கடந்த 5 வருடங்களில் திமுக மீதான ஒரு பெரும் குற்றச்சாட்டு - அதிமுக பிரிவு/கூவாத்தூர் கோமாளித்தனங்களுக்கு பிறகும் அதிமுக அரசை கீழிறக்கவில்லை என்பது மட்டும்தான். அதற்கும் ஏதாவது ஒரு வலுவான காரணம் இருக்கும் என்றே நம்புகிறேன். அதை தவிர்த்து திமுக எதிர்கட்சியாக இந்த வருடங்களில் 1/n
செய்த செயல்கள் அதிகம் என்றே நினைக்கிறேன். அதுவும் திமுக மீதான ஊடக அடக்குமுறையை மீறித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கூத்துகளை மீறி வலுவான வெற்றி பெற்றதும். தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்று எல்லோரும் 2/n
எதிர்பார்த்த வேளையில் எல்லா மாநிலங்களுக்கான உரிமைக்காக குரல் கொடுத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில் செய்து வரும் உதவிகளையும் பார்த்து வருகிறோம். தர்மபுரி எம்பி @DrSenthil_MDRD மதுரை @ptrmadurai போல பலரும் இணையத்தில் 3/n
யார் உதவி கேட்டாலும் பின்புலம் பாராமல் உதவிகள் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. மாநில உரிமைகள் தொடர இங்கு இப்போது திமுகவை விட வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரும் பிரச்சினை வரும் என கண்கூடாக தெரிகிறது. எனவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என என் நியாயமான விருப்பத்தை 4/n
பதிவிடுகிறேன். திமுக மீது குற்றம் சொல்ல ஏதுமில்லையா என்றால் சிலது இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் நாம் சுட்டி/தட்டி கேட்க திமுகவிடம் வாய்ப்பிருக்கும். அதுபோல பல நன்மைகளை பெற, வளர்ச்சி அதிகரிக்க மீண்டும் தேவை திமுக ஆட்சி!!!🙏🏻🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh