அன்பெழில் Profile picture
Sep 20, 2020 22 tweets 13 min read Read on X
#Farmbill2020 #வேளாண்துறை_சட்ட_மசோதா_திருத்தங்கள்
உண்மை என்ன என்று தெரியாமல் எதிர்ப்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஒரு நல்ல விஷயம் கண் முன்னே நடந்தாலும் அதை வரவேற்றுப் பாராட்டத் தெரியாமல் இருப்பது இரண்டாவது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதா முழுக்க
முழுக்க விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க, கூடுதல் நன்மை
அவர்களுக்குக் கிடைக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள்:
* விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் வசதி) மசோதா 2020
* விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு)மசோதா 2020
* அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா 2020
1. இதற்கு முன்னால் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உற்பத்தியை விற்க முடியாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மண்டியில் தான் இவர்கள் ஒரு குழுவாக போய் விற்க முடியும். இதற்குப் பெயர் Agricultural Produce Marketing Committee or APFC. இங்கு தான் விவசாயிகள் லைசன்ஸ் பெற்ற கமிஷன் ஏஜன்ட்
மூலம் விற்க முடியும். அதனால் லஞ்சம் லாவண்யம் பெருகி தலை விரித்தாடியது. மாபியா கைகளில் விவசாயிகள் அகப்பட்டுக் கொண்டு திண்டாடினர். நம் நாட்டின் 50% விவசாயிகள் ஆனால் அவர்கள் உற்பத்தி ஜீடிபியின் பங்கில் வெறும் 17% தான். இந்த சீர்திருத்த மசோதாவினால் நம் நாட்டு ஜீடிபியில் விவசாயிகளின்
உற்பத்திப் பங்கு பெருகும்.
2. இச்சட்டம் வேளாண் விளை பொருட்களை வணிகப் பகுதி என அறிவிக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்க அனுமதிக்கிறது. இதனால் விவசாயிகள் விற்பதற்காக முழுக்க சுதந்திரம் வழங்கப்படுகிறது.
3. விவசாயிகள் தங்கள் விருப்பம் போல எவ்வித தடையும் இன்றி ஒழுங்குமுறை
விற்பனை கூடங்களுக்கு வெளியிலும் விளை பொருட்களை விற்கலாம். இதற்காக எந்தக் கட்டணமும் கொடுக்கத் தேவையில்லை. மின்னணு வர்த்தக முறையில் நாட்டில் எந்தப் பகுதியில் உள்ள வணிகர்களும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய சட்டத்தில் வழி உள்ளது.
4. தானியங்கள், பருப்பு வகைகள், உருளை, வெங்காயம், சமையல்
எண்ணெய் ஆகியவற்றுக்குப் போர், பஞ்சம், பேரிடர் காலங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் முறைப்படுத்தவும் இந்தத் திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
5. தோட்டக்கலை விளை பொருட்களின் விலை 100%க்கு மேலும் வேளாண் விளை பொருட்களின் விலை 50%க்கு மேலும் அதிகரிக்கும்போது அவற்றின் இருப்பு அளவை
நெறிபடுத்த முடியும். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன் பெறுவர்.
6. இந்த புது மசோதாவினால் விவசாயிகளை நசுக்கி வரும் ஊழல் முற்றிலும் அகற்றபடும்.
7. விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப் படுவதால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த
பாதிப்பும் வராது.
8. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும்.
9. சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை
யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது.
10. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. சந்தை கட்டணமாக இதுவரை 8.5% செலுத்தப்படவேண்டியிருந்தது. அது இனி இருக்காது. இது உற்பத்தியாளருக்கும் வாங்கி விற்பவருக்கும்
பெரும் இலாபத்தை கொடுக்கும்.
11. இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும்.
12. இதனால் விவசயாத் துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகளுக்கு பெரிய வர்த்தக நிறுவனங்களுடன்
நேரடி தொடர்பு கிடைக்கும்.
13. முன்பு தரகர்கள் கை ஓங்கி இருந்தது. இந்த மசோதா மாற்றத்தால்
சந்தை சமன் நிலைக்கு வருகிறது. (Level playing field).
14. ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் இச்சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் வகையிலான ஷரத்துகள் எதுவும் இல்லை.
விவசாயிகளுக்கு ஒப்பந்த விலை மூலம் உறுதியான விலை கிடைக்கும்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் நலனுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? இலவச மின்சாரம், இலவச தண்ணீர் கடன் தள்ளுபடி என்று கொடுத்தும் விவசாயிகள்
இலாபகரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் தான் வைத்திருந்தார்கள். கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தால் விவசாயத் துறை நவினமயமாக்கப்படும். உலகம் முழுதும் முன்னேறிய நாடுகள் விவசாயத் துறையை எவ்வாறு நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கி விவசாயிகளை செல்வந்தர்களாக மாற்றியுள்ளனவோ அதைத் தான் இந்தியா
இப்போ செயல்படுத்துகிறது. இந்த நல்ல மாற்றத்தை எதிர்க்கின்றது யார் என்று பார்த்தால் இதுவரை விவசாயிகளின் வளத்தைப் பெருக்காமல் வாளாவிருந்த எதிர்க்கட்சிகள் தாம்! மீடியாக்களும் எதிர்க்கட்சிகளும் பொய்யுரைத்து விவசாயிகளை பீதியடையவைத்து தங்கள் பிடிக்குள் மக்களை வைக்கப் பார்க்கின்றனர்.
விவசாயியாக இருந்து தமிழக முதல்வர் ஆகியிருக்கும் திரு @EPSTamilNadu , இன்றும் தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படும் ஒருவர், இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்காகவே என்று ஆதரவு தனது வரவேற்பு அளித்திருப்பது இச்சட்டத்திற்கான அங்கீகாரம்.
#FarmBill2020

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 28
#ஸ்ரீ_லலிதா_ஸஹஸ்ரநாமம்_பிறந்த_வரலாறு
இதை உபதேசித்தவர்-ஸ்ரீஹயக்ரீவர்.
உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது.Image
18 புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் 1000 திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. 183 சுலோகங்கள் அடங்கி நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு. இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய சௌபாக்ய பாஸ்கரம் என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (பொ.பி). சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப் படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும், முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது. லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.Image
1008 நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் -
ஸ்ரீமாதாவின் அவதாரம்
கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம்
மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்

தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. 4 கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.Image
Read 8 tweets
Mar 27
#சனாதன_தர்மத்தின்_சடங்குகளின்_மகிமை
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. இது போன்ற Image
வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென இத்தனை சொந்தங்களாImage
என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப் பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு
சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,
சந்திரனுக்கு
Read 13 tweets
Mar 27
#வைஷ்ணவ_சம்பிரதாயம்
பஞ்ச சமஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும்.

1) பெருமாளின் சங்கு, சக்கரத்தை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் தாபசம்ஸ்காரம்.

2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் 12 இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத்Image
துவங்குதல் புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.

3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் நாமசம்ஸ்காரம் ஆகும்.

4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது
செவியில் உபதேசமாகப் பெறுதல் மந்திரசம்ஸ்காரம் ஆகும்.

5) எம்பெருமானின் மூர்த்தியை, அமைத்துக் கொடுத்து யஜ்ஞம் என்னும் திருவாராதணை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல் யாகசம்ஸ்காரம் ஆகும்.

இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும்.
Read 9 tweets
Mar 27
#அறிவோம்_நம்_சனாதன_தர்மம்
எழுதியவர் : உ.வே.சாமிநாதய்யர்
கொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை என்பதோர் ஊர். அது திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடி தாலுகாவில், லாலுகுடிக்கு வடமேற்கே 2 மைல் தூரத்தில் பல ஊர்களுக்குச் செல்லும் சாலைக்கிடையே அமைந்துள்ளது. அங்கே அக்கிரகாரத்தில் 200க்கு மேற்பட்ட அந்தணர்களின் வீடுகள் உண்டு. அவர்களிற் பெரும்பாலோர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழநாட்டுப் பிரஹசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாவரும் சிவபக்தி உடையவர்கள். தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர்களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். பழைய காலத்தில் இவ்வழக்கம் எல்லாச் சாதியினரிடத்தும் இருந்து வந்தது. ஏறக்குறைய 150 வருஷங்களுக்கு முன் மேற் கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 2000 ஏகரா நன்செய்கள் இருந்தன. அவை 7 கிராமங்களில் இருந்தனவென்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வமுள்ளதாக விளங்கிய குடும்பம். அவர் தெய்வபக்தியும், ஏழைகளிடத்தில் அன்பும், தர்மசிந்தனையும் வாய்ந்தவர். அவர் நாள் தோறும் காலையில் ஸ்நாநம் செய்துவிட்டுப் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார். பிறகு தாம் போசனம் செய்வதற்கு முன் தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று பார்ப்பார். திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குப் பாதசாரிகளாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களைச் சுப்பையர் உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதையறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமாக அமைந்து இருந்தது. எல்லா வகையினருக்கும் அவரவர்களுக்கேற்ற முறையில் அவர் உணவு அளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார் வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது.Image
தம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்து போவாரை உபசரித்து அன்னம் இடுவதையே தம் வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார். பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் அன்னதானம் ஐயரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர். சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது. அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், பெண்கள், மருமக்கள், முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அன்னதானம் செய்யும் பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக் கொள்ளவில்லை. அவர் வீட்டிலுள்ள பெண்பாலாரே சமையல் செய்வதும் வந்தோரை உபசரித்து அன்னமிடுவதுமாகிய செயல்களைச் செய்து வந்தனர். சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிறவேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கேற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள்.
“இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடந்து வருவது சாத்தியமா?” என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். அவர், “பரம்பரையாக, நடந்துவரும் இந்த தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதே சிவ ஆராதனமென்று எண்ணுகிறேன். தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்ட காரியம் இல்லையென்ற திருப்தியே எனக்குப் போதும்” என்பார். இங்ஙனம் அவர் இருந்து வரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதியளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. ஆயினும் அவர் அன்னதானத்தைக் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடுகிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே உண்டான விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் சுப்பையர் மனங் கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் அந்நாயன்மார்கள் இறைவன் சோதனைக்கு உட்பட்டுப் பின் நன்மை பெற்றதையறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தர்மம் தலை காக்கும் என்ற துணிவினால், எப்பொழுதும் செய்து வரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்ன தானத்தை நடத்தி வந்தார். பொருள் தட்டுப் பாடு உண்டானமையால் தம் குடும்பத்துப் பெண்பாலரின் ஆபரணங்களை விற்றும், அடகு வைத்தும் பொருள் பெற்று அன்ன தானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனால் குடும்பத்தினருக்குச் சிறிதேனும் வருத்தம் உண்டாகவில்லை. அப்பெண்களோ அந்த நகைகள் ஒரு நல்ல சமயத்தில் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றியிருந்தார்கள்.
Read 10 tweets
Mar 26
அருஞ்சுனை காத்த அய்யனார்
மேலப்புதுக்குடி, தூத்துக்குடி மாவட்டம்
அங்கே உள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகும். அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான்.Image
அப்பகுதியில் இருந்த தடாகத்தில் உள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இதில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றபோது கல்லால் கால் தவறி விழுந்தார். அவர் கொண்டு சென்ற குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டு Image
இருந்த முனிவர் மீது கொட்டியது. கோபமுற்ற முனிவர், "உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு Image
Read 11 tweets
Mar 25
#பங்குனி_உத்திரம் #சேர்த்தி_சேவை
ஓடோடி வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது! கைவிரலில் இருந்தது. எங்கே போயிற்று கணையாழி? அவளுக்குத் தெரிந்தால்! அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்! என்ன செய்வது? திரும்பவும் உறையூருக்கா? வேறு வினையே வேண்டாம்! அரங்கனின் பதற்றத்தைக் கண்டு ஒருவர் Image
சொன்னார், "நான் கூட பார்த்தேனே!" கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி, உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், அரங்க மாநகரில் யார் காதில் விழவேண்டுமோ, அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது. வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்து ரங்கநாயகியைத் Image
தேடி வந்தால் - அந்த நேரம் பார்த்து, அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - படார் என்று பழைய காலத்துக் கதவாயிற்றே என்றுகூட பார்க்கவில்லை. அத்தனை கோபம் அரங்கநாயகிக்கு! உறையூருக்குப் போனது தப்பு இல்லை! கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை! கணையாழி காணாமல் போனதுதான் தப்பு! Image
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(