்லை பார்த்து மட்டும் மண்ணை வாரி தூற்றுவது ஏன்?
ஏனென்றால்
1/N
ஆரிய பார்ப்பனர்களின் கனவை சல்லி சல்லியாக உடைத்தவர் கால்டுவெல். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன என்று எழுதுகிறார் கிருஸ்தவரான வில்லியம் ஜோன்ஸ், அன்றைக்கு ஆங்கிலேயரோடு அதிகாரத்தை பகிர்ந்து கொண்டிருந்த
2/N
இந்திய ஆரிய சமூகம் பூரித்து போகிறது,
பின்னால் கால்டுவெல் வந்தார், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இந்தியாவில் சமஸ்கிருத துணை இல்லாமல் இயங்கும் மொழிக் குடும்பம் ஒன்று இருக்கிறது, அதன் பெயர் திராவிட மொழிக் குடும்பம், அதன் மூத்த மொழி தமிழ் என்று ஆதாரத்தோடு நிறுவுகிறார்.
3/N
தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது.
1/N
அரசியலை பொருளாதார வாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது ஒழுக்காறை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது. அது அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
வானதிக்கு பயன்படுத்திய congenital liar என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
2/N
அது ஒரு வழமையான அரசியல் விமர்சனச் சொல் அல்ல. Congenital என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் ஒரு உரிச்சொல். Congenital என்பது Congenital நோய், Congenital குறைபாடு, Congenital ஊனம் போன்ற பயன்பாட்டில் தான் அதிகம் வருகிறது.
திமுகவிற்கு இந்த 5 ஆண்டுகால ஆட்சி என்பது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆட்சிக் கலைப்பு எனும் மிரட்டல் தொடர்ச்சியாக இருக்கவே போகிறது.
பத்மா சேஷாத்ரி எனும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி நிர்வாகத்தை விசாரணைக்கு உட்படுத்துவதை, தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு
1/N
பார்ப்பனர்களுக்கு எதிரான தாக்குதல் என்றும் அதற்காக ஆட்சியை கலைப்பேன் என்றும் மிரட்டி ஆளுனருக்கு கடிதம் எழுதுகிறான் சு.சாமி. அதுதான் இந்தியாவில் பார்ப்பனியம் கைக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட அதிகாரம்
எல்லாவற்றையும் மக்களிடம் பேசுவது ஒன்றே திமுக இப்போது முதன்மையாக செய்ய வேண்டியது
2/N
திமுகவின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் நமது ஆட்சியைக் கலைக்க ஆரியம் சூழ்ச்சி செய்கிறது என்பதை மக்கள் முன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டும்
மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை ஒழிக்க பார்க்கும் பார்ப்பனியம் ஜனநாயக விரோதமானது என்பதை திமுகவின் கடைக்கோடி தொண்டன் முதல்
3/N
டேய் ஜக்கி @SadhguruJV இங்க வா..
மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார்.
1/N
மொத்தம் 473 பேரில் 471 பேர் ஹிந்துக்கள். கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பட்டியல்
பாரதிய வித்யா பவன். காந்தி கொலைக்குப் பின் RSS மீதான தடையை அகற்ற முக்கிய பங்காற்றிய கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய்
2/N
அடுத்தது, மயிலாப்பூர் கிளப். 1903ல் தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், ஜிம், உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள்
3/N
எடப்பாடி ஏன் ஆபத்தானவர் என்றால் அவரிடம் அடிப்படையான மான அபிமானங்கள் எதுவுமே கிடையாது, காரியம் ஆகிறது என்றால் யார் காலிலும் புழுபோல விழுந்து கிடப்பார் பின்பு அவரையே முதுகில் குத்துவார், காரியத்திற்காக தன்னை ஆண்மையற்றவர் என்று சொல்பவரிடமும் பல்லை இளிப்பார், காரியத்திற்காக
1/N
13 உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் டிவி பார்த்து தெரிந்து கொண்டதாக அசால்டா இருப்பார், காரியத்திற்காக "பழனி' என்று முதல் பக்கத்தில் தினமலர் அவமானப்படுத்தினாலும் அமைதியாக இருப்பார், அதே காரியத்திற்காக வேறு அர்த்தம் என தெரிந்தாலும் தன் அம்மாவைகூட அவமானப்படுத்தவும் செய்வார்..
2/N
எடப்பாடியிடம் எந்த துரோகத்திற்கும் அக்கவுண்டபிலிட்டியை எதிர்பார்க்க முடியாது தூத்துக்குடியில் பெலிக்ஸ் ஜெயராஜ் கொத்துக்கறி போடப்பட்ட போதும் சரி, பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் துடித்தபோதும் சரி, சேலம் எட்டு வழி சாலை போராட்டத்தில் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறிய
3/N
1. அவரை இவர் கொன்றார், இவரை அவர் கொன்றார், அந்த கடவுள் இறங்கி வந்தார், இந்த கடவுள் ஏறிப் போனார் என அறிவுக்கு ஒவ்வாத டுபாக்கூர் கதைகள் புனையப்படாத நேரடியான மக்களின் கொண்டாட்டம்.
1/N
2. அறிவியலின்படி சூரிய நாட்காட்டியைப் பின்பற்றி கொண்டாடப்படும் வெகு சில பண்டிகைகளில் ஒன்று. சந்திரன், திதி போன்றவற்றைப் பொறுத்து பொங்கல் மாறாது.
3. பிறப்பு, இறப்பு போன்ற எந்த தீட்டுகளாழும் பாதிக்கப்படாத ஒரே திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி.
2/N
4. பொங்கல் திருநாளன்று படைக்கபடும் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) போன்றவை பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு என்பது குறிப்பிடத்தகுந்தது.
3/N