திவாண்ணா Profile picture
Sep 28, 2020 12 tweets 2 min read Read on X
#நான்_யார்? - 3

என் குழந்தையை பிடிக்கும். ஏன்? ஏன்னா இது என் குழந்தை. என் மனைவியை பிடிக்கும். ஏன்னா இது என் மனைவி. என் மதத்தை பிடிக்கும்.; ஏன்னா இது நான் சார்ந்து இருக்கிற மதம். என் நாட்டை பிடிக்கும்; ஏன்னா இது என்னோட நாடு.
இது எல்லாத்துலேயும் ஒரு பொதுவான சமாசாரம் இருக்கு
1/12
இல்லே? ’என்!’ அந்த என் இல்லைன்னா அவ்வளோ ருசிக்கிறதில்லை. என் குழந்தை என்கறதால் இந்த குழந்தையை எனக்கு பிடிக்கிறது. என் ஜாதி என்கிறதால என் ஜாதியை எனக்கு பிடிக்கிறது, என் நாடு என்கிறதால் என் நாட்டை எனக்குப்பிடிக்கிறது!
ஸ்வீட் எனக்கு பிடிக்காது. ஜிகிர்தண்டா எனக்குப் பிடிக்காது.
2/12
இந்த ரீதியில பலது எனக்கு பிடிக்காது!
ஆனா என்னை எனக்கு பிடிக்கும்; ரொம்பவே பிடிக்கும்! எனக்கு சுகம் தருவது எதானாலும் எனக்குப்பிடிக்கும்.
ஆனா இதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கு! பிடிச்ச ஸ்வீட்தான். ஆனா ஒரு அளவுக்கு மேல “போதும்ப்பா! திகட்டிடுத்து” என்கிறோம். என் குழந்ததான்.
3/12
எவ்வளவு நேரம் அதோட விளையாடுவேன்? ஒரு அளவுக்கு மேல இந்தா வெச்சுக்கோன்னு இன்னொருத்தர்கிட்ட கொடுத்துடறோம். கொஞ்சம் பெரிய குழந்தையானா “போய் சித்த விளையாடிட்டு வாயேன்!” ந்னு சொல்லி அனுப்பி வைக்கிறோம். மத்த எந்த பிடிச்ச விஷயங்களுக்கும் கூட ஏதோ ஒரு கால அளவு இருக்கு. அது ஒரு சில
4/12
நிமிஷங்களோ அல்லது சில பல வருஷங்களோ; அதுக்கு மேல அதுல ஈர்ப்பு தங்கறதில்லை. ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். போரடிக்கிறது என்கிறோம். ஏன்? நமக்கு நாமா கொஞ்ச நேரமாவது இருக்க உள்ளூர ஒரு உந்துதல் இருக்கு!
மத்த எல்லாத்தையும்விட நம்மைத்தான் நமக்கு பிடிக்கிறது. பிற விஷயங்கள்
5/12
நமக்கு பிடிக்கிறதுல ஒரு சுயநலம் இருக்கு; அதனால பிடிக்கிறது!
என்னதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிற ஆசாமியானாலும் தூங்கிட்டா சந்தோஷத்தை அடையறார். ரொம்ப கவலை இருக்கறப்ப தூக்கம் வரலை என்கிறது வேறவிஷயம்.
ஒருத்தர் விழிப்போட இருக்கறப்ப சந்தோஷம் துக்கம் எல்லாம் அனேகமா மாறி மாறி வரும்.
6/12
தூங்கறப்பவும் இனிமையான கனவுகள் பயங்கரமான கனவுகள் எல்லாம் வரக்கூடும்! இது இல்லாம ஆழ்ந்த உறக்கம்ன்னு ஒண்ணு இருக்கு. (அறிவியல் பூர்வமாகவே!) இதில கனவு இராது. விழித்து இருக்கறப்ப நமக்கு உடம்பு இருக்கு; மனசுஇருக்கு. சுத்துப்பட்டுல என்ன நடக்கறது என்கிறதெல்லாம் தெரியறது. இத ஜாக்ரத்
7/12
என்பாங்க.
கனவு காண்கிற போதும் உடம்பு இருக்கு. ஆனால் வித்தியாசமா இருக்கலாம். நாம இளமையோட இருக்கலாம். வேறு வித உடை உடுத்தி இருக்கலாம். பல வேரியேஷன்ஸ் இருக்கலாம். மனசும் இருக்கும். அது நாம ரியாலிடின்னு சொல்கிறதுக்கு அப்பால எதையாவது உணரலாம். (எனக்கு அப்பப்ப கனவில வர இந்த மாதிரி
8/12
சமாசாரம் வானத்தில பறக்கறது!) லாஜிக் எல்லாம் இந்த கனவு நிலைல அப்ளை ஆகாது!
தூங்கி கனவு கண்டு எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் கண்ட கனவு அப்ப திருப்பி நினைவுக்கு கொண்டு வந்தாதான் ஆச்சு. கொஞ்ச நேரம் போனா முழுக்க முழுக்க மறந்து போயிட வாய்ப்பே அதிகம். அவர் பயங்கர கனவு, ரொம்ப
9/12
துக்கப்பட்டேன் ந்னு சொல்லலாம்! கனவுல துக்கம் சந்தோஷம் ரெண்டுமே வரலாம்!
ஆனா ஆழ் உறக்கத்தில் இந்த உடம்பு பத்தின உணர்வு இல்லை; மனசும் இல்லை. ஆனா சுகம் இருக்கும்!
நல்லா தூங்கி எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் சொல்லுவார்: “அப்பாடா! படுத்ததுதான் தெரியும். நல்ல தூக்கம். சுகமா
10/12
இருந்தேன்!“
கவனியுங்க; சுகமா இருந்ததுன்னு கூட சொல்லறது இல்லை. சுகமா இருந்தேன்! இது ஏதோ அடைஞ்ச விஷயமாக்கூட இல்லை. அதுவாவே இருக்கோம்!
இந்த சுகம் அந்த நேரத்தோடயே போயிடும். நாம விழிச்சு இருக்கறப்ப அது கிடைக்கறதில்லை. ஆனா தவறாம தூக்கத்தில இது கிடைக்கறது.
11/12
விழிச்சு இருக்கும்போது கிடைச்சா எவ்வளோ நல்லா இருக்கும்?
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!
யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?
12/12

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with திவாண்ணா

திவாண்ணா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @drtvasudevan

Feb 2, 2021
English Translation of Shri.Vimal Jain’s tweet:
For several years we have been consuming imported pulses. 2 years back Modi ji started stopping it and now it has been completely stopped. this protest against farmers laws is just a Sham. the real reason and story are here.
1/n
Let us read. In 2005 Manmohan stopped the subsidies for pulses. after 2 years Netherland, Australia and Canada entered into understanding with the government which was importing the pulses. several big pulses farms came up in Canada. they were handed over to the Punjabi sikhs
2/n
who were residing there and so India started importing Canadian pulses in a big way. big importers like Amarinder, Kamal nath and such congressmen along with akalis like Badal were there. they started selling the pulses the rate of 200 to 250 per kilo and soon they were
3/n
Read 16 tweets
Oct 11, 2020
#நான்யார்? - 16
அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?
நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மாபத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும்
1/8
இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!
பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?
முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு
2/8
இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான்
3/8
Read 8 tweets
Oct 10, 2020
#நான்யார்? - 15
நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?
சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல்
1/7
முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும்
2/7
கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில்
3/7
Read 7 tweets
Oct 9, 2020
#நான்யார்? - 14

அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம், சீவன், கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ
1
போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியும்.
அது போலத்தான்
2
இதுவும். சீவன், ஈஸ்வரன், உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.
16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே.
3/4
Read 4 tweets
Oct 8, 2020
#நான்யார்? - 13

ம்ம்ம்... ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?
எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி
1/5
செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்லா நசுக்கி
2/5
போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.

15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும்
3/5
Read 5 tweets
Oct 3, 2020
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12
அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப்பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு
3/12
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(