‘‘பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலத்தவர்களை அதிக அளவில் அரசு பணிகளில் நியமிப்பது ஏன்?'' என்ற நியாயமான கேள்வியை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர் - ஒரு வழக்கு விசாரணையின்போது.
நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் ரசாயன பிராசசிங் பணிக்கு 140 பேரை நியமிக்க 2015 இல் அறிவிப் பாணை வெளியிடப்பட்டது. இப்பணி இடங்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தேர்வில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார்; இவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற 6 பேருக்குப் பணி நியமன உத்தரவு வழங்கியதை எதிர்த்து வழக்கைத் தொடர்ந்தார் பாதிக்கப்பட்ட சரவணன்.
சரவணனுக்குப் பதவிவழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதை ரத்து செய்யும்படி, ஆயுதத்தொழிற்சாலை செய்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணை வந்தபோது, அதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் என்.கிருபாகரன், ஜஸ்டீஸ்பி.புகழேந்தி ஆகியோரின் அமர்வில் மேற்கண்ட கேள்விகளை கேட்டுள்ளனர்
‘‘மத்திய அரசு பணித் தேர்வில் அனைத்து மாநி லங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று பணியமர்த்தப்படுபவர்களுக்கு அந் தந்த மாநில மொழி தெரிந்திருக்கவேண்டும். பிற மாநிலங்களில் அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் பெறுவது எப்படி?
அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள். பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறவேண்டும். ரயில்வே தேர்வில் அதிக அளவு மோசடி நடைபெறுகிறது. தமிழகத்தில் மின் வாரியம், ரயில்வே என பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்'' என்று ஆணி அடித்ததுபோல, தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளதோடு, மற்றொரு கேள்வியையும் விசாரணையின்போது எழுப்பியுள்ளனர்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
‘‘தமிழகத்திற்கு என்ன பிச்சை போடுகிறீர்களா? ஆயுதத் தொழிற்சாலை பணிக்கான எழுத்துத் தேர்வின் விடைத்தாள் 3 நாளில் அழிக்கப்பட்டது ஏன்?
பணி நியமனம் எந்த அடிப்படையில் மேற்கொள் ளப்பட்டது என்பது தொடர்பாக ஆயுதத் தொழிற்சாலை பொது மேலாளர் பதில் தர வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர்.
- ஒரு மாநில அரசு கடமை தவறியது (Dereliction of Duty) என்பதை எவ்வளவு நாசுக்காக உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டும் அளவுக்குத் தமிழ்நாட்டு ஆட்சி தமிழ் மக்கள் உரிமைகளை பலி பீடத்தில் வைப்பதை இனியாவது- காலந்தாழ்ந்த நிலையிலாவது உடனடியாக ‘‘விழித்துக்கொண்டு'' ஆவண செய்ய முன்வரட்டும்.
கருநாடக (பி.ஜே.பி.) அரசில், ‘‘80 சதவிகித பணிகள் உள்ளூர்வாசிகளுக்கே!'' (கன்னடியர்களுக்கே) என்று சட்டமும் இயற்றி பிரகடனப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்
அதுபோல, மத்திய பிரதேச (பா.ஜ.க.) அரசும் தனிச் சட்டமே இயற்றப் போகிறோம் என்று கூறுகிறது.
மற்ற மற்ற மாநிலங்களில் வேலை வாய்ப்பு அந்தந்த மாநிலத்தவர்க்கே என்ற நிலையில் - தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்தவரின் வேட்டைக்காடா?
தமிழ்நாடு அரசு உறக்கம் கலையட்டும் - இல்லையெனில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து கடும் போராட்டம்! viduthalai.page/2WAAkX.html
பெயரளவில்தான் இது ‘தமிழ்நாடாக' இருக்கிறது இன்றைய ஆட்சியின்கீழ்! நடைமுறையில் பிற மாநிலத்தவரின் வேட்டைக்காடாகவும், பிற இனத்தவர், மொழியினர் - செம்மொழி தமிழைப் புறந்தள்ளி அதற்குரிய முக்கியத்துவத்தையும் தராது ஹிந்தி, சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பை, படையெடுப்பைச் செய்து வருகின்றனர்;
தமிழ் நாடு அரசு இதனைக் கண்டும் காணாததுபோல் இருப்பதோடு, கடுமையான தனது எதிர்ப்பை மத்திய அரசிடம் வைத்து, மாநில உரிமைகளைக் காப்பதற்கு எந்தவித முயற்சியையும் எடுக்காத ஒரு பொம்மை அரசாகவே நீடிப்பது மிகவும் வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்.
சமீப காலமாக தந்தை பெரியார் சிலைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவமதிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், எம்.ஜி.ஆர். சிலைகளும்கூட சிறுமைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலைவர்களின் சிலைகளுக்குக் கூண்டு போடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மக்களால்மதிக்கப்படும் தலைவர்களின் சிலைகளுக்குக் காவல்துறையினர் கூண்டுபோட்டு வருகிறார்கள். சில ஊர்களில் இது பெரிய பிரச்சினையாகி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது சரியான அணுகுமுறைதானா? இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கமுடியவில்லை என்று காவல்துறை ஒப்புதல்வாக்குமூலம் கொடுக்கும் செயல்தானே இது!
தலைவர்களின் சிலைகளை அவமதித்த குற்றவாளிகள் இதுவரை எத்தனைப் பேர் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட்டனர்? என்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? என்பதை விரலை மடக்கிச் சொல்லட்டுமே - அரசும், காவல்துறையும்!
உ.பி. ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகப்பெண்மணி மீது ஜாதி ஆதிக்க மனப்பான்மையுடன் பாலின வன்கொடுமையைக் கட்டவிழ்த்துவிட்டு கொலைசெய்ததுடன், அவரது சடலத்தைக் கூட அவரது பெற்றோர்களுக்குக் காட்டாமல் நடுநிசியில் பெட்ரோல் ஊற்றி சுடுகாட்டில் உ.பி. காவல்துறையே எரித்தது கொடுமை!
பாதிக்கப்பட்ட அந்த ஒடுக்கப்பட்ட சமூகப்பெண்ணின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் மீது உ.பி. காவலர்கள் மிக மோசமாக நடந்து கொண்டு, அவர்களைக் கீழே தள்ளியதும், காங்கிரஸ் தொண்டர்களைத் தடியில்அடித்ததும் கண்டிக்கத்தக்கது.
அடுத்த நாள் உ.பி. சென்ற மேற்குவங்க எம்.பி.க்களிடமும் ஆண் பெண் என்ற வேறுபாடு, நாகரிகம் பார்க்காமல் மிகவும் மூர்க்கத்தனமாய் நடந்து கொண்டதையும் கண்டித்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏற்றி தி.மு.க மகளிரணியினருடன் பேரணியாகச் சென்றுள்ளார் கவிஞர் கனிமொழி எம்.பி.
மொழித் திணிப்பு என்னும் உணர்ச்சிபூர்வ பிரச்சினையில் 80 ஆண்டுகால வரலாற்றைக் கூட மறந்துவிட்டு, ஏனோதானே என்று ‘‘பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்’’ என்ற விலாங்கு அரசியல், பாசாங்கு அரசியல் செய்யக்கூடாது.
மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, இரயில்வேயிலும் மற்றும் பல முயற்சிகளும் தேவையற்ற கிளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்; அந்த மத்திய அரசு, தமிழக அரசின் மாநிலக் கொள்கையை மதித்து நடந்து கொள்ளவேண்டும் என்று துணிவுடன் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டாமா? வன்மையாகக் கண்டிக்கவேண்டாமா?
மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது என்றால், குட்டக் குட்ட குனிந்து கொண்டே இருப்பதுதானா? தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?
”உறவுக்குக் கைகொடுப்போம்; அதேநேரத்தில், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று கலைஞர் கூறியதை வலியுறுத்திடும் அளவுக்குத் துணிவு வராவிட்டால்கூட பரவாயில்லை1/2
அரசமைப்புச் சட்டம் 22 மொழிகளை அங்கீகரித்துள்ளதை ஏனோ ‘‘வசதியாக’’ மத்தியில் ஆள்வோர் மறந்துவிடுகிறார்கள்!
ரயில்வே டிக்கெட்டுகளின் முன்பதிவுச் சீட்டை ஹிந்தியில் அச்சடித்து, அதை குறுஞ்செய்தியாக தமிழ்நாட்டுத் தொடர் வண்டி பயணிகளுக்கு அனுப்புவதும் 1/3
நாட்டுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கி ஒன்றில், கங்கைகொண்ட சோழபுரம் கிளையில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் கடன் கேட்டு மனு போட்டதை விசாரிக்கையில், அந்த வங்கியின் மேலாளர் - வடபுலத்தவர் - ‘‘ஹிந்தியில் பேசினால் மட்டுமே தன்னால் பதில் கூற முடியும்‘’ என்று ஆணவமாக பதில் கூறியதும், 2/3