#Carder #scam

அடுத்து ஏமாற போவது நீங்கள் தான்! உஷாரா இருங்க...

நான் கிட்டத்தட்ட 9 வருசமா இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திட்டு வாறேன். அதிகமா முகநூல், இன்ஸ்டாகிராம், யூ டியூப் மற்றும் Google products பயன்படுத்துவேன்.

எப்போதாவது Twitter வருவேன். Telegram பயன்படுத்தியதே கிடையாது Image
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் Twitter அதிகமா பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுல நிறைய திரைப்படங்களை பற்றிய விமா்சன பதிவுகள் இருந்தது. எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும், அதனால நான் விமா்சனத்துல வர படங்களை தேடி பிடித்து prime,Netflix, Hotstarல பாா்ப்பேன்.

ஒரு சிலரோட விமா்சனத்துல, சில
Telegram Channel குடுத்து அதுல நிறைய படங்கள் இருக்கதா வரும். நீங்க அந்த மாதிரி Telegram channelல join பண்ணதுக்கு அப்புறம், அதுல வரும் விளம்பரங்கள்ல இருந்து தள்ளியே இருக்கனும் எப்பவுமே.

இந்த போட்டோல இருக்க குரூப்ல கிட்டத்தட்ட 34 லட்சம் பேரு இருக்காங்க. இதுல Google drive link HDனு Image
போட்டு இருக்க லிங்க்க கிளிக் பண்ணா அது இந்த மாதிரி ஒரு சேனலுக்கு எடுத்துட்டு போகுது.

அங்க பாத்திங்கனா பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள ரொம்ப கம்மியா, அதாவது 2 லட்சம் மதிப்புள்ள எந்த ஒரு பொருளையும் Amazonல இருந்து 10,000 முதல் 20,000 ரூபாய்க்கு வாங்கி தரதா சொல்லுவாங்க. ImageImageImage
இத பாத்தாலே ஏமாத்து வேலைனு நல்லா தெரியும். ஆனா மனித மனம் தான் குரங்கு ஆச்சே, ஆசை யார விட்டுச்சு.

நீங்க அந்த குரூப்ல பொருள் ஏதும் வாங்க நினைக்க மாட்டிங்க, ஆனா அந்த Channelல விட்டு வெளிய வரவும் மாட்டிங்க. ஏன்னா அந்த சேனல் ஒவ்வொன்றிலும் குறைந்தது 10 ஆயிரம் முதல் 1 லட்சம் நபா்கள் ImageImageImage
வரை இருக்காங்க. அதனால நீங்களும் அந்த சேனல்ல என்ன தான் நடக்குதுனு பாக்குறதுக்காக அப்படியே join பண்ணீருவீங்க.
34 லட்சம் பேர் இருக்க ஒரு சினிமா குரூப்ல இருந்து 100௧்கு 5 பேர் அந்த லிங்க்க கிளிக் பண்ணா கூட 1.5லட்சம் பேர் அந்த carder channelல பாக்குறாங்க.

அதுல 90% பேர் சுதாரிச்சா
கூட, மீதம் 10% பேர், அதாவது 15 ஆயிரம் பேர் வரைக்கும் வேடிக்கை பாக்குறதுக்காக அந்த channelல stay பண்ணிடுறாங்க.

இப்போ தினமும் அங்க விளம்பர படுத்திட்டே இருப்பாங்க. நம்பிக்கை இல்லைனா முழு பணத்தை செலுத்த வேண்டாம்,1000 இல்லைனா 500 ரூபாய் மட்டும் முன்பணமா செலுத்தி புக் பண்ண சொல்லுவாங்க Image
ஆா்டா் பண்ணதுக்கு அப்புறம் மீதி பணத்தை அனுப்புனா போதும்னும், குறிப்பா Cash on Delivery கேக்கவே கேக்காதிங்கனு சொல்லுவாங்க.

ஒவ்வொரு நாளும் 10 order, 5 Delivery ஆனது மாதிரியான பதிவுகளை மாறி மாறி போட்டுட்டே இருப்பாங்க.

அது போக அந்த orderரோட tracking linkம் போஸ்ட் பண்ணுவாங்க. ImageImageImage
ஒரு சிலா், தன்னோட Aadhar card, PAN card details குடுத்து இத வேணும்னா Aadhar portal ல போட்டு verify பண்ணிக்கோங்க, அது நான் தான்னு சொல்லுவான். அதே Nameல Google pay UPI detailsம் கொடுப்பான். ஆனா அந்த Aadhar card அவனோடதா, அதே பேருல இருக்க வேற ஒருத்தனோடதானு கண்டுபிடிக்க வழி இல்லை. ImageImageImage
இதெல்லாம் போக, தன்னோட channelல ஆதாரமா போடுற photo proofலாம் யூஸ் பண்ணி வேற யாரோ ஒருத்தன், carderனு சொல்லி innocent ஆனவங்கள ஏமாத்துறதாவும், அவன நம்பி யாரும் ஏமாறாதிங்கனும் சொல்லுவான்.

அந்த screenshotல, அந்த ப்ராடுபய, ஆமா.. அப்படி தான்டா பண்னுவேன்னு சொல்ற மாதிரி இருக்கும். Image
இது தான் உங்களுக்கு அவன் மேல நம்பிக்கைய இன்னும் கூட்டும்.

இப்போ ஒரு சில வீடியோ போட்டு, அவனோட client feedbackனு சொல்லுவான். எல்லாரும் இவர் ஒரு ஜென்டில்மேன், legit carderனு certificate குடுப்பாங்க.. ImageImage
அது போக, Give awayனு சொல்லி எதாச்சும் ஒரு credit card குடுத்து PIN லாம் குடுப்பான். இத கரெக்டா யூஸ் பண்ணுங்க இல்லைனா போலிஸ்ல மாட்டிருவிங்கனு சொல்லுவான்.

யூஸ் பண்ண தெரியலைனா என்கிட்ட கோா்ஸ் வாங்க, சொல்லி தாரேன்னு ஒரு பில் போடுவான்.

Netflix account யாருக்காவது freeயா குடுப்பான்
இதையெல்லாம் ஒரு வாரம் பாத்திட்டு இருக்குற உங்களுக்கு ஒரு சந்தேகமே வந்திடும், உண்மையிலேயே குடுக்குறாங்கலானு.

நம்ம அதுக்கப்புறம் பெரிய அறிவாளினு நினைச்சுட்டு, இத எப்படி இவுங்க பண்ணுறாங்கனு research பண்ணுவோம். ஆனா அந்த detailலாம் அவனே அங்க தெளிவா pin பண்ணியே போட்டிருப்பான். ImageImage
அதாவது cardingனு ஒரு loop hole மூலமா,வெளிநாட்டுல இருக்க யாரோ ஒருத்தனோட கிரெடிட் காா்ட அவனுக்கே தெரியாம use பண்ணி, இந்த பொருட்களை Amazonல ஆா்டா் பண்றதாவும், அந்த Card details−அ Hackers கிட்ட இருந்து darkwebல வாங்குறதுக்கு தான் உங்ககிட்ட 1000ரூபா முன்பணம்னு சொல்லுவான். Image
இவன் சொல்லுற மாதிரி carding பண்ண முடியும், உலகம் பூராம் நடந்துட்டு தான் இருக்கு. ஆனா எல்லா நாட்டுலையுமே இது சட்டத்துக்கு புரம்பானது.

ஆனா Amazon கிட்ட இருந்து நம்ம டெலிவரி அட்ரஸ வச்சு, யாரு வாங்குனானு கண்டுபிடிச்சுட்ட மாட்டாங்களானு தோணும்.

அதுக்கு Amazon அவுங்களோட privacy policy
படி customer infoவ யாருக்கும் கொடுக்க மாட்டாங்க, ஏன்னா cardingனால அவுங்களுக்கு நல்ல வியாபாரம் ஆகுது.

இப்ப உங்களோட நம்பிக்கை கொஞ்சம் கூடி இருக்கும். Telegramல poll ஆப்சன யூஸ் பண்ணி voting நடத்தலாம். அந்த channelல, இன்னைக்கு சிறப்பு சலுகை எதும் வேணுமானு voting நடத்துவான். Image
Obviousஆ 95% முதல் 97% பேர் "ஆமா"னு தான் vote பண்ணுவாங்க. அப்படியே பண்ணலைனாலும் அவன் இன்னைக்கு offer குடுத்தே தான் ஆவான்.

voting பண்ண கொஞ்ச நேரத்துல எந்த பொருள் order பண்ணாலும் 3000 அல்லது 4000னு சொல்லுவான். அதுவும் முதல் 10 பேருக்கு மட்டும்னு சொல்லுவான்.

15,000 பேர் இருக்க Image
குரூப்ல 2% பேர்(300) இப்ப வாங்கலாமா வேணாமானு யோசிச்சிட்டு இருப்பான்.

300 பேர்ல 10%, 30 பேர் வாங்கலாம்னு முடிவு பண்ணுவீங்க.ஆனா இந்த special offerக்கு அட்வான்ஸ் கிடையாது, மொத்த பணம் 4000த்தையும் கட்டனும், அதனால 30போ்ல 7−10 பேர் , சரி 18000 ரூபா சொல்லீட்டு இருந்தத இப்போ 4000க்கு
தாரானே, 4000 தான, Try பண்ணி பாப்போம், அதுவும் 10 பேருக்குனு போட்ருக்குனு சொல்லிட்டு புக் பண்ணிருவீங்க.

இப்போ 4,000 × 10= 40,000 சம்பாதிச்சுட்டான்.

30 போ்ல 10 பேர் தான வாங்குனாங்க.மீதி 20 பேர Target பண்ணி அடுத்த ரெண்டு நாளுக்கு அதே special offer-அ, அடவான்ஸ் 1000 கட்டுனா போதும்
Order place பண்ணி tracking link அனுப்புனதுக்கு அப்புறம் மீதம் 3000 அனுப்புங்கனு சொல்லுவான்.

1000 ரூபா தான,போனா போகுது, order place பண்ணி proof அனுப்பிச்சானா மீதத்த அனுப்பலாம்னு முடிவு பண்ணி personal chatல நீங்க அவன contact பண்ணுவீங்க. அவனும் UPI ID குடுத்து அதுக்கு Amount Image
அனுப்ப சொல்லுவான். நீங்க அனுப்புனதுக்கு பின்ன, verify பண்ணீட்டு Product details, addressலாம் அனுப்ப சொல்லி ஒரு template அனுப்புவான்.

நம்ம சும்மா try தான பண்றோம்னு, இருக்கதுலேயே Costlyயான product−டா choose பண்ணி அனுப்புவோம். நீங்க எந்த Rateக்கு product அனுப்புனாலும் எதும் ImageImage
சொல்ல மாட்டான். கொஞ்ச நேரம் கழிச்சு order place பண்ணதுக்கான proofஆ எல்லா screendhotம் அனுப்புவான்.

நீங்க அப்டியே மெர்சலாகி போய் Addressம் ptoductம் கரெக்ட்டானு பாப்பிங்க. கரெக்ட்டா இருக்கும்.

அட..ச்சே!!..இவன போய் சந்தேக பட்டுட்டோமேனு நினைப்பிங்க. ImageImageImageImage
அப்போ Tracking link ஒன்னு அனுப்பி verify பண்ண சொல்லுவான்.

amazon.in/progress-track…

அத நீங்க திறந்து பாத்திங்கனா உங்க order place ஆகி இருக்கும், இன்னும் சில தினங்களில் உங்கள் கையில் இருக்கும் அப்படினு வரும்.

1000 ரூபா குடுத்ததுக்கு 1,50,000க்கு ஆர்டர் பண்ணிட்டானே, கடவுள்டா நீ Image
அப்புடினூ நினைக்கும் போது ஒரு மெசேஜ் வரும்.

மீதி 3,000 அனுப்புங்கள், இல்லைனா ஒரு மணி நேரத்துல order-அ கேன்சல் பண்ணிருவேன்னு சொல்லுவான்.

அட தெய்வமே! இந்தா தெய்வமே... உனக்கு குடுக்காம யாருக்கு குடுக்க போறேன்னு சொல்லி மீதம் 3000யும் அனுப்பிட்டு, அந்த சேனல்ல போய் பாத்தா உங்களுக்கு Image
பண்ண order-ரோட screenshot போட்டு, இன்னொருத்தரும் புக் பண்ணிட்டாரு, இன்னும் 2 பேருக்கு தான் special offerனு சொல்லி அடுத்த கஸ்டமர deal பண்ண ஆரமிச்சிடுவான்.

இப்போ 3 நாள்ல 30 பேர் × 4000=1,20,000 சம்பாதிச்சிருப்பான்.

அடுத்து நீங்க உங்க order-ர track பண்ண ஆரம்பிச்சுடுவீங்க. Image
அது shipment ஆனதும் அப்பாடானு பெருமூச்சு விடுவீங்க. இப்போ அடுத்து ரெண்டு நாள் கழிச்சு, special offer-ர 4000ல இருந்து 3000க்கு மாத்தி Announce பண்ணுவான்.

நம்ம பொருள் தான் Already shipment ஆகிடுச்சேன்ற நம்பிக்கைல அடுத்த பெரிய பட்ஜெட் product-அ order பண்ணுவீங்க. உங்க பழைய order Image
அந்த பொருள் உங்க கைக்கு வந்து சேரும் வரை, அது வருமா? வராதா? ஒரு வேலை போலிஸ் புடிச்சிருமோனு மண்ட வெடிக்கும்.

அடுத்த ரெண்டு நாள்ல உங்க பொருள் out for delivery வந்து, டெலிவரி boy போன் பண்ண உடனே பறந்து போய் பாப்பிங்க. ஒரே ஷாக்! உங்க பொருள் வந்திருச்சு,ஆனா அந்த பார்சல பாத்து அழுவீங்க Image
ஆமாங்க! ஏதோ குப்பை தொட்டில இருந்து அடுத்த மாதிரி சின்னதா ஒரு பார்சல குடுப்பான்.

அதுல ஏதோ பல்லு விழக்குற brush மாதிரி தட்டுப்படும். அத ஓபன் பண்ணி பாத்தா, இதாங்க இருந்துச்சு...

நான் Actualஆ, அது ஐபோனா இருந்தா போலிஸ்ல மாட்டிப்பனோனு பயத்துல இருந்தேன். இத பாத்ததுக்கு அப்றம் நிம்மதி ImageImage
நீங்க அவன புகழ்ந்து பேசுற ஒவ்வொரு விசயத்தையும் customer reviewனு சொல்லி channelல post பண்ணிட்டே இருப்பான்.

என்ன ஏமாத்துனவனோட telegram user ID வந்து #XDCarder
#Ceaser னு user name. UPI name: Ravi Muhi. UPI IDs: xdcarder@ybl and bigloop@ybl ImageImageImage
இனிமே என்னோட friend circleல யாரையும் ஏமாற விட மாட்டேன்னூ சொன்ன உடனே Groupப விட்டு ரிமூவ் பண்ணிட்டான்.

அவனோட personal accountல block பண்ணிட்டான். Image
so இவன் நம்ம கேக்குற பொருள order பண்றான், அல்லது photoshop பண்ணி order பண்ண மாதிரி காமிக்குறான்.

Tracking link வந்து அந்த dummy product ஆர்டா் பண்ணி அதோடத குடுக்குறான்.

இந்த மாதிரி மோசடி பண்றவங்க telegramல நிறைய இருக்காங்க. cybercellல complain பண்ணாலும் கண்டுபிடிக்க முடியாது.
இவங்க use பண்ற SIM,telegram User ID, channel name, UPI ID எல்லாமே மாத்திட்டே இருப்பாங்க.

அது போக VPN use பண்ணி IP addressலாம் மாத்தி, யாரும் கண்டு பிடிக்க முடியாத படி Anonymusஆவே இருப்பாய்ங்க. அவனா , அவளானு கூட கண்டுபிடிக்க முடியாது.

Porn சம்பந்தப்பட்ட channelsலையும் இந்த
மாதிரி விளம்பர லிங்க் அதிகமா வரும். புதுசா டெலகிராம் யூஸ் பண்றவங்க ரொம்ப கவனமா இருங்க. இங்க தொடுறதெல்லாம் பாம் தான்.

நல்ல சேனலும் நிறையா இருக்கு, stock, books, online trainings அந்த மாதிரி. But எல்ல இடத்துலையும் இந்த மாதிரி scammers விளம்பர படுத்துவாங்க.
இத நான் பண்ணுறதுக்கு முன்னாடி twitterல தேடுனேன். But எனக்கு எந்த தகவலும் கிடைக்கல. அதனால இத try பண்ணி இங்க expose பண்ணி எழுதனும்னு நினைச்சேன்.

cardersனு சொல்லிக்கிற யாரும் அத கமுக்கமா தான் பண்ணுவாங்க, வெளிய காட்டிக்காம. cardersனு சொல்லுறவன் எல்லாருமே 100% பிராடுக்கார பயலுக தான்
Carding மூலமா product மட்டும் இல்லாம, Amazon payல 75,000 ரூபா இருக்க Account 7000க்கு தாரேன், pubg coins, free fire coinsலாம் கம்மி காசுல தாரேன்னு சொல்லுவாய்ங்க. எதையுமே நம்பாதிங்க.

இந்த மாதிரி channelsஅ பாத்தா உடனே Block பண்ணிருங்க. உங்க friends, relativeக்குலாம் share பண்ணுங்க
தயவு செஞ்சு யாரும் மறுபடி ஏமாறாதிங்க. #Carders #Carder #Scammer பத்தி உங்க circleல இருக்கவங்களுக்கு எடுத்து சொல்லுங்க.

இது போக,bettingல 10,000 கட்டுனா 1,00,000 ஜெயிச்சு தரதாவும்.அதுக்கு கமிசனா 30% னும் சொல்லி #Scam நடக்குது. அத பத்தி இன்னொரு நாள் விரிவா எழுதுறேன். #CardersIndia
@threadreaderapp Please untroll it

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.உத்தம வில்லன்🍥

Mr.உத்தம வில்லன்🍥 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hockey_dinesh

7 Oct
Movie: Mumbai police
Release: 2013
Duration: 2Hrs & 19 Mins
Genre: Crime Thriller | Mystery
Language: Malayalam
Platform: Hotstar

ஆண்டனி மோஸஷ் (பிரித்விராஜ்) கொச்சின்ல ACP-யா வேலை பாக்குறாரு.
அந்த ஆண்டிற்கான வீர தீர செயல் புரிந்த காவலர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுது Image
அதுல ACPயும் கலந்துக்கிறாரு. அப்போ அவரோட நண்பன் ஆா்யன் ஜான்(ஜெய்சூா்யா) பதக்கம் வாங்க மேடை ஏறும் போது snipper வச்சு யாரு சுட்டு கொலை பண்ணிடுறாங்க.

அந்த வழக்கை மோஸஷ் தான் எடுத்து விசாரிச்சுட்டு வருவாரு. ஒரு நாள் போலிஸ் வாகனத்துல வரும் போது, கமிஷ்னா் கிட்ட பேசிட்டு வருவாரு,அப்போ
கொலைகாரன கண்டுபிடிச்சுட்டதா சொல்லுவாரு. ஆனா அது யாருனு சொல்லுறதுக்கு முன்னாடி பயங்கர விபத்து நடக்கும்.

அந்த விபத்துல மோஸஷ்க்கு பாதி ஞாபகம் போயிடும்(Partial memory loss). சிகிச்சை முடிந்து வேலைக்கு வந்துக்கு அப்புறம் , கமிஷ்னா் மோஸஷ் மேல நம்பிக்கை வச்சு மறுபடியும் அந்த வழக்கை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!