கோவையில் திமுக வைக்கின்ற ஒரு நல்ல மாவட்ட தலைமை அலுவலகம் இல்லை...
கோவையில் திமுக விற்கு எல்லாப் பகுதிகளிலும் கிளைகள் அல்லது நம்முடைய புகழை எடுத்துக் கூறும் கொடிக்கம்பங்கள் போன்றவைகள் இல்லை...
தங்களுடைய செல்வாக்கை பலப்படுத்துவதற்காக செய்யப்படும் சுவர் விளம்பரங்களோ... போஸ்ட் விளம்பரங்களோ அதிமுகவிற்கு நிகராக அதிகமாக காணப்படுவதில்லை
சரி அது இல்லை என்று சொன்னாலும் ஒரு கடை திறப்புவிழா , கொடியேற்று விழா திருமண நிகழ்ச்சிகள் இவைபோன்ற திமுக உடைய செயல்பாடுகள் இருந்துகொண்டே இருக்கிறது என்பதனை போன்ற செயல்களும் இப்போது இருக்கும் தேர்தல் நேரத்தில் கூட காண முடிவதில்லை
மாவட்டச் செயலாளர்களில் பையா கவுண்டர் ,சேனாதிபதி, கார்த்திக் ,தென்றல் செல்வராஜ் செயல்படுகிறார்கள்....ஆனால் ராமச்சந்திரன் அவ்வளவு செயல்பாடுகள் இருப்பதாக காணமுடிவதில்லை.
இது ஒருபுறம் எடுத்துக்கொண்டால் மாவட்ட செயலாளர்கள் தான் செயல்படுகிறார்கள்.... இளைஞரணி அமைப்பாளர்களோ மற்ற அணியின் உடைய செயலாளர்கள் ,துணை செயலாளர்கள் , துணை அமைப்புகளில் உடைய நிர்வாகிகள் ,ஒன்றிய செயலாளர்கள் போன்றவர்கள் ஒரு சிலரைத்தவிர யாரும் செயல்பாடுகளில் இல்லை
நிர்வாகிகள் கூட்டம் செயல்வீரர்கள் கூட்டம் ஆலோசனை கூட்டம் செயல்திட்ட கூட்டம் போன்றவைகள் நடத்தப்படுகின்றன இல்லையா என்பது கூட ஒரு தெளிவான ஒரு குறிக்கோள் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது
மொத்தத்தில் கோவையில் SP வேலுமணி யை எதிர்த்து அரசியல் செய்வதற்கு எதிரணியில் ஒருவர் இல்லை.. இதுவே உண்மை இதை மாநிலத் தலைமை கவனித்து முடிவு எடுக்காவிடில்...
கோவை திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மீண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே வர வாய்ப்புகள் அதிகம்