அன்பெழில் Profile picture
Sep 26, 2020 26 tweets 5 min read Read on X
From Dinamalar dated 26.09.2020
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர் பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர்
இருந்தார் என்பதற்கு வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என பராசரனிடம் கேட்டார். இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் பகுதியில்
இருந்து முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் கிரிதர். அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது: மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில், ‘ஜைமினியா சம்ஹிதா' பகுதியில் ராம ஜன்ம
பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சரயு நதியின் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும் விவரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால் ஒருவரால் ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும் என்று அவர் கூறினார். இதை
அவர் எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல மனதிலிருந்து கூறினார். கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிரிதர் கூறியது நூற்றுக்கு நூறு சரி என தெரிந்தது. இதை அறிந்த
நீதிபதி, இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை இன்று நான் நேரில் பார்த்தேன்' என ஆச்சரியத்துடன் கூறினார். இதைக் கேட்ட கிரிதர் மிகவும் அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில் முக்கியமான காரணம்
உள்ளது. உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிரிதர் என பெயர் வைத்தனர். இரண்டு மாதத்துக்குப் பின் கிரிதர் கடும் நோயால் பாதிக்கப்பட்டான்.
அதில் கிரிதருக்கு பார்வை பறிபோனது. குழந்தை வளர வளர தன் மகனால் படிக்கவும், எழுதவும் முடியாது என்பதை கிரிதரின் தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால் கிரிதரிடம் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும் சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார். மேலும்,
கிரிதருக்கு அபார ஞாபக சக்தியும் இருந்தது. இதனால் மகனில் அருகில் அமர்ந்து அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு 8 வயதான போது ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார். மடாதிபதி கிரிதரை தன் சீடனாக ஏற்று அவருக்கு
ராமபத்ரா என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என அனைத்தையும் கற்பித்தார். குரு சொல்லச் சொல்ல அதை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா. கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக
ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும் தன் நினைவுத் திறனால் 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். நான்கு வேதங்கள் உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார். துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, ராமசரிதமானஸ் பற்றி உபன்யாசங்கள்
நிகழ்த்த ஆரம்பித்தார். கற்பனை செய்து பாருங்கள். படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர் மற்றவர் படிக்கக் கேட்டு அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார். தன் 38வது வயதில் ராமானந்த ஆசிரமத்தில் நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு
ராமபத்ராச்சார்யா என அழைக்கப்பட்டார். ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது. பல மொழி வித்தகர், ஆன்மிக தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தத்துவஞானி, பாடகர், இசையமைப்பாளர். உபன்யாசகர், நாடக எழுத்தாளர் என, அவரை பற்றி
சொல்லிக் கொண்டே போகலாம். அவர் கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா உட்பட 100க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார். கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும்
பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை கவிதை வடிவில் எழுதியுள்ளார். தானே இசையமைத்து பாடி ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை
துவக்கினார். ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்
பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார். 2015ம் ஆண்டு மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி ராமபத்ராச்சார்யாவை கௌரவித்தது. பிறந்து இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும்,
அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்? பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால் நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார்.
அவரை பற்றி பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன. ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை. ஏனெனில் அவரை புகழ்ந்து பேசினால் நம் நாட்டின் மதச்சார்பின்மை மாயமாகிவிடும் என போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி முதலைக்
கண்ணீர் வடிப்பர். இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு!

#அறிவோம்_மகான்கள் #ராமபத்ராச்சார்யா #ராம்ஜன்மபூமி
I would like to add a correction to the above post as pointed out by @anjankumaran இருகண் பார்வையும் சிறுவயதிலேயே இழந்த ஜகத்குருசுவாமி ராமபத்ராசாரியார் இறையருள் பெற்ற‌ அதிஅற்புதமான பரமஞானி. அவர் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது பழம்பெரும் இதிஹாச
இலக்கியங்களிலிருந்து ராமஜன்மபூமி அமைந்த இடம் குறித்தத் துல்லியமான தகவல்களைக் கூறினார். அதனை அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி சுதிர் அகர்வால் பதிவு செய்துள்ளர். இதனைத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் நீதிபதிகள் பதிந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் பார்வையாளர்
அரங்கிலிருந்து எவரும் பேச அனுமதி இல்லை. அதனால் அச்சமயத்தில் அவர் சொல்லவில்லை. Reference in the Supreme Court Judgment to the witness given by Jagatguru Sri Ramanandacharya Ramabhadracharya.
QUOTE:
DW3/14 Jagat Guru Ramanandacharya Swami Haryacharya. In his examination-in-chief,
he placed reliance on Ayodhya Mahatmya of Skanda Purana. In his examination-in-chief, he states that Lomas Rishi Ashram is in the east of the present Shri Ram Janma
Bhumi. He further states that at place of Lomas Rishi Ashram, now, there is a Ramgulella Mandir and a stone in the
name of Shri Lomasji. In his examination-in-chief, he states that Lomas Rishi Ashram is in the east of the present Shri Ram Janma Bhumi. He further states that at place of Lomas Rishi Ashram, now, there is a Ramgulella Mandir and a stoneBin the name of Shri Lomasji. In paragraph
31 of the examination-in-chief, he states:- “31. Lomas Rishi Ashram is in the east of the present Shri Ramjanm Bhoomi Mandir,about which a case is subjudice. Where there is a Ramgulella Mandir, there is astone in the name of Shri Lomasji. Bighneshwar Bhagwan is in the west side
of Ram Janm Bhoomi Mandir, which is in the west
side of Vasisth Bhawan Mandir. The proof is enclosed at list ‘A’ of an affidavit.”
UNQUOTE:

Please make note of the changes as referred by @anjankumaran Thank you Sir for pointing out the mistake🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 6
#பர்வதமலை_சிவன்_கோவில்
20975 படிகள் ஏறி இக்கோவிலை அடைய முடியும். 3500 அடி உயர பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவ மலை, கொல்லிமலை, சுருளி Image
மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் Image
மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறு பெயர்களும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க Image
Read 13 tweets
May 5
#நற்சிந்தனை
விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா. விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். 100 வயது வரை வாழ விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் கீழே! Image
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார்
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது

விதுரர் கூறீய அந்த 6 வாள்கள் எப்படி இருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
#முதலாவது_வாள் அதிக கர்வம் கொள்ளுதல்- தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர்
Read 13 tweets
May 4
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்Image
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
Read 13 tweets
May 3
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.Image
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு Image
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.

திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானைImage
Read 11 tweets
May 2
#கம்யூனிஸ்டுகளும்_வானமாமலை_30ஆவது_பட்ட_கலியன்_ஸ்வாமியும்

வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில் Image
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
Read 12 tweets
May 1
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்Image
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை Image
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி Image
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(