@khushsundar அவர்களே,
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளும் கட்சியை எதிர்ப்பது தான் ரூல் என்றால், இந்த 6 வருடங்களில் நீங்கள் பெண்களுக்கு எதிரான விஷயங்களுக்காக, மக்கள் விரோத சட்டங்களுக்காக பாஜக வை எதிர்த்து பேசியதை எல்லாம் வெறும் ரூல் தானா, (1/n)
உண்மையான நோக்கத்துடன் பேசாமல் ரூல் காக பேசும் நீங்கள் மக்களுக்காக இயங்கும் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள்.
மக்களுக்காக பேசாமல், ரூல் காக பேசும் உங்களுக்கு காங்கிரஸ் கட்சி எதற்காக உரிய மரியாதையை தர வேண்டும்? (2/n)
இப்போது பாஜகவில் சேர்ந்து இருக்கிறீர்கள், இனிமேல் நீங்கள் எதிர்கட்சிகளை பற்றி பேசுவது எல்லாமே வெறும் ரூல் காக தானே இருக்கும்? எந்த கொள்கையிலும் பிடிப்பு இல்லமால் வெறும் ரூல் காக பேசுவது எல்லாம் என்னவென்று சொல்லுவது? (3/n)
இனிமேல் நீங்கள் எது பேசினாலும், உண்மையான கோபமோ அல்லது மக்களுக்காக பேசுகிறீர்கள் என்றா இருக்கும்? வெறும் ரூல் காக பேசுகிறீர்கள் என்று தானே ஆகும். வெறும் ரூல் காக சும்மா பேசும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் பாஜக தான், ஏன் என்றால் பாஜக விற்கும் மக்களை பற்றி அக்கறை இல்லை, (4/n)
வெறும் ரூல் காக பேசும் உங்களுக்கும் அக்கறை இல்லை. உங்களுக்கு பொருத்தமான இடம் பாஜக தான். வாழ்த்துக்கள்.
ஒரு இடத்தில கூட பாஜக வின் சாதனைகளை சொல்லியோ, அதற்காக ஈர்க்கப்பட்டோ கட்சியில் சேர்ந்ததாக நீங்கள் சொல்லவில்லை. (5/n)
அதே மாதிரி காங்கிரஸின் இந்த கொள்கைகள் பிடிக்கவில்லை என்றும் எதுவும் சொல்லவில்லை. உங்களுக்கு இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸில் வளர்ச்சி இல்லை என்று பெரும்பான்மை மாநிலங்களில் ஆளும் பாஜக வில் ஐக்கியமாகி இருக்கிறீர்கள். (6/n)
பார்ப்போம் @khushsundar அவர்களே, நீங்கள் மக்கள் சார்ந்த பிரச்சனைகளில், பெண்களுக்கு எதிராக உ.பி மாநிலத்தில் நடப்பது போன்ற கொடுமைகளுக்கு எல்லாம் நீங்கல் என்ன சொல்ல போகிறீர்கள் என்று..(7/7)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Institute of Eminence என்பது இப்போது இருப்பது போன்று ஒரு பொறியியல் பல்கலைக்கழகமாக இருக்காது. அது ஒரு பல் துறை சிறப்பு கல்லூரி/ பல்கலைக்கழகமா இருக்கும்.கலை,அறிவியல்,பொறியியல் மற்றும் மருத்துவம் என்று எந்த வகையான பாடப்பிரிவிகளையும் அந்த கல்லூரி தொடங்கி கொள்ளலாம்.#AnnaUniversity 1/n
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் முக்கிய உறுப்பு கல்லூரிகள் இதன் கீழ் சென்று விடும், Institute of Eminence ஆன பின் அந்த கல்லூரி அனைத்து முடிவுகளையும் சுயமாக எடுக்கும் அதிகராத்தை கொடுக்கிறது Institute of Eminence சட்டம். (2/n)
மாநிலத்தின் எந்த கட்டுப்பாடுகளும், இட ஒதுக்கீடும் இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்தாது. ஒன்றிய அரசு கொடுத்து உள்ளதாக சொல்லப்படும் ஒப்புதல் வெறும் வாய் மொழி உத்தரவு தான், Institute of Eminence சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை (3/n)
வரும் தேர்தல் கடவுள் நம்பிக்கை (பெரியார் எதிர்ப்பு) , கடவுள் எதிர்ப்புக்கு(பெரியார் ஆதரவு) இடையே நடக்கும் தேர்தல் என்று ஸ்ரீராம் மற்றும் வெங்கடேஷ் அவர்கள் திணிக்கிறார்கள். இதன் மூலம் பாஜக வை கடவுள் ஆதரவு கட்சியாக முன் நிறுத்துகிறார்கள். என்ன ஒரு திருட்டு தனம் ? @RKRadhakrishn
தமிழத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் என்று எது பற்றியும் பேசாமல், வட நாட்டு அரசியல் மாதிரி மதம், கடவுள் நம்பிக்கை தான் தேர்தலை தீர்மானிக்கும் என்று பேச ஆரம்பித்து இருப்பதே மிக ஆபத்தான ஆரம்பமாக இருக்கிறது.
தமிழ்நாட்டை இன்னொரு பீஹார் அல்லது உ.பி யாக ஆக்காமல் ஓய மாட்டார்கள் போல 😡😡
Slow poison மாதிரி தேர்தல் களத்தை கடவுள் எதிர்ப்பு Vs நம்பிக்கை என்று நகர்த்துகிறார்கள். திராவிட கட்சிகள் ஆண்ட வருடங்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய வில்லையே? அப்படி இருக்க திராவிட கட்சிகளை கடவுள் எதிர்ப்பு கட்சியாக உருவகப்படுத்துவதின் நோக்கம் என்ன?
இந்தியை படிக்கும் பிற தென் மாநிலங்களிலும் இந்தியை இன்னும் முழுமையாக திணிக்க முடியாமல் இருப்பதற்கு தமிழ்நாடு ஒரு காரணம். எப்படி?
இந்தி இல்லாமல் ஒரு மாநிலம் நன்றாக தான் இருக்கிறது என்று அடையாளம் காட்ட அல்லது ஒப்பீடு செய்ய இருக்கிற ஒரே மாநிலம் தமிழகம். #StopHindiImposition
இங்கேயும் இந்தி முழுவதும் வந்து விட்டால், அனைத்து மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இந்தி தெரியும் என்று சொல்லி அனைத்தையும் இந்தியில் மாற்றி விடுவார்கள். இணைப்பு மொழியாக கூட ஆங்கிலத்தை வைத்து இருக்க மாட்டார்கள். அனைத்து தேர்வுகளும் இந்தியில் மாற்றப்படும்
அனைத்து செய்திகளும் இந்தியில் வரும், சாலையில் பெயர்கள் இந்தியில் மட்டுமே இருக்கும். பிராந்திய மொழிகள் அனைத்தும் மூடு விழா நடக்கும். அப்புறம் என்ன வழக்கம் போல " ஒரே நாடு ஒரே மொழி, அது இந்தி / சமஸ்கிரதம் என்று ஆகி விடும்
1) ஒன்றாம் வகுப்பு முதல் இருக்கும் கட்டாய கல்வி விரிவுபடுத்தி மூன்று வயது முதல் கல்வி கட்டாயம் என்கிறது வரைவு கொள்கை (P 1.8), ஆனால் தற்போது வெளியிட்டு இருக்கும் இறுதி வடிவத்தில், எந்த வயதில் இருந்து கல்வி கட்டாயம் என்று குறிப்பிடப்படவில்லை? #NationalEducationPolicy2020 (1/n)
2) பள்ளிகள் தொடங்க இருக்கும் விதிகளை தளர்த்த முடிவு, தனியார் / அறக்கட்டளை பங்களிப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் (3.6).
3) வாய்ப்புகள் இருக்கும்போது, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி / மாநில மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும், முடிந்தால் 8 ஆம் வகுப்பை வரையும் (4.11) (2/n)
- இது மாநில மற்றும் சிபிஎஸ்சி பாடதிட்டத்துக்கும் பொருந்துமா? இல்லை, வெறும் மாநில பாடதிட்டத்துக்கு மட்டும் தான் பொருந்துமா?
- இந்த விதிமுறையால், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க ஏதேனும் தடை இருக்கா? (3/n)