உங்கள் சேமிப்பு/வைப்புக் கணக்கிற்கு nomineeஐ (வாரிசுதாரர்) குறிப்பிடுவது முக்கியம்.
எதிர்பாராமல் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் nominee சுலபமாக உங்கள் கணக்கில் உள்ள தொகையை எடுக்க முடியும். அதற்கு உங்கள் இறப்புச் சான்றிதழ் மட்டும் போதும்
Nominee குறிப்பிடாவிட்டால், வருவாய் துறையில் வாரிசு சான்றிதழ் பெற்று, சட்டப்படி உள்ள எல்லா வாரிசுகளும் அல்லது
அவர்களால் நியமனம் செய்யப்பட்ட வாரிசு ஒருவர் வங்கியை அணுகவேண்டும்.
உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினரை Nomination செய்து உங்கள் பணம் உங்கள் காலத்திற்கு பிறகு எளிதில் அவர்களை அடையச் செய்யுங்கள்.
மறக்காமல் செய்யுங்கள்👍👍👍
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சமூக வலைத்தளங்களில் அறிந்தோ அறியாமலோ நாம் செய்யும் மிகப்பெரிய தவறு தான் அடுத்தவர் மீது peer pressure உருவாக்குவது.
இதை இரண்டு விதமாக செய்கிறோம்.
ஒன்று, நேரடியாக, "இதை இந்த வயதில் நீ செய்ய வேண்டும், இல்லாவிட்டால் போச்சு" என்பது போன்ற பதிவு.
அடுத்து, மறைமுகமாக, நம்முடைய வசதி வாய்ப்பு, உண்ணும் உணவு பற்றி பதிவிடுவது.
இதில் என்ன ஆகிவிடப் போகிறது? நான் என் உழைப்பில் வாங்கியது தானே? அது எப்படி தவறாகும்? நமது எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் அதில் மறைமுகமாக ஒரு விஷயம் இருக்கிறது.
நமக்கு சாதாரணமாக தினமும் கிடைக்கும் பிரியாணி பலருக்கு பண்டிகை கால உணவாக இருக்கும் என்பதை உணர்ந்தால் peer pressureன் எதார்த்தம் புரியும். வாழ்வில் கரைசேர தத்தளிக்கும் பலருக்கு மன சோர்வையும், தனக்கு இது கூட கிடைக்கமாட்டேன் என்கிறது போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தரும்.
அமெரிக்க தொழிலதிபர் ஒரு சிறிய மெக்சிகன் மீனவ கிராமத்தில் தன்னுடைய விடுமுறையை கழித்துக் கொண்டு இருந்தார்.
அங்கே ஒரு மீனவர் சில கிலோ மீன்களுடன் கரை இறங்கி கொண்டு இருத்தார். அந்த மீனவரிடம் பேச்சு கொடுத்து தன் பணத்திமிரை காட்ட நினைத்தார் தொழிலதிபர்.
தொழிலதிபர்: இந்த மீன் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது
மீனவர்: சில மணி நேரம்
தொஅ: இன்னும் நீண்ட நேரம் மீன் பிடித்து நிறைய சம்பாதிக்கலாமே
மீ: பிறகு?
தொஅ: பெரிய படகு வாங்கலாம். இன்னும் நிறைய படகு வாங்கலாம். மீன்களே பதப்படுத்தி தரகர் இன்றி நீங்களே நேரடியாக விற்கலாம்.
மீ: பிறகு
தொஅ: இந்த ஊரை விட்டு நகரத்திற்கு இடம்பெயர்ந்து தொழிலை விரிவு படுத்தலாம். உங்கள் கம்பெனியை பங்கு சந்தையில் லிஸ்ட் செய்து கோடிகளை அள்ளலாம். உங்கள் பங்கு உச்சத்தை தொடும் போது விற்றுவிட்டு இன்னும் கோடிகளை சம்பாதிக்கலாம்.
மருத்துவ படிப்பு மட்டுமே படிப்பல்ல. உங்களால் முடியாத உங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிப்பது மிகவும் தவறு. அது தான் அவர்களுக்கு அழுத்தத்தை வர வழைத்து, அது முடியாத போது தற்கொலை வரை போகிறது.
1/அ
என்னுடைய பெற்றோர் என்னை மருத்துவர் ஆக்க விரும்பினர். அடிக்கடி அதை நினைவு படுத்துவர். ஆனால் எனக்கோ அறிவியலில் ஈடுபாடும் இல்லை. மதிப்பெண்ணும் வரவில்லை. கணிதம் தான் வந்தது. 10ம் வகுப்பில் கணிதத்தில் 100/100; அறிவியலில் 61/100
11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் சேர்க்கப்பட்டேன்.
2/அ
மண்டையில் ஏறாத படிப்பில் சேர்ந்ததின் விளைவு, மொழிப்பாடம் தவிர எல்லாவற்றிலும் தோல்வி. அம்மாவிற்கோ அதிர்ச்சி. ஒரு கோபம் விரக்தியில் "நீங்க நான் டாக்டர் ஆக நீங்க ஆசப்பட்டா மட்டும் போதாதும்மா. எனக்கு அறிவியல் வரல. நான் வணிகவியல் படிக்குறேன்" என கூறிவிட்டேன்.
பாக்கெட் மேல் 45ரூபாய் போட்டுள்ளது. கடைக்காரர் பில் தராமல் 50 ரூபாய் கேட்கிறார். நாம் தருவோமா? மாட்டோம். சண்டை போடுவோம். பில் கேட்போம். வேறு கடைக்கு சென்று 45க்கு வாங்குவோம். அந்த கடைக்காரரின் அட்டூழியத்தை நாலு பேருக்கு சொல்லி அங்கு ஏமாறாமல் தடுப்போம். 2/அ
அதே சமயம், அதிக பட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பது குற்றமும் கூட. Legal metrology act 2009 படி முதல் தவறுக்கு அபராதமாக 25,000ஆகவும் இரண்டாவது தவறக்கு 50,000 ஆகவும் மூன்றாவது தவறுக்கு ஒரு லட்சம் அபராதமும் ஓராண்டு சிறையும் விதிக்கப்படும்.
பரஸ்பரநிதியில் (mutual funds) ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் முதலீடு செய்வதே systematic investment plan (SIP)
ஏன் sip?
சிறு, குறு முதலீட்டாளருக்கு ஏற்றது
சந்தையின் ஏற்ற இறக்கங்களை தாங்கும் /~
மாதாமாதம் சேமிக்கும் பழக்கத்தை உறுதிபடுத்தும்
சந்தையின் போக்கை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டாம்.
எப்படி முதலீடு செய்வது?
1. வங்கியின் மொபைல் ஆப் / நெட் பேங்கிங் 2. நேரடியாக பரஸ்பர நிதியிடம்
இதற்கு உங்கள் kyc (know your customer) மிக முக்கியம். /~
ஏன் kyc?
சுருக்கமாக சொன்னால், உங்களை யார் என அடையாளப்படுத்தவும், சட்டவிரோத பரிவர்த்தனையை தடுக்க kyc பயன்படுகிறது. இதற்கு உங்கள் ஆதார் எண், பான் அட்டை முதலியவை தேவைப்படும்.
வங்கியில் கணக்கு இருந்தால் ஏற்கனவே உங்கள் KYC சரிபார்க்கப்பட்டு இருக்கும்.