பெரிய மனிதர்: வாருங்கள் சாஸ்திரிகளே, உங்களை வரவழைக்க வேண்டுமென்றி ருந்தேன்- நீங்களே வந்துவிட்டீர்கள்.
சாஸ்திரி: அப்படியா, என்ன விசேஷம்?
பெரிய மனிதர்: ஒன்றுமில்லை; ஒரு தத்துக்கிளியினை கழுத்தில் ஒரு பையன் கயிறு கட்டி இறுக்கி அதைக் கொன்று விட்டான். இதற்கேதாவது பிராயச்சித்தம் உண்டா?
சாஸ்திரி : ஆஹா, உண்டு!
அவன் பெற்றோர் தங்கத்தினால் 108 தத்துக்கிளி செய்து 108 பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டால் அந்தப் பாவம் தீர்ந்துபோகும்-இல்லாவிட்டால் அந்தப் பையனைப் பார்க்கவே கூடாது.
பெரிய மனிதர்: தத்துக்கிளியின் கழுத்தில் கயிறு கட்டி இறுக்கிக் கொன்றது தங்களுடைய மகன் தான்.
அதற்கு வேண்டியதைச் சீக்கிரத்தில் செய்துவிட்டு வாருங்கள்.
சாஸ்திரி : ஆ! ஹோ! பிராமண பையனா?
அப்படியானால் இனிமேல் அப்படிச் செய்யாதே என்று சொல்லிவிட்டால் போதும்!
ஆச்சாரியாருக்கு பெரியார் பதில்! “நாங்கள் எறும்புகள் தான்”
நம்மைப் பார்த்து ஆச்சாரியார் எறும்புகள் என்கிறார். எறும்புகளையும், மூட்டைப் பூச்சிகளையும் நசுக்குவது போல நம்மை ஒழித்து விடுவதாகவும் முதலமைச்சர் ஆச்சாரியார் கூறியுள்ளார்.
நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
நம்மிடம் விஷம் இல்லை என்று தெரிந்து கொண்டார். விஷமிருப்பதாக அவர் நினைத்திருந்தால் தேள், பாம்பு என்று சொல்லியிருப்பார். திராவிடர் நிலை இத்தகு நிலையில் கீழாகப் போய் இருக்கிறது. மிக மிகத் தாழ்வான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம்.
பிற எந்த மதமும் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தவில்லை. ஜெகத் குருக்கள் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதில்லை. பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் - தேவடியாள் மக்கள் என்று இழிவு செய்வதில்லை.
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும், சங்கராச்சாரியாரே பூணூல் போடும் சூட்சமம் என்ன? கடவுள்களையே ஜாதிவாரியாகப் பிரிக்கும் கும்பல் இன்னொரு மதத்தைப் பற்றிப் பேச யோக்கியதை உடையது தானா? 'வைத்தியரே முதலில் உமது சீக்கைச் சரி செய்து கொள்வீர்.
‘‘பிராமணாள் ஸ்வீட்ஸ்'' Prepared by 100% Brahmins என்ற சொற்களோடு இணையத்தில் ஒரு விளம்பரம் வலம் வந்து கொண்டுள்ளது. இதனைக் கண்ணுற்ற தோழர் அந்தக் கடைக்காரரிடம் உரையாடியதும் இப்பொழுது இணையத்தில் உலாவருகிறது.