அந்த விபத்துல மோஸஷ்க்கு பாதி ஞாபகம் போயிடும்(Partial memory loss). சிகிச்சை முடிந்து வேலைக்கு வந்துக்கு அப்புறம் , கமிஷ்னா் மோஸஷ் மேல நம்பிக்கை வச்சு மறுபடியும் அந்த வழக்கை
ஒப்படைப்பாரு. இப்போ ஆரம்பத்துல இருந்து விசாரணைய தொடங்குவாரு நம்ம கதாநாயகன், விசாரணை நடக்கும் போது ஒரு சிலநேரம் அவருக்கு பழைய விசயங்கள் ஞாபகம் வந்து போகும்.
அடுத்தடுத்த முடிச்சுக்களை அவிழ்க்க அவிழ்க்க சுவாரசியம் கூடிட்டே போகும். ஒரு கட்டத்துல சில கசப்பான உண்மைகள் வெளிய வரும்.
படத்தோட second half பயங்கர விறுவிறுப்பா கொண்டு போய் இருக்காரு இயக்குனா் ரோஷன். Thriller விரும்பிகள் தவறவிட கூடாத நல்ல ஒரு விருந்து இந்த படம்.
வெறும் 5.75 கோடி ரூபாய் பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இந்த படம் 4.30 கோடி வருமானத்தை பட வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு Rightsக்காக ஈட்டியது.
ஜனவரி 2013ல ஆரம்பிச்ச படப்பிடிப்பு 56 நாட்கள்ல முடிஞ்சு மே மாதம் திரையிடப்பட்டது. மலையாளத்துல இந்த மாதிரி பல குறைந்த பட்ஜெட் படங்கள் வந்தாலும், அந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் இந்த படம்.
சிறந்த திரைக்கதைக்காக கேரள அரசின் விருதும் பெற்றது.
நான் கிட்டத்தட்ட 9 வருசமா இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திட்டு வாறேன். அதிகமா முகநூல், இன்ஸ்டாகிராம், யூ டியூப் மற்றும் Google products பயன்படுத்துவேன்.
எப்போதாவது Twitter வருவேன். Telegram பயன்படுத்தியதே கிடையாது
கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் Twitter அதிகமா பயன்படுத்த ஆரம்பித்தேன். அதுல நிறைய திரைப்படங்களை பற்றிய விமா்சன பதிவுகள் இருந்தது. எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும், அதனால நான் விமா்சனத்துல வர படங்களை தேடி பிடித்து prime,Netflix, Hotstarல பாா்ப்பேன்.
ஒரு சிலரோட விமா்சனத்துல, சில
Telegram Channel குடுத்து அதுல நிறைய படங்கள் இருக்கதா வரும். நீங்க அந்த மாதிரி Telegram channelல join பண்ணதுக்கு அப்புறம், அதுல வரும் விளம்பரங்கள்ல இருந்து தள்ளியே இருக்கனும் எப்பவுமே.
இந்த போட்டோல இருக்க குரூப்ல கிட்டத்தட்ட 34 லட்சம் பேரு இருக்காங்க. இதுல Google drive link HDனு