விவசாயத்தின் வாழ்வாதாரங்களை மத்திய அரசு பறிப்பதா?
விவசாயிகளை கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமை ஆக்குவதா?
தாளம் போடும் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கதே!
தி.மு.க. அனைத்துக்கட்சிக் கூட்டம் காலங்கருதி எடுக்கப்பட்ட முடிவே! #AgricultureBills#விவசாயிகளின்_விரோதி_பாஜக
அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதை என்பதுபோல, மத்திய அரசு கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றியுள்ள விவசாயம் சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களும் நாட்டின் விவசாயிகளால் பெரிதும் எதிர்க்கப்பட்டு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டங்களில், வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்!
மற்ற மாநிலங்களிலும் விவசாயிகளின் வேதனை வெளியே வந்து, கொதி நிலையில் உள்ள அவர்தம் உரிமை உணர்வுகள் கொந்தளிப்போடு மோடி அரசின் விவசாய விரோதப் போக்கினை எதிர்த்துப் போராடத் துவங்கியுள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வருமானத்தை இரு மடங்காகப் பெருக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த பா.ஜ.க, இன்று அவர்களது குறைந்தபட்ச உரிமைகளைக்கூடப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளிடம் தள்ளி விடும் கொடுமையான நிலைக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதே இந்த 3 மசோதாக்கள்!
விவசாயம் சம்பந்தமான இம்மூன்று சட்டமுன் வடிவுகளும், விவசாயிகளிடமிருந்து விளை பொருள்களை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி தடுத்து விடுகின்றன. இதனால் உணவுப் பாதுகாப்பு பலியிடப்படுகிறது.
விவசாயிகளுக்கு விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கைவிட்டு விட்டு, விவசாயிகளைத் தனியார் வர்த்தக பெரு முதலாளிகளிடம் தள்ளி விடுகிறது.
இன்றியமையாப் பண்டங்களின்கீழ் வர்த்தகக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தும் முறையின்கீழ் இருந்து வந்த தானியங்கள் - பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவை பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.
தங்களது நிலத்தில் அவ்வப்போது உள்ள பருவநிலைமைக்கு ஏற்ப, என்ன பயிர் விளைவிக்கலாம் என்று விவசாயி விரும்பினாலும், அந்த விருப்பப்படி அவர் செயல்படுத்த உரிமை எதுவும் கிடையாது. மாறாக, ஒப்பந்தம் செய்திருப்பவர் என்ன விளைவிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறாரோ அதைத்தான் விளைவித்திட வேண்டும்.
அவர்கள் நிலத்திலேயே விவசாயிகள் தினக்கூலிகளாக மாற்றப்படுவது போன்ற கொடுமையும் ஏற்படக் கூடும்.
ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலைகள் மிகவும் அதிக மாகியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதார பறிப்பினால் இது மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படவே வழிவகுக்கும்.
இப்படி விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்திடுவதோடு அவர் களுக்கு உதவுவதாக இல்லையே! ‘கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்து கொள்ளும்Õ விபரீதமாகவே ஆகி விடக் கூடும்.
விவசாயம் - மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் உள்ள 14ஆவது அதிகாரம் ஆகும்.
(A) விவசாயம் (அதன் கல்வி ஆராய்ச்சி, பயிர்ப் பாதுகாப்பு, பூச்சிகளிடம் பாதுகாப்பு உட்பட) மாநில உரிமைகளிடமிருந்து பறித்த மத்திய அரசு, மாநில அரசுகளை அழைத்து கலந்துரையாடி, கருத்துக் கேட்கும் ஒரு குறைந்தபட்ச நடைமுறையைக்கூட கடைப்பிடிக்கவில்லை.
‘தானடித்த மூப்பாகவே’ இப்படி மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றத் துடிப்பதுபற்றி மாநில முதல்வர்கள் கவலைப்பட வேண்டாமா?
அதிமுக இதில் வெறும் தலையாட்டி பொம்மையாகவே நடந்துகொண்டுள்ளது. மக்களவையில் இதனை ஆதரித்ததோடு, தமிழ்நாட்டு விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏதும் வராது என்று முதல் அமைச்சர் கூறுவது விசித்திரமும், வேதனையுமாக உள்ளது! ‘கடைசி வீட்டில்தான் தீ வந்துள்ளது, என் வீட்டில் அல்ல’ என்ற வாதம் போன்றது அது
புதுச்சேரி முதல்அமைச்சர் திரு.வி. நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், "இந்த மசோதாக்களை மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் செய்திருப்பது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தமிழக முதல் அமைச்சர் இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் வராது என்று சொல்லியிருப்பது விந்தையாக இல்லையா? மத்திய பா.ஜ.க. ஆளுங்கூட்டணியில் உள்ள (SAD) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளத்தின் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை இராஜினாமா செய்து வெளியேறியுள்ளார்.
அதுமட்டுமா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பான பாரதீய கிசான் சங்கம் (BMS) இதனை ஏற்கவில்லை - “மறுபரிசீலனை செய்ய வேண்டும்; நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பி இதன் விளைவுகளை பற்றி அலசி ஆராய வேண்டும்'என்று கூறியுள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தலைமையில் உள்ள மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நாளை (21.9.2020) கூடி முடிவுகளை மேற்கொள்ளுவது காலத்திற்கேற்ற கடமை முடிவும், வரவேற்கத்தக்கதுமாகும். விவசாயிகள் நலனை பலிபீடத்தில் நிறுத்துவதை தடுத்து நிறுத்தியாகவேண்டும்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரை எதிர்த்து
இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆடி வெள்ளிக்கிழமை பூஜை என்ற பெயரால், அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக நடைபெற்ற நிகழ்வினைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன.
திராவிட மாணவர் கழகம் சார்பில் இன்று (30.7.2021) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருத்தம் தெரிவித்தும், இனிவரும் காலங்களில் இதுபோல எதுவும் நிகழாவண்ணம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், இத்தகைய பூஜை, சடங்குகள் நடக்காதெனவும் உறுதி கூறியுள்ளதை ஏற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நிறுத்தப்படுகிறது.
தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது!
முதலமைச்சருக்கு தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டு - நன்றி!
நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், நீண்ட நாள் - மாணவப் பருவந்தொட்டு, கொள்கை, லட்சியம் இவற்றிற்காகப் போராடி 8 ஆண்டுகளுக்குமேல் சிறைவாசம் செய்தவரும், எளிமையும், தொண்டும் இரண்டறப் பிணைந்த சீரிய தொண்டறச் செம்மல் தோழர் என்.சங்கரய்யா அவர்கள்
நேற்று (27.7.2021) நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய தொண்டற அங்கீகார விருதான ‘‘தகைசால் தமிழர் விருது’’ - முதல் விருதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பது கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ் U.U. லலித், ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
1/16
ஜனநாயகத்தில்- அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத்துவா என்ற பத்திரிகையாளர், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ‘கோவிட்’ என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும், 2/16
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமா, பாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காக, 3/16
சி.பி.எஸ்.இ. தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு, ‘நீட்’ தேர்வை ஏன் ரத்து செய்ய மறுக்கிறது?
தமிழ்நாடு அரசு பிளஸ் டூ தேர்வை ரத்து செய்யும் சூழ்ச்சிப் பொறியில் சிக்காமல் மாணவர் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்!
மத்திய கல்வித் துறை - பிரதமர் மோடி தலைமையில் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகமாக இருப்பதாகக் கூறி, சி.பி.எஸ்.இ. (CBSE) நடத்தும் 12 ஆம் வகுப்புத் தேர்வை இவ்வாண்டு ரத்து செய்வது என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
ஆனால், அதே காரணங்கள் வலுவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு என்ற நுழைவுத் தேர்வினை ரத்து செய்வதாக அறிவிக்கவில்லை! அதை நடத்தியே தீருவோம் என்று கூறுகிறார்கள்!
இன்று (ஜூன் 3 - 2021) ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சித்த முத்தமிழ் வித்தகர் கலைஞரின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா! #HBDKalaignar98
கரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதும், அடக்கத்தோடு ஆங்காங்கே உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க!
கலைஞர் உருவத்தால் மறைந்தாலும், உணர்வுடன் திராவிட இனத்தோடு என்றும் வாழ்பவர். #HBDKalaignar98
தந்தை பெரியாரின் ‘ஈரோட்டுக் குருகுலம்‘ அறிஞர் அண்ணாவின் காஞ்சி அரசியல் பள்ளி, அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் வற்றாத பாச மழை.
இவைகளால், கொள்கையால், உரிமைப் போராட்டமாய் என்றும் திராவிடத்தின் திசை மாறாமல் நடத்திச் செல்லும் கழகக் கலங்கரை வெளிச்சம் அவர்!
நமது நன்றிக் காணிக்கை!
-------------------------------------
திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை! #viduthalai87
இந்த கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும் தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!' #viduthalai87
அதற்காக ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப். மூலம் பல லட்ச வாசகர்களை ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.